புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

பட்டினத்தாரும்..கண்ணதாசனும்..பின்னே நாமும்!



ட்டினத்தாருடைய ஒரு பொருள்பொதிந்த பாடல்..

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழியம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மிவிம்மியிரு
கைத்தல மேல்வைத்து அழும்மைந்தரும் சுடுகாடுமட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!

ஒண்ணும் புரியலையா?இப்பக் கீழ உள்ளதப் படிப்போம்!

வீடு வரை உறவு..
வீதி வரை மனைவி..
காடு வரை பிள்ளை..
கடைசி வரை யாரோ?



நவீன பட்டினத்தார் கண்ணதாசன் அவர்களின் எண்ணவண்ணத்தில் நசுக்கிச் சுருட்டி மேல உள்ள பாட்டை எப்படி எழுதியிருக்கார் பாருங்க!(படம்- பாத காணிக்கை 1962)

******************
ட்டினத்தார்-ந்னு சொன்னவுடனேயே தப்பிச்சு ஓடப்பார்க்குறீங்க பார்த்தீங்களா?
எவ்வளவு நாள்தான் பெண்ணையும்,அவர்தம் கண்ணையும்,நிலவையும்,
உள்மன ஆழ விளிம்பு இருட்டின் சிறுபிம்பத்தையும்-என்றுமட்டும் கவிதையெழுதிக் கொண்டிருப்பது..அதனால்தான் இந்த சிறுமுயற்சி..

*******************
கொஞ்சம் பட்டினத்தாரின் மனநிலையுடனேயே நிதானமாகக் கீழுள்ள கவிதைகளை அணுகவும்!
*

காதறுந்த
ஊசி..
சொல்கிறது
சேதி..
வாழ்க்கை!


*************************

விறுவிறுவெனப்
பாவம் சேர்க்க
வேகமாய்த் தொடர்கிறான்..
காலன்..


*************************

கருவில் உதைத்தால்
இன்பம்..
காலத்தில்
தெருவில் உதைத்தால்..
என் சொல்ல.. ?


*************************

இறைவனுடன் போட்டி..
மன்மதன் வென்றான்
அம்பால்..
மனிதன் வென்றான்
அன்பால்..
கிடைத்தது சாபம்.. !
போனது பாபம்..!


*************************

முடிமுடிமுடி!

விதிமுடி
வாழ்க்கை..
தலைமுடி..
இரண்டும்
சேர்த்து முடி!


*************************

மது..
மாது..
சூது..போம்!
மனை(வி)யிழந்த போதே
புலனாகிறது
வாழ்க்கை!


*************************

செத்தபிணம்
கிடக்க..
சுற்றி நின்று
அழுகின்றன..
இனிச் சாகும்பிணங்கள்!

*************************

இதை இன்னும்.. சற்றே நிதானமாகப் படியுங்கள்!

மானிட வாழ்க்கை!

வளர்பிறை..!
பௌர்ணமி..!
தேய்பிறை..!
அமாவாசை..!
பிறகு..??



வகையாய் முதலில் நம்மிடம் சிக்கியவர் பட்டினத்தார்..அதனால தான் தலைப்பும் அப்படியே! ரைட்டுன்னா கைதட்டிக்குங்க.. தப்புன்னா தலையில தட்டுங்க!
(ச்செல்லமான்னு சொல்ல வந்தேங்க!)

*************************
படங்கள் - நன்றி கூகிள்.

4 கருத்துகள்:

தூயவனின் அடிமை 14 ஜூலை, 2010 அன்று AM 2:09  

கருவில் உதைத்தால்
இன்பம்..
காலத்தில்
தெருவில் உதைத்தால்..
என் சொல்ல.. ?

அந்த சூழ்நிலையிலும் அந்த தாய் அவனை சபிக்க மறுக்கிறாள்.

ஹேமா 14 ஜூலை, 2010 அன்று AM 4:47  

குட்டிக் கவிதைகள் எல்லாமே வாழ்வின் தத்துவம் சொல்கிறது.எல்லாமே பிடிச்சிருக்கு அண்ணாமலை.நல்ல பதிவு.

Prasanna 14 ஜூலை, 2010 அன்று AM 6:54  

எனக்கு எழுத்துக்கள் சுருக்கமாக இருந்தால் பிடிக்கும்.. இந்த வரிகளும் மிகவும் பிடிக்கிறது..
பதிவுலக பட்டினத்தார் அண்ணாமலை என்ற பட்டத்தை அளிக்கிறேன் :)

அண்ணாமலை..!! 14 ஜூலை, 2010 அன்று PM 2:33  

@ இளம் தூயவன்,

ஆமாங்க!எந்தச் சூழ்நிலையிலும் மனிதனை(மகனை!)விட்டுக்கொடுக்காத தெய்வம்-ங்க தாய்!



@ ஹேமா

அப்படியா? ரொம்பவே மகிழ்ச்சிங்க!



@ பிரசன்னா,

இந்த விளையாட்டுக்கு நான் வரல சாமீ..!
:)




பி.கு:-

ரொம்பவே திறமையிருக்குற நம்மாளுங்க இதுபோல ஒவ்வொரு பழைய பெருமை மிக்க பாடல்களை புதுப்பிக்க முயலலாம்.அதன் தன்மை கெட்டு விடாமல்!(அல்லது அந்தப் பாடலின் சாராம்சத்தை வலியுறுத்துவதாக!) இப்ப உள்ள நம்மல மாதிரி ஆளுங்களுக்கு வெண்பாவைவிட புதுக்கவிதை-னா எளிதாகப் புரியுமே!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!