புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

கவியரசரும்..சில கவிதைகளும்!

*
வியரசர் கண்ணதாசன் ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்..
ஏதோ யோசித்தபடியே கீழே பார்த்தவரின் கண்களில் தட்டுப்பட்டது ஒரு ரயில் டிக்கெட்.

அதனைக் குனிந்து எடுத்தவர்,
யார் தவறவிட்டது.. தெரியவில்லையே? டி.டி.ஆர் வந்தால் என்ன செய்வார் பாவம்..
(பாவம் டி.டி.ஆர் இல்லங்க..டிக்கெட்டைத் தவற விட்டவர்!)என்று கம்பார்ட்மென்ட் முழுதும் இருந்த ஆட்களிடம் ஒவ்வொருவரிடமும் விசாரித்திருக்கிறார் 'டிக்கெட் யாருடையதென்று?'.

சிறிது நேரத்தில் அங்கு டி.டி.ஆர் வர..

ஒவ்வொருவராய் டிக்கெட் எடுத்துக் கொடுக்க..
கண்ணதாசன் முறை வந்ததும் டிக்கெட்டைத் தேடியிருக்கிறார்.
எங்கும் காணவில்லை.

தெரிந்து விட்டது..
கீழே கிடந்து எடுத்தாரே ..
அது அவருடைய டிக்கெட் தான் என்று!!

நல்ல வேளையாக , யாரும் வந்து கேட்டால் கொடுக்கலாம் என்று
அதை பத்திரமாக வைத்திருந்ததால் டி.டி.ஆரிடம் காட்டி
பிழைத்திருக்கிறார்.

கண்ணதாசன் சொல்வார்(சரி விடுங்க..சொல்லி இருக்கிறார்!)
" நான் தூக்கத்தினாலும், மறதியினாலும் இந்த உலகில் இழந்தது நிறைய" என்று.

(கவியரசர் மட்டுமா என்ன?இதுபற்றி ஏற்கனவே தெரிந்தவர்கள் மறுபடியும் கண்ணதாசனைப் பற்றிப் படித்ததில் மகிழ்ந்து கொள்ளுங்கள்!(எப்படியெல்லாம் தப்பிக்க வேண்டியிருக்கிறது!)
இது போல் இன்னுமொரு அல்லது பல நிகழ்வு(களு)ம் கூட கவியரசரின் வாழ்வில் உண்டு..
அது பிறிதொரு சந்திப்பில்!

****************************************************
சி கவிதைகளும்!

காக்கைகள்
குருவியென
வேடமணிந்தால்
குருவிகள்
பருந்தென
மாறுதல் நலமே!

***************

முள்ளை எடுக்க முள்!
வைரம் அறுக்க வைரம்!
என..
குற்றம் மறைக்க குற்றம்
புரியும்
தேசம் எங்கள்
தேசம்!

(புரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்!)

***************

வற்றல்!

வலியவன்
வீட்டு மாடியிலும்
வறியவன்
வயிற்றிலும்,
வாழ்க்கையிலும்!

***************

கத்தியெடுத்தவனுக்குக்
கத்தியில்
சாவு!
எப்படி வரும்?
தொண்டையில்
புண்ணல்லவா
வர வேண்டும்!


இதைக் கவிதையில் சேர்த்த என்னை யாரும்
சத்தமாகத்(கத்தித்) திட்ட வேண்டாம் :)

*************************************************

13 கருத்துகள்:

ரிஷபன் 4 ஜூலை, 2010 அன்று PM 5:49  

கண்ணதாசனைப் பற்றி மேலும் படிக்க ஆர்வம்.

தோழி 4 ஜூலை, 2010 அன்று PM 7:19  

கண்ணதாசனைப் பற்றி படித்தாலே ஒரு ஆனந்தம் தொடர்ந்து சொல்லுங்க...

தோழி 4 ஜூலை, 2010 அன்று PM 7:33  

உண்மையிலேயே கவியரசர் கவியரசர் தான்... அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை...தொடர்ந்து எழுதுங்க...

அண்ணாமலை..!! 5 ஜூலை, 2010 அன்று AM 10:24  

@ ரிஷபன்

ஆம் நண்பரே!! அவரிடம் படிப்பதற்கு நமக்குப் படிப்பினைகள் நிறையவே இருக்கின்றன!
ரொம்பவே நன்றிகள்!


@ dharshini

இல்லையா பின்னே!
கண்ணதாசன்..கவிதை நேசனாச்சே!
தொடர்ந்து வாங்க!நன்றிகள்!


@ தோழி

கண்டிப்பாக தோழி!
கவியரசருக்கு நிகராக புவியரசர்களைக்
கூட சொல்ல முடியாது!
நன்றிகள்!

Priya 5 ஜூலை, 2010 அன்று PM 5:29  

கண்ணதாசனைப் பற்றி மேலும் எழுதுங்கள்... தெரிந்துக்கொள்கிறோம்.

கவிதைக‌ள் நல்லா இருக்கு.. குறிப்பா 'வற்றல்'!

elamthenral 5 ஜூலை, 2010 அன்று PM 9:45  

கண்ணதாசனை மிஞ்ச ஆட்களே இல்லையென்றே சொல்வேன்...

தாராபுரத்தான் 6 ஜூலை, 2010 அன்று AM 6:58  

வணக்கமுங்க..எனது இடுக்கைக்கு வந்து அதையும் படித்து ஏதோ இருக்குது அப்படீன்னு சொல்லிட்டு வந்திருக்றீங்க..நானும் பல தடவை உங்கள் இடுக்கைக்கு வந்து உங்கள் சுவைத் தமிழை சுவைத்ததுண்டு..ஆனால் கருத்து சொல்லாம வந்து விடுவேன். காரைக்குடி பக்கம் பிள்ளையார் பட்டிக்கு முப்பது வருடங்களுக்கு முன்பு முதல் தடவையாக வந்தேன்..ஆனால் அந்த இடங்கள்..கோயில் சுற்றம்.. நான் ஏற்கனவே பார்த்து ..சுற்றி தரிந்த இடங்கள் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அன்று முதல் இன்று வரை எனது இன்ப துன்ப நிகழ்வுகளை பகிர்கிற இடமாக வைத்து இருக்கிறேன்.காரைக்குடி என்றாலே ஏதோ ஒண்ணு இருக்குது...வணக்கம் தம்பீ..வரேன் தம்பீ.

அண்ணாமலை..!! 6 ஜூலை, 2010 அன்று AM 10:26  

@ Priya,

கண்டிப்பாங்க..
ரொம்ப நன்றிங்க!


@ புஷ்பா

நீங்க சொன்னதை அப்படியே நானும் வழிமொழிகிறேன்!

'பரிவை' சே.குமார் 6 ஜூலை, 2010 அன்று PM 3:26  

கண்ணதாசனைப் பற்றி மேலும் எழுதுங்கள்...

கவிதைக‌ள் நல்லா இருக்கு..

தூயவனின் அடிமை 7 ஜூலை, 2010 அன்று AM 2:39  

முள்ளை எடுக்க முள்!
வைரம் அறுக்க வைரம்!
என..
குற்றம் மறைக்க குற்றம்
புரியும்
தேசம் எங்கள்
தேசம்!

சரியான வார்த்தை அருமை.

அண்ணாமலை..!! 7 ஜூலை, 2010 அன்று AM 10:16  

@ தாராபுரத்தான்

ஐயா.. வணக்கமுங்க!
நீங்க கடைசியா எழுதியிருந்ததை
ரொம்பவே ரசிச்சுப் படிச்சேனுங்க!
அதனாலதான் அப்படி எழுதினேன்..ரொம்ப நன்றிங்க!


@ சே.குமார்

ரொம்ப நன்றிகள் நண்பரே!


@ இளம் தூயவன்

நான் சொன்னது சரிதானே! ரொம்ப நன்றிங்க!

கே. பி. ஜனா... 7 ஜூலை, 2010 அன்று AM 11:07  

அவரும் டி.டி.ஆர் தானே? (தத்துவம் தெரிந்தவர்!)

அண்ணாமலை..!! 8 ஜூலை, 2010 அன்று AM 11:22  

@ K.B.JANARTHANAN
ஆமாங்க! அவரென்ன சாதாரண ஆளா!
(ஆகா..! உக்காந்து யோசிப்பாங்களோ! :)

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!