புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

சின்னச் சின்ன சிந்தனைகள்! ( 4 )



௧, குருதி!

முள்பட்டவுடன்
முளைக்கிறது
ரோஜா.!

*************

௨, ச்சே..!!

காலை மிதித்தவனிடம்
பாய்ந்தேன் சண்டைக்கு...
கண்ணீரோடு காண்பித்தான்
கட்டைக்கால்.!

*************

௩, ரோசம்!

வீட்டைப் பறித்தவனை
விட்டு வைப்பதில்லை..
தேனீ..(கூட)..

*************

௪, மரியாதை..

விடமற்ற பாம்புக்கும்
நகமற்ற புலிக்கும்
இல்லை..

*************

௫, அப்புறம் வேற என்ன?
நீங்கதான் ஏதாவது சொல்லனும்!
வீட்டுல எல்லாரும் சௌக்கியமா?
:)

போன தலைமுறை வரை அனைவரும் உபயோகம் செய்த தமிழ் எண்களை கூகிளில் எங்கெங்கோ தேடிப்பார்த்துவிட்டு கடைசியில் இங்கிருந்துதான் சுட்டேன்!மேலும்,சுடுவதற்கு->
http://thangaththamil.blogspot.com/2010/03/blog-post_24.html

11 கருத்துகள்:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) 4 ஜூன், 2010 அன்று AM 3:21  

அனைத்தும் அருமை...

//முள்பட்டவுடன்
முளைக்கிறது
ரோஜா.!//

மிகவும் அருமை...

vasan 4 ஜூன், 2010 அன்று PM 4:06  

"அண்ணாம‌லை"
'எண்ண‌'ம‌லை தான்

அண்ணாமலை..!! 4 ஜூன், 2010 அன்று PM 8:21  

மதிப்பிற்குரிய இரண்டு "வாசன்"களும் நமது வலைப்பூவில் சிறிது நேரம் வாசம் செய்ததற்கு ரொம்பவே நன்றிகள்!

அப்பாதுரை 5 ஜூன், 2010 அன்று PM 5:38  

சிந்திக்க வைக்கும் கடைசி வரிகள்.

தமிழ் எண் நடைமுறையில் புழங்காததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? கேள்வியை மாற்றிக் கேட்கிறேன். தமிழ், சீன, ரோம, கிரேக்க எண் வடிவங்கள் தொன்மையாக இருப்பினும் அரேபிய எண் வடிவம் நடைமுறையில் புழங்கக் காரணம் என்னவாக இருக்கும்? தமிழ் எண் நகமற்ற புலியா?

அண்ணாமலை..!! 6 ஜூன், 2010 அன்று AM 11:28  

மேலை நாடுகளுக்கும், கீழை நாடுகளுக்கும் சரியாக இடை அமைந்துவிட்ட மேற்கு அராபியப் பகுதியில் உருவாகிய எண்ணுருக்களே(1,2,3..) நன்கு ஏற்றம் பெற்று உலகமுழுதும் பின்னாளில் கடைபரப்பப்பட்டது.

தமிழ் பேசவே தயங்கும் நமக்குத் தமிழ்எண்ணுரு இன்னும் சிரமமான விடயம்தான்.பள்ளிகளில் இருந்தே ஆரம்பித்தால் உண்டு.

தமிழ் நகமற்ற புலியல்ல.
ஆனால், நகத்தைப் பிடுங்கிக்கொண்டிருப்பதில் தமிழர்களுக்கு ரொம்பவே பங்குண்டு.

Ananthi (அன்புடன் ஆனந்தி) 7 ஜூன், 2010 அன்று AM 6:06  

//ச்சே..!!

காலை மிதித்தவனிடம்
பாய்ந்தேன் சண்டைக்கு...
கண்ணீரோடு காண்பித்தான்
கட்டைக்கால்.!
//

அடடா.. அருமை அருமை.. :)
தமிழ் எண்களும் அழகு..

உங்க கேள்விக்கு பதில்..
ஆமாங்க.. வீட்ல எல்லாரும் நலம்.. அங்க எப்படி???

தமிழ் 7 ஜூன், 2010 அன்று PM 12:19  

அருமை

வைகறை நிலா 8 ஜூன், 2010 அன்று AM 6:39  

அத்தணை ஹைகூ கவிதைகளும் அற்புதம்..

அண்ணாமலை..!! 8 ஜூன், 2010 அன்று AM 10:50  

@ Ananthi

கடவுள் புண்ணியத்துல அங்க மாதிரியே
இங்கயும் எல்லாரும் நலமுங்க!


@ திகழ்

ரொம்ப நன்றிங்க திகழ்!


@ வைகறை நிலா

ரொம்ப நன்றிங்க வைகறை நிலா!
(நல்ல பேரு!)

ரிஷபன் 8 ஜூன், 2010 அன்று PM 5:59  

வீட்டைப் பறித்தவனை
விட்டு வைப்பதில்லை..
தேனீ..(கூட)..
கொட்டியிருக்கும் கவிதைத் தேன் அற்புதம்..

அண்ணாமலை..!! 8 ஜூன், 2010 அன்று PM 7:10  

ரொம்ப மகிழ்ச்சிங்க ரிஷபன்!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!