புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

தமிழகம்.!


*
குழந்தைக்குப் பால்
வாங்கப் பணமில்லை..
தலைவனின் படத்திற்கு
பாலாபிஷேகம்.!
தமிழகம்.!
-

தலைவர் நட்ட மரக்கன்று.!!


*
தலைவரின் வருகைக்காக
பல சாலையோர மரங்கள்
வெட்டப்பட்டன..
தலைவர் விழாவில் நட்டார்
ஒரு மரக்கன்றை.!?
-

இராஜமரியாதை..!


*
உயிர்வாழ ராஜமரியாதை..
ஒருநாள் மட்டும்..
தலைவர் நட்ட மரக்கன்று.!
-

பூக்கள்!!


*
ஒருநாள் வாழ்வில்
சிரித்துக் கொண்டே..
உயிர் விடுபவை!
..
பூக்கள்!!
-

நிலா !


*
வானத்தில் ஒரு நிலா!
பூமிதனில் பல நிலா(க்கள்)!
ஆம்!
நீருள்ள இடத்தேயெல்லாம்..
நிலா!!
.

மழை!


*
மேகக் குடங்கள்
மோதியதால்..
தளும்பியது நீர்!
மழை!!
-

இலையுதிர்காலம்..


*
ஆற்றில் போட்டாலும்
அளந்து போடாமல்
மரங்கள் கொட்டியன இலைகளை..
இது..
..
இலையுதிர்காலம்!
-

இரயில்!
நகரும் புல்லாங்குழலுக்கு
சக்கரம் வைத்தது
யார்?
..
இரயில்!

வானவில்!
வானமகளின்
ஒரு புருவம் இங்கே!
மற்றொன்று எங்கே?
வானவில் !

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!