புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

சில (க)விதைகள் (2)

*
கொள்கைகள்!

கைராட்டைக்குப்
போர்த்த
கம்பெனிக் கம்பளி!

********************


ப்போதெல்லாம்
பூங்காக்களிலும்..
கடற்கரையிலும்
பண் பாடுகிறது!
நமது பண்பாடு!

********************

லைமகளை
பேரம் பேசினர்!
கல்விக்கட்டணம்
எனும் பெயரில்!

********************

கை செப்பனிடுகிறான்..
கிழிந்த உடையுடன்..
பொற்கொல்லன்!

********************

நீரின்றி அமையாது உலகு..!
வள்ளுவன் ஞானி!
தெருக்கள் தோறும் கடைகள்!

********************

அவ்ளோதாங்க...
இதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்லீங்க!

15 கருத்துகள்:

ருத்ர வீணை® 21 ஜூன், 2010 அன்று PM 9:19  

நீங்க கூட ஞானி.. ஆமாம் எந்த தண்ணின்னு சொல்லலியே ???? ;-)

ஹேமா 21 ஜூன், 2010 அன்று PM 10:38  

அண்ணாமலை...சொன்ன வரைக்குமே நிறைவா...நிறைய இருக்கு.
யோசிக்க வைக்குது.

Chitra 21 ஜூன், 2010 அன்று PM 10:59  

நீரின்றி அமையாது உலகு..!
வள்ளுவன் ஞானி!
தெருக்கள் தோறும் கடைகள்!


..... correcttu!!!!

அன்புடன் நான் 21 ஜூன், 2010 அன்று PM 11:45  

கலைமகளை
பேரம் பேசினர்!
கல்விக்கட்டணம்
எனும் பெயரில்!//

நச்!

அன்புடன் நான் 21 ஜூன், 2010 அன்று PM 11:46  

எல்லா கவிதையும் மிக கலக்கல்.

வாழ்த்துக்கள்.

அண்ணாமலை..!! 22 ஜூன், 2010 அன்று AM 10:42  

@ ருத்ர வீணை®

ஆகா!
உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதாக்கும்??
:)


@ ஹேமா

நிறைவா இருந்தா ரொம்ப மகிழ்ச்சிங்க!

அண்ணாமலை..!! 22 ஜூன், 2010 அன்று AM 10:50  

@ Chitra

கரீட்டு- இல்ல..
தப்பே!!!
:)


@ சி. கருணாகரசு

தோழர்!
ரொம்ப நன்றிங்க!

கமலேஷ் 22 ஜூன், 2010 அன்று AM 11:23  

டாஸ் மார்க் கான்செப்ட் ரொம்ப நல்லா இருக்குங்க....
///

இப்போதெல்லாம்
பூங்காக்களிலும்..
கடற்கரையிலும்
பண் பாடுகிறது!
நமது பண்பாடு!///

இதுவும் ரொம்ப நல்லா இருக்குங்க...

vasan 22 ஜூன், 2010 அன்று PM 4:01  

//கைராட்டைக்குப்
போர்த்த
கம்பெனிக் கம்பளி//
இத்தாலிய‌ இற‌க்கும‌தி க‌ம்ப‌ளி

Ananthi (அன்புடன் ஆனந்தி) 22 ஜூன், 2010 அன்று PM 8:04  

//இப்போதெல்லாம்
பூங்காக்களிலும்..
கடற்கரையிலும்
பண் பாடுகிறது!
நமது பண்பாடு! //

ரொம்ப சூப்பரா இருக்கு :-))

//நகை செப்பனிடுகிறான்..
கிழிந்த உடையுடன்..
பொற்கொல்லன்! //

இதுவும் ரொம்ப நல்லா இருக்கு...
ஆனா.. வருத்தமா இருக்கு.. சரியா சொன்னிங்க..!!

அண்ணாமலை..!! 23 ஜூன், 2010 அன்று AM 10:25  

@ கமலேஷ்

ரொம்ப நன்றிங்க!


@ vasan

//இத்தாலிய‌ இற‌க்கும‌தி க‌ம்ப‌ளி //
ஹஹ்ஹா..


@ Ananthi

ரொம்ப நன்றிங்க!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) 23 ஜூன், 2010 அன்று AM 11:25  

எல்லாமே மிகவும் நிதர்சனமா அருமையா இருக்கு...

1. இந்தியாவின் அவல நிலைமை...
2. நினைக்க புண்படுகின்றது மனம்...
3. காசே தான் கடவுளடா...
4. உண்மையான முரண்பாடு...
5. முக்காலத்தை அறிந்தவன்...

படிக்கின்ற சமயம் மனதில் தோன்றியது...

அண்ணாமலை..!! 23 ஜூன், 2010 அன்று PM 7:41  

உங்க விமர்சனம் ரொம்பவே
ரசிக்கும்படியா இருக்கு வாசன்!
நன்றிகள்!

வைகறை நிலா 28 ஜூன், 2010 அன்று AM 8:23  

கவிதைகள் அனைத்தும் அற்புதம்..
ஒவ்வொன்றும் யதார்த்தமான இன்றைய சமூக நிலையை சொல்கிறது..

அண்ணாமலை..!! 28 ஜூன், 2010 அன்று AM 11:19  

ரொம்ப நன்றிங்க நண்பரே!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!