புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

சில (க)விதைகள்!




1, வறுமையின் நிறம்!

கூத்துப்பட்டறை
நடிகர்கள்
பூசுகிறார்கள்
அரிதாரம்!
முகத்துக்கு
மட்டுமல்ல!

&&&&&&&&&&&&&&&&&&&&&&

பூக்கும்
மத்தாப்பில்
ஏனோ! தெரிகிறது!
சிவகாசிச் சிறுமியின்
முகம்!

&&&&&&&&&&&&&&&&&&&&&&

2, உத்தமம்!

'ப்ச்'
'சுவாமி சிலையை
இன்று
குளிப்பாட்டியிருக்க வேண்டாம்!'
ஆதங்கப்படுகிறான்!
..
கள்வன்!

&&&&&&&&&&&&&&&&&&&&&&

ருக்குள்
புகுந்தான் திருடன்!
திருடனை
நையப்புடைத்தனர்
திருடர்கள்!

&&&&&&&&&&&&&&&&&&&&&&


3, நில்..! கவனி..!

நீ
பணமிழந்த போதும்
பின்தொடர்கின்ற நிழல்.
இருட்டு வழிகளில்
உன்னுடன் பயணிப்பதில்லை!

&&&&&&&&&&&&&&&

ப்புறம் பார்த்தீங்கன்னா...

இந்தக் கவிதைகள் -ங்கிற ஒரு வார்த்தைல இருந்து எத்தனை வார்த்தைகள் எடுக்கலாம் பாருங்க.

கவிதைகள்
விதைகள்
விதை
தை..
கள்..
கவி..

தமிழ் ...தமிழ்தாங்க!

11 கருத்துகள்:

priyamudanprabu 16 ஜூன், 2010 அன்று PM 9:46  

ம்ம் நல்லாயிருக்குங்க....

Chitra 16 ஜூன், 2010 அன்று PM 10:02  

கவிதைகள்
விதைகள்
விதை
தை..
கள்..
கவி..

தமிழ் ...தமிழ்தாங்க!

...... அழகு! அமுதம்!

ஹேமா 17 ஜூன், 2010 அன்று AM 2:29  

முன் இரண்டு கவிதைகளும் மனதைத் தொட்டது அண்ணாமலை.

ஒரு சொல்லுக்குள் தமிழின் தேடல் அருமை."க" என்பதற்கும் கருத்து இருக்கிறது."க"வையும் சேர்த்துவிடுங்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) 17 ஜூன், 2010 அன்று AM 3:26  

எல்லாம் அருமை...

கதை-யை விட்டுவிட்டீர்களே....

அண்ணாமலை..!! 17 ஜூன், 2010 அன்று AM 10:33  

@ பிரியமுடன் பிரபு

வாங்க!ரொம்ப நன்றிங்க!


@ Chitra

சரியாச் சொன்னீங்க!
அமுதே.. தமிழே.. அழகிய மொழியே..
எனதுயிரே-வாச்சே! நன்றிங்க!

அண்ணாமலை..!! 17 ஜூன், 2010 அன்று AM 10:46  

@ ஹேமா,

க-ங்கிறது ' பசு ' அல்லது 'இறைவன் '?

எனக்கு இந்த சந்தேகம் வந்ததுனாலதாங்க
நான் அதை விட்டுட்டேன்!
உங்களுக்கு ரொம்ப நன்றிங்க அதைச் சொன்னதுக்கு!


@ தஞ்சை.வாசன்,

ஆமால்ல..(ஆம்மாவா? இல்லையா?)
அதை எப்புடி விட்டேன்!
சரியாய்ச் சொன்னீங்க வாசன்!

இன்னும் கூட நிறைய வார்த்தைகள் இருக்கலாம்!

elamthenral 17 ஜூன், 2010 அன்று PM 3:16  

மிகவும் அருமையான கவிதைகள்... வாழ்த்துக்கள்..

அன்புடன் நான் 17 ஜூன், 2010 அன்று PM 4:59  

பூக்கும்
மத்தாப்பில்
ஏனோ! தெரிகிறது!
சிவகாசிச் சிறுமியின்
முகம்!//

அத்தனையும் அருமை.... இதை மிக ரசித்தேன்.

அண்ணாமலை..!! 17 ஜூன், 2010 அன்று PM 6:58  

@ புஷ்பா

தங்களின் வாழ்த்திற்கு!
ரொம்ப நன்றிங்க!


@ சி. கருணாகரசு

தோழர்!
தங்களின் ரசிப்பிற்கு நன்றி!

Unknown 18 ஜூன், 2010 அன்று PM 5:14  

சிறிய கவிதைகள் அத்தனையும் அருமை அண்ணா தொடருங்கள்.

அண்ணாமலை..!! 19 ஜூன், 2010 அன்று AM 10:24  

மிக்க நன்றிகள் நண்பரே!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!