புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

தேவதைகளின் மணித்துளிகள்!



"ப்பா.."

அழைத்தபடி வந்து என்னை முதுகோடு கட்டிக்கொண்ட மகள் பிரீத்திகா..
பிரீத்.பிரீத்..பிரீத்திகா..(ரிதம் மாதிரி இருக்கில்ல..)
இந்த வருடம் வகுப்பு 5-ல்.
(ம்ஹ்ம்..கவலைகளில்லாத தேவதைகள்..!)
ஒரு கையில் தமிழ்ப்புத்தகத்துடன் எனது தாடையைத் திருப்பினாள்.
"என்னம்மா?" கொஞ்சலானேன்.

'இது என்னப்பா?'
குழலினிது..யாழினிது தோற்கிறது.
புத்தகத்தின் முகப்புப் பக்கத்தைக் காட்டிக் கேட்டாள்..
"
தீண்டாமை ஒரு பாவச்செயல்..
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்.
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்..

"
சட்டென்று சூழ்நிலை மாறுகிறது.ஆனாலும்,ரம்மியம் குறையவில்லை.
நினைத்தேன்..! குழந்தைகள்தான் எவ்வளவு அறிவாக, எதையும் உற்று நோக்கும் திறனுடன் இருக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு சமூகத்தின் கட்டமைப்புகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய நேரம் இதுதான்!
சாதிகளினால் தான் எத்தனை சண்டைகள்,சச்சரவுகள்,பிரிவுகள்..
பாரதியின் "சாதிகள் இல்லையடி...." -யையெல்லாம் சொல்லி அவளுக்குப் புரிய வைத்தேன்.

முடிக்கற்றைகள் காற்றில் பறக்க தலைசாய்த்துக் காதுமடல்களில் பென்சிலைக் கொடுத்து நெம்பியவாறே,
சொல்வதை முழுதும் கேட்டவள் அவளது தோழியின் குரல்கேட்க சிட்டாய்ப் பறந்தோடினாள்..

***************

ரு வாரம் கழித்து காற்றிலாடிய தமிழ்ப்புத்தகத்தின் முகப்பில்
நான் காண நேர்ந்தது புன்னகையுடன் இவ்வாறு..
(சற்றே.. பென்சில் திருத்தங்களுடன்!)
"
காலாண்டு ஒரு பாவச்செயல்..
அரையாண்டு ஒரு பெருங்குற்றம்..
முழு ஆண்டு ஒரு மனிதத் தன்மையற்ற செயல்.."

ம்ஹூம்...தேவதைகளுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை..
பரீட்சைகளைத் தவிர!
*****



பி.கு :
படங்களிலுள்ள குட்டிதேவதை நண்பர் பாலனது வீட்டில் குடிகொண்டிருக்கிறாள்..

14 கருத்துகள்:

Chitra 31 ஜூலை, 2010 அன்று AM 11:28  

காலாண்டு ஒரு பாவச்செயல்..
அரையாண்டு ஒரு பெருங்குற்றம்..
முழு ஆண்டு ஒரு மனிதத் தன்மையற்ற செயல்.."

ம்ஹூம்...தேவதைகளுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை..
பரீட்சைகளைத் தவிர!


..... தேர்வுக் கொடுமைகள்........ ம்ம்ம்ம்..... !
Cute photos. :-)

அண்ணாமலை..!! 31 ஜூலை, 2010 அன்று AM 11:56  

ஆமாங்க!
சின்னப்புள்ளைல நாம கூட
ரொம்பவே கவலைப்பட்ட விசயம் இதுதானே!:)

ஹேமா 31 ஜூலை, 2010 அன்று PM 4:45  

மனதுக்குள் சிரித்துக்கொண்டாலும் பரீட்சை என்பது குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய பாராமாய் இருக்கிறது !

ஜோதிஜி 1 ஆகஸ்ட், 2010 அன்று AM 7:39  

நண்பரே இந்த இணைப்பை வாய்ப்பு இருக்கும் போது படித்துப் பாருங்கள். ஒத்த சிந்தனைகள்....

http://texlords.wordpress.com/2009/07/28/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/

ஜோதிஜி 1 ஆகஸ்ட், 2010 அன்று AM 7:41  

மணப்பாறை அருகே விராலிமலை கேள்விப்பட்டு இருக்கின்றேன். விராமதி எந்தப் பாதையில் இருக்கிறது?

அன்புடன் நான் 1 ஆகஸ்ட், 2010 அன்று AM 8:29  

குழந்தை மனசு குழந்தை மனசுதான்..... பகிர்வு அருமை.

அண்ணாமலை..!! 1 ஆகஸ்ட், 2010 அன்று AM 10:48  

@ ஹேமா,

ஆமாங்க! ஆனா..
மத்த எதைப்பற்றியும்
அவங்களுக்குக் கவலையில்ல!


@ ஜோதிஜி,

படிச்சுப்பார்த்தேங்க!
உங்களது நிதர்சனமான உண்மைகள்!
ஆனா..நீங்கதாங்க சீனியர்!2009-லயே எழுதிட்டீங்களே! :)

விராமதி.
திருப்பத்தூர் டூ திருமயம் ரூட்.
(கீழச்சிவல்பட்டி அருகில்!)
விராமதி அன்புடன் உங்களை வரவேற்கிறது. :)


@ சி. கருணாகரசு,

ஆமாங்க! குழந்தை மனசு குழந்தை மனசுதான்!
இல்ல!

அன்புடன் அருணா 1 ஆகஸ்ட், 2010 அன்று PM 3:45  

பூங்கொத்து!

தூயவனின் அடிமை 2 ஆகஸ்ட், 2010 அன்று AM 1:06  

குழந்தை மனசு பூ போன்றது என்பதை அருமையாக நிருப்பிக்க பட்டுள்ளது.

அண்ணாமலை..!! 2 ஆகஸ்ட், 2010 அன்று AM 10:21  

@ அன்புடன் அருணா,

ஹை..! தேவதைக்குப் பூங்கொத்து!
நன்றிங்கோவ்!


@ இளம் தூயவன்,

எல்லார் மனசும் இந்த மாதிரிதானே..!
ஆனா, குழந்தைகளது கொஞ்சம்(ரொம்ப!) அதிகம்!
:)

வைகறை நிலா 2 ஆகஸ்ட், 2010 அன்று AM 10:56  

இப்போதுள்ள பாடச்சுமைகள் குழந்தைகளை இவ்வாறுதான் சிந்திக்கவைக்கும்..என்ற கருத்தினை அழகாக சொல்கிறது இந்த கட்டுரை..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) 3 ஆகஸ்ட், 2010 அன்று AM 11:32  

நண்பரின் அன்பு செல்வியை இங்கும் பார்க்கையில் மனம் மகிழ்ந்தது...

தங்களின் வரிகளின் வடிவில் குழந்தைகளின் மனமும் அழகாய் தெரிகின்றது..

கதையல்ல நிஜமாய்...

அண்ணாமலை..!! 4 ஆகஸ்ட், 2010 அன்று AM 10:35  

@ வைகறை நிலா,

(அப்ப கதை மாதிரித் தெரியலையா?)ச்சும்மா..! :)
ரொம்பவே நன்றிங்க!



@ தஞ்சை.வாசன்,

நண்பரின் மகளை இங்கு பதிவிடுவதற்கு வாய்ப்புக்கிடைத்ததில் எனக்கும் ரொம்பவே மகிழ்ச்சிங்க வாசன்!

Unknown 17 ஆகஸ்ட், 2010 அன்று PM 6:25  

அடடா... இப்போதுதான் கவனித்தேன் கதை அருமை மகளின் படத்தினையிட்டமை மகிழ்ச்சியே :)

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!