புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

கொஞ்ச(ம்) நீ என்னருகில் வாயேன்!!!!



சாம்பாருடன் கொஞ்சம் சோறு
சடுதியாட நிறை சேறு!
பாம்பாட்டி போலொரு ஆட்டம்!
பம்பரம் போல்சுழல் ஓட்டம்!
வீம்பாகத் தலைசாய்ப்பு, கோபம்
விளையாட்டாய்க் கொஞ்சலொடு சிணுங்கல்
தாம்பாலத் தட்டினிலே இனிப்பு
தகிக்காத வெயிலினிலே களிப்பு!

கள்ளமில்லா சிறார் வேணும்!
காலத்துக்கும் விளையாட வேணும்!
பள்ளமில்லா வாழ்க்கையும் வேணும்!
பயமின்றிப் பாடியாட வேணும்!
உள்ளத்தில் உருவாகும் நினைப்பு!
உயர்வாகி நலம்பெறவே வேணும்!
பள்ளிக்கு மீண்டும்நான் போயே
பாடமிரண்டு படித்திடவும் வேணும்!

குருவிபோல் வானத்தின் மீதே
குழந்தைநான் பறந்திடவும் வேணும்!
தெருவிலே நண்பனொடு அலைந்து
தேடிபழம் அடித்திடவும் வேணும்!
நல்லபிள்ளை யாயிருப்பேன் - அம்மா!
நலமாகச் சொல்கேட்பேன் - அம்மா!
கொஞ்சம்நீ என்னருகில் வாயேன்-மீண்டும்
குழந்தையாய் மாற்றிவிடு தாயே!

23 கருத்துகள்:

Chitra 8 ஜூன், 2010 அன்று AM 11:11  

அருமையாக எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்!

அண்ணாமலை..!! 8 ஜூன், 2010 அன்று AM 11:18  

நீங்க சொன்னா சரிதான்!
ரொம்ப நன்றிங்கோவ்!
:)

தோழி 8 ஜூன், 2010 அன்று PM 12:27  

நல்லா எழுதீருக்கீங்க... அருமை...

அண்ணாமலை..!! 8 ஜூன், 2010 அன்று PM 1:19  

ரொம்ப நன்றிங்க தோழி!

Prasanna 8 ஜூன், 2010 அன்று PM 4:59  

ஆஹா..அருமை :)

Prasanna 8 ஜூன், 2010 அன்று PM 5:00  

திரட்டிகளில் இணைக்கவில்லையா..

ரிஷபன் 8 ஜூன், 2010 அன்று PM 5:57  

கவிதை வாசிக்கும்போதே இனிக்கிறது.. அழகு தமிழால்..

அண்ணாமலை..!! 8 ஜூன், 2010 அன்று PM 7:08  

@பிரசன்னா

நன்றிங்க பிரசன்னா!
இனிமேல் தான் இணைக்க வேண்டும்!


@ரிஷபன்

மகிழ்ச்சிங்க ரிஷபன்!

ஹேமா 9 ஜூன், 2010 அன்று AM 4:13  

அத்தனை ஏக்கங்களையும் கொட்டி
வைத்திருக்கிறது கவிதை !

அண்ணாமலை..!! 10 ஜூன், 2010 அன்று AM 10:37  

அது ஒரு நிலாக்காலமுங்க!

அன்புடன் நான் 11 ஜூன், 2010 அன்று PM 7:45  

படமும்.... படைப்பும் அசத்தல்!

அண்ணாமலை..!! 12 ஜூன், 2010 அன்று AM 11:32  

ரொம்ப நன்றிங்க நண்பரே!

Ananthi (அன்புடன் ஆனந்தி) 12 ஜூன், 2010 அன்று PM 10:42  

அருமையா இருக்கு.. :)

மீண்டும் குழந்தையாய் மாறி பள்ளிக்கு செல்ல ஆசை தான்.. :D :D

அண்ணாமலை..!! 13 ஜூன், 2010 அன்று AM 11:02  

ஆச..தோச..! :)

ரொம்ப நன்றிங்க!

கே. பி. ஜனா... 15 ஜூன், 2010 அன்று AM 10:20  

இயல்பான, மனம் வருடும் கவிதை!

vasan 15 ஜூன், 2010 அன்று PM 3:31  

//கொஞ்சம்நீ என்னருகில் வாயேன்-மீண்டும்
குழந்தையாய் மாற்றிவிடு தாயே! //

SUPER TOUCH

அண்ணாமலை..!! 15 ஜூன், 2010 அன்று PM 8:54  

@ K.B.JANARTHANAN

ரொம்பவும் நன்றிங்க!

@ vasan

உங்களுக்குப் புடிச்சிருந்தா ஓ.கே தான்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) 17 ஜூன், 2010 அன்று AM 3:28  

கெஞ்சலாய்... அழகாக...

அண்ணாமலை..!! 17 ஜூன், 2010 அன்று AM 10:50  

@ தஞ்சை.வாசன்

அன்பு வாசன்,
இனி அதெல்லாம் நடக்காதுன்னு தெரிஞ்சு போச்சு!
எல்லாம் ஒரு ஏக்கப் பயபுள்ள தான்!

Unknown 18 ஜூன், 2010 அன்று PM 5:26  

அழகிய நடையில் அருமைக் கவிதை அண்ணா! அன்றையகாலத்தினை நினைத்து ஏங்க வைத்த சுவைமிகு கவிதைக்கு நன்றிகள்.

அண்ணாமலை..!! 19 ஜூன், 2010 அன்று AM 10:38  

மிக்க நன்றிகள் நண்பரே!

வைகறை நிலா 28 ஜூன், 2010 அன்று PM 1:11  

//வீம்பாகத் தலைசாய்ப்பு, கோபம்
விளையாட்டாய்க் கொஞ்சலொடு சிணுங்கல்
தாம்பாலத் தட்டினிலே இனிப்பு
தகிக்காத வெயிலினிலே களிப்பு!//
அழகான வரிகள்..
மனதைத் தொடும் இனிய கவிதை..

அவரவர் வாழ்க்கையில்
ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்..
அந்த நினைவுகள் நெஞ்சினில்
திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்..
அது ஒரு அழகிய நிலாக்காலம்.. உண்மை..

அண்ணாமலை..!! 5 ஜூலை, 2010 அன்று AM 10:52  

ஆமாங்க..திரும்பக்கிடைக்காத காலங்கள்!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!