புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

கைப்புள்ளயோட ஒரு நாள்!! (கொஞ்சம் ரவுசு!)




-
ரு கைப்புள்ள கத எழுதலாம்னு தோணுச்சு!
எல்லாரும் மனசுல கைப்புள்ளைய நினைச்சு வேண்டிக்குங்க!
ஆரம்பிக்கிறேன்!..ம்மேஏஏ....!!(ஆடு போல கத்தனும்..ஓ.கே!)

இடம் - மதுரையின் முக்கிய அல்லது முக்காத வீதி!
சங்கம் - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
தலைவர் - கைப்புள்ள

டீ வட்டையில் கொண்டு செல்லும் பையனை அழைத்து
கைப்புள்ள :
டேய் இங்க வாடா!
பையன் : என்னண்ணே ? என்னாச்சு?

சரி! அங்க போகுதே ஒரு பொண்ணு .அது யாருடா??

அத எதுக்குண்ணே , நீ கேக்குற?

சும்மாத்தேன் சொல்லு.

அப்படியெல்லாம் சொல்ல முடியாது! என்னான்னு சொல்லு!

எல்லாம் ஒரு காரணமாத்தான் !நான் அத அப்புறஞ்சொல்றேன்!

நானும் அப்புறமாவே சொல்லுறேன்!

டேய்! சொல்லுடா!

யோவ்!போய்யா!எனக்கு வேலை இருக்கு! விடுய்யா!

என்னடா பொசுக்குன்னு சொல்லிட்ட. நான் அண்ணண்டா!

அண்ணணுமில்ல..வெண்..........! எனக்கு யாரையும் தெரியாது!

சரி விடுடா! நானே போய்க் கேட்டுக்குறேன்! போடா!
சின்னப்பய மொதக்கொண்டு இந்த ஊருல நம்மல மதிக்கமாட்டேங்குறாய்ங்க!

யோவ்..போய்யா..என்று தொடங்கி அந்தப்பையன் மேலும் அழகுத்தமிழில் வசவிவிட்டுச் செல்கிறான்!

ஒரு முடிவெடுத்து நேரே அந்தப் பெண்ணிடம் செல்கிறார் கைப்புள்ள.

ஏங்க..! உங்களத்தாங்க!

படபடக்கும் பட்டாம்பூச்சி இமைகளுடன் திரும்பிப்பார்த்து,
நெஞ்சு படபடக்க வேகமாக நகரத் தொடங்குகிறாள் அந்தப்பெண்.

ஏங்க ..சொல்லுங்க..உங்க பேரு என்னங்க?
(ரொமாண்டிக் லுக்கில் கைப்புள்ள கேட்க.. !)

'தள்ளிப்போடா நாயே..செருப்புப் பிஞ்சிரும்.. '
அந்த மஞ்சள் தாவணி அழுதுகொண்டே ஓட..

ஏய்! இந்தா..பேரு கேட்டா தப்பா??
சொல்லமாட்டியா நீ! நாங்கள்ளாம் யாரு தெரியுமில்ல..?
என்றபடி பக்கத்தில் வந்த பைக்கில் கைபட்டு நிறுத்திவிட..
-


******************

டிமாடு! காலையிலேயே இப்படி ஏன் சாலையில வந்து விழுகுற!

என்னாப்பா நீயி! ரைமிங்கா பேசுற..! வெள்ளைவேட்டி சட்டை போட்டு பெரிசா மீசை வச்சுட்டா போதும்!
வந்துருவாய்ங்க பஞ்சாயத்துக்கு..!
-இது கைப்புள்ள.

தம்பி! மரியாதையாப் பேசு! நாந்தான் இங்க கவுன்சிலரு! தலையெடுக்கிறதுக்குள்ள போயிடு!
(வண்டியின் சீட்டுக்கு அடியில் தெரிந்த அரிவாளின் நுனி வயிற்றைக் கலக்க!)

அண்ணே! நீங்க போங்கண்ணே! ஒருபய ஒங்கள எதுவும் பண்ணிருவானா?? நான் பார்த்துக்குறேன்!
டேய்! அண்ணனுக்கு வழிய விடுறா!
என்றபடி ஆளில்லாத சாலையில் ட்ராஃபிக் சரிசெய்து கொடுக்கிறார்!

அரிவாள் பார்ட்டி மீசையை நீவிக் கொண்டு விலக!
(கைப்புள்ள மெதுவாக- எம்புட்டு சைலண்டா திரியுறாய்ங்க!! :(((

*********************



தே நேரத்தில் சற்று தொலைவில்,
ஒரு கும்பல் கைகளில் உருட்டுக்கட்டைகளுடன் ஜாக்கிங் வருகிறது!
டேய்! யாருடா ..அந்தப்புள்ளகிட்ட பேரு கேட்டது?

அந்தா ஆரஞ்சு கலர் சட்டையும், பச்சைக் கலர் வேட்டியும் போட்டுருக்குதே அந்த அண்ணந்தேன்!
டீக்கடைப்பையன் தெளிவாகக் கைகாண்பித்துத் தொலைக்க!
அடப்பாவிகளா! பேங்க் லோனு தர்றேன்னு போன வாரம்
மேனேஜர் வந்து நின்னப்ப ஒரு பயபுள்ள வாயத் தொறக்கலையே!

(நொடியில் கைப்புள்ளையை சூழ்ந்து வலம் வருகிறார்கள்!)
டேய்! நீதான் அந்தப்புள்ளயக் கையப் புடிச்சு இழுத்தியா?

(பேருதானடா கேட்டேன்! கையப் புடிச்சு இழுத்தியாங்குறான்?)
வாண்டடா ரௌடி-ங்குறான் . ஏன் வர்ற பேர விடனும்!)
ஏன் வேற யாருன்னு நினைச்ச? ஆமா! நாந்தான் கையப் புடிச்சு இழுத்தேன்!
அதுக்கு என்னா இப்ப?
போன பயபுள்ள மயிலு மாதிரி போச்சு!
நீங்க என்னடா எல்லாரும் மாடுமாதிரி வந்திருக்கீங்க?

கையப் புடிச்சு இழுத்துப்புட்டு என்னா திமுரா பேசுறாண்டா மாப்ள?

சரி! சரி! சட்டுபுட்டுன்னு வந்த வேலைய முடிச்சுபுட்டுப்போ!!

அனைவருமாகச் சேர்ந்து கொண்டு பேசவே விடாமல் கைப்புள்ளயை வெதுப்புகிறார்கள்! ம்மேஏஏ....!!

(விருந்து வைபவம் முடிந்த பின்)
போங்கடா! அதுக்கப்புறமும் என்ன தேடுறீங்க?
எல்லாம் ஊமைக்காயம்! ஆளில்லாதப்ப தான் பேசும்! போ.போ..ம்..ம்!!..


ஒனக்கு இருக்குடி!

அதான் வச்சு இறுக்கிட்டியே .. இதுக்கு மேலயுமா?? போ...!!

******************

(வர்கள் அங்கிருந்து அகல)
சட்டையைக் கழற்றி இடுப்பில் சுற்றிக் கொண்டே!!
கையை நெற்றியில் சல்யூட் போல் வைத்து , கண்களை இடுக்கி - தூரத்தில் பார்க்கிறார் கைப்புள்ள..
அந்த நேரம்,
மீண்டும் டீ கொண்டு வருகிறான் பையன் அதே வழியில்..

ஏண்டா! அந்தாத் தெரியுதே..அந்தக் கருப்புக்குயிலு பேரு என்னடா??

யோவ்..அந்தப்புள்ளய எதுக்குய்யா நீ கேட்குற?

ஏய்..அண்ணிய அப்பிடியெல்லாம் பேசக்கூடாது..ஓ.கே!

யோவ்..நீ திருந்தவே மாட்டியா??

ஏண்டா! நாந்திருந்துனா அப்புற மதுரைய யாருடா பாத்துக்குவா??
போ..போ..நானே போயிக் கேட்டுக்குறேன்!!


கிளம்பும்போதே முனகலாக.....
(போன வாரம் மேலத்தெருவுல கூட இந்த அளவுக்கு இல்லையே!
ஆயுதம் யூஸ் பண்ணாதவரைக்கும் சரிதான்!
நம்மமேல ஆயுதம் பட்டா அதுக்குதான சேதாரம்!
அதானே!!!!) ம்மேஏஏ....!!

10 கருத்துகள்:

கமலேஷ் 20 ஜூன், 2010 அன்று PM 6:50  

கைபுள்ளைய வச்சி கலக்கி இருக்கீங்க நண்பரே.. வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

அண்ணாமலை..!! 20 ஜூன், 2010 அன்று PM 7:06  

வாங்க நண்பரே!
எம்புட்டு அடி விழுந்தாலும்
சத்தம் வெளில வரல பாருங்க!
ஆங்.!
:)

Starjan (ஸ்டார்ஜன்) 20 ஜூன், 2010 அன்று PM 8:45  

கைப்புள்ள நல்லாருக்காரா.. ஒரு கலக்குகலக்கிட்டாரு..

அண்ணாமலை..!! 20 ஜூன், 2010 அன்று PM 9:09  

@ Starjan ( ஸ்டார்ஜன் )

வாங்க ஸ்டார்ஜன்!
எல்லாம் ஊம அடி!
அதான் ஒத்தடம் குடுத்துக்கிட்டு
இருக்கிறோம்!

:)

ஹேமா 21 ஜூன், 2010 அன்று AM 12:57  

எப்புடியெல்லாம் பதிவுகளில கூட என்னை வச்சு கலாய்க்கிறாங்களேன்னு கைப்புள்ள அழுவுது அண்ணாமலை !

அண்ணாமலை..!! 21 ஜூன், 2010 அன்று AM 11:26  

@ ஹேமா,

கைப்புள்ள ரௌடி-ந்னு பட்டம் கிடைச்சா சந்தோசப்படுவாரு!
:)

அன்புடன் நான் 21 ஜூன், 2010 அன்று PM 4:21  

..... நல்லாயிருக்குங்க.

அன்புடன் நான் 21 ஜூன், 2010 அன்று PM 4:21  

கைப்புள்ள... கலக்கல்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) 22 ஜூன், 2010 அன்று PM 9:15  

ஹா ஹா ஹா.. :D :D :D
சிரிச்சு முடியல...
சூப்பர் சூப்பர்...!!! :-))))

அண்ணாமலை..!! 23 ஜூன், 2010 அன்று AM 10:28  

@ சி. கருணாகரசு

ரொம்ப நன்றிங்க நண்பரே!
:)

@ Ananthi,

நல்லாச் சிரிங்க!
(கைப்புள்ள அடிவாங்குறதுல என்னா.. சந்தோஷம்!)
:)

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!