புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

அனுபவங்களும்..இன்ன பிறவும்! (ஆனி-16)

னக்கு ரொம்ப நாளாக ஒரு குழப்பம் மனதில் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது..
சொன்னா திட்டக் கூடாது!
அது..அது வந்து..
நம்ம தேசியக்கொடியில இருக்குற நிறங்கள் பத்தி..

எந்த கலர் மேல வரும்..எந்த நிறம் கீழ வரும்னு
(ஒண்ணு தமிழ்-ல சொல்லு-இல்லாட்டி இங்கிலிபிஷ்ல சொல்லு!-கலராம்-நிறமாம்!)

சிவப்பு மேலயா..பச்சை மேலயா அல்லது
சிவப்பு கீ........!
இந்தக் கொடுமைக்கு என் தங்கை தான் முற்றுப்புள்ளி வைச்சது...

" இங்க பாரு குழப்பிட்டே இருக்காத..!
முதல்ல சாப்பிடுரதுக்கு முன்னாடி என்ன பண்ணுவாங்க..?"
"கைகழுவுவாங்க" என்று சொல்லி தங்கையின் பல்லில் 'நறநற' பட்டேன்.

இலை போடுவாங்க. பிறகு(பச்சை - So, கீழே)
சாதம்.. போட்டு பிறகு..(வெள்ளை)
சாம்பார்..(காவி - So, மேலே)

ஊத்துவமா..அத ஞாபகம் வச்சுக்கன்னு சொன்னது பாருங்க..
இனிமே மறக்க முடியுமா..! ரொம்ப டேங்க்ஸ் தங்கச்சி!

ஆனா, நீ வைக்கிற சாம்பாரே ரசம் மாதிரி தான இருக்கும்?..-ந்னு கேட்டு கேள்வியை முடிக்கும் முன்பே தேவையில்லாமல் கொட்டுப்பட்டேன்!

இதே மாதிரி ஒரு இடத்துல எவரெஸ்டோட உயரம் கூட படிச்சேன்..

எட்டு எட்டா வச்சுப் போனா நாலே எட்டுல எவெரெஸ்ட் போயிரலாம்னு..
(அதாங்க - 8848 மீட்டர்)

இனிமே வாழ்க்கைக்கும் மறக்காது பாருங்க!

********************************

ரு அரசர் வேட்டையாடக் காட்டுக்கு சென்றவர் தளபதியோடு வரும் வழியில் வழிதவறி விட்டார். அங்கே எதிர்ப்பட்ட இளைஞரிடம்,

"நான் இந்நாட்டின் அரசன்.நாங்கள் காட்டில் வழிதவறிவிட்டோம்!
இந்த வழி அரண்மனைக்குச் செல்லுமா?"
எனத் தோரணையாகக் கேட்க.

வந்தவர் நக்கலோடு..
"இந்த வழி அரண்மனைக்குப் போகாது.
இது இங்குதான் இருக்கும். நீங்கதான் அரண்மனைக்குச் போக வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.

கேட்டவர் பேரரசர் அக்பர்.
நக்கலடித்தவர் ..
வேறு யார்??
நம்ம மகேஸ்தாஸ்.
அதாங்க பீர்பாலின் இயற்பெயர்.
(இதன் பிறகுதான் பீர்பால் அக்பரின் அரசவைக்குச் சென்றதும் இறக்கும்வரை இணைபிரியா நண்பர்களானதும்!)

*******************************

ரு சிந்தனையும்...

உயர உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவி
பருந்தாகாது..
தாழத் தாழப் பறந்தாலும்
பருந்தும்
ஊர்க்குருவியாக முடியாது..


எப்பூடி..?
சரி.விடுங்க..தூரமோ..பக்கமோ..
வானத்துக்குப் போயிட்டா
ரெண்டும் ஒரு சைசுல தான தெரியும்.
:)

**************************

12 கருத்துகள்:

Chitra 30 ஜூன், 2010 அன்று AM 11:24  

எட்டு எட்டா வச்சுப் போனா நாலே எட்டுல எவெரெஸ்ட் போயிரலாம்னு..
(அதாங்க - 8848 மீட்டர்)

இனிமே வாழ்க்கைக்கும் மறக்காது பாருங்க!


...... ஆஹா..... ஓஹோ...... கண்டிப்பாக இப்படி அடிக்கடி டிப் கொடுங்க..... நானுன் இனி மறக்க மாட்டேன்.... நன்றி.

அண்ணாமலை..!! 30 ஜூன், 2010 அன்று AM 11:53  

...... ஆஹா..... ஓஹோ......!!!

நீங்க பாராட்டுறீங்களா? - இல்ல
ஓட்டுறீங்களா.??
(சும்மா தான் கேட்டேன்!)
நன்றிங்கோவ்!

:)

ருத்ர வீணை® 30 ஜூன், 2010 அன்று PM 12:55  

என்ன ஒரு புத்தி.. உங்க தங்கச்சிய சொன்னேன்..

இதோ நீங்க கேட்ட அதாம் கவிதைகள்- 2

http://rudhraveenai.blogspot.com/2010/06/2.html

elamthenral 30 ஜூன், 2010 அன்று PM 2:51  

annamalai sir, ithu konjam over thaan sir, aana 8848 ithu super ithu pola easy nyabagam vechukka nerai sollunga..

Prasanna 30 ஜூன், 2010 அன்று PM 5:52  

எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு.. கலக்குங்க..

ஹேமா 1 ஜூலை, 2010 அன்று AM 5:05  

அண்ணாமலை என்னமா சிந்திக்கிறீங்கப்பா !

அதெல்லாம் பழமொழி.
வேற அர்த்தம் சொல்லும் அது !

அண்ணாமலை..!! 1 ஜூலை, 2010 அன்று AM 10:22  

@ ருத்ர வீணை®

ஆமாங்க..என் தங்கை என்னைவிட புத்திசாலி!
ஆதாம் வந்துட்டாரா?


@ புஷ்பா

நம்ம அரசுத் தொலைக்காட்சிகளே குழப்பத்துல கொடி லோகோ-வை தலைகீழா வச்சு செய்தி வாசித்த சம்பவங்களும் உண்டு!
இப்ப குழப்பமே இல்லை!(எனக்கு)
சாப்பாட்டு விசயமாச்சே!
:)

அண்ணாமலை..!! 1 ஜூலை, 2010 அன்று AM 10:30  

@ பிரசன்னா

நீங்க சொன்னா சரிதாங்க நண்பரே!
ரொம்பவே நன்றிகள்!


@ ஹேமா,

(நான் சிந்திச்சாலும்!!)
குமுதம்னு நினைக்கிறேன்! அதுல ஒரு
5 வருசத்துக்கு முன்னாடி படிச்சதுங்க!
நமக்கு உபயோகமாகவும்,எளிதாகவும் இருக்கே!

சரி! அது என்னங்க வேற அர்த்தம்??
அதையும் முடிஞ்சா சொல்லிருங்களேன்!

தூயவனின் அடிமை 3 ஜூலை, 2010 அன்று PM 4:02  

எட்டு எட்டா வச்சுப் போனா நாலே எட்டுல எவெரெஸ்ட் போயிரலாம்னு..
(அதாங்க - 8848 மீட்டர்)

நன்றாக உள்ளது. சகோதரியின் விளக்கமும் அருமை.

அண்ணாமலை..!! 4 ஜூலை, 2010 அன்று AM 11:17  

ரொம்பவே நன்றிகள் நண்பரே!

வைகறை நிலா 5 ஜூலை, 2010 அன்று PM 3:35  

அற்புதம்.. இதுவரை கேட்டிராத கதை..
முக்கியமாக ஆசிரியர்களுக்கு உதவக்கூடியது.
பகிர்தலுக்கு நன்றி..

அண்ணாமலை..!! 6 ஜூலை, 2010 அன்று AM 10:24  

ஆமாமா..!
மாணவர்களுக்கு இது எளிதாக இருக்கும்னு நினைக்கிறேன்!
நன்றிகள்!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!