புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

ஒரு துரோகம்.. ஒரு கொலை..!



"சிந்தனை செய்.. சிந்தனை செய் மனமே!"
இப்போது என் மனதில் ஓடும் சிந்தனை உங்கள் யாருடைய மனதிலும் ஓடுவதற்கு அல்லது நிற்க..நடக்க..என எதற்குமே வாய்ப்பில்லை.
அடுத்த இட்லி அல்லது பேருந்து எனக் காத்திருப்பில் இருக்கும் உங்களில் யாரும் கண்டிப்பாக எனது நினைவு எல்லைக்குள் வர முடியாது.
ஒன்றுமில்லை..(இரண்டுமில்லை!)
சின்னதாக ஒரு கொலை செய்ய வேண்டும். கொலையில் கூட சின்னது..பெரியது..உண்டா என்ன?
நான் என் இனிய நண்பனை..இல்லையில்லை..ஒரு நம்பிக்கைத் துரோகி என்ற பட்டத்துக்கு சொந்தக்காரனை.
நயவஞ்சகனை.._____________
டேஷில் நிறைய போட்டுக்கொள்ளுங்கள்.

துரோகம்..பெரிய துரோகம்!
என்னவென்று சொல்வதற்கில்லை.(சீக்ரெட்..!)
எப்படியாவது அவனை உலகத்தைவிட்டுத் துரத்து..இதுதான்.இதுதான் இப்போது வேண்டும்!
சரி! எப்படிக் கொலை செய்யலாம்..
துப்பாக்கி எளிதானது.ஆனால், வீணாகும் ஒவ்வொரு குண்டுக்கும் நாளை பதில் சொல்ல வேண்டும்.
கள்ளத்துப்பாக்கி வாங்கலாம்.அதுவும் சிக்கல்.விசயம் கசிந்துவிடும்.
கத்தி! ம்ஹூம்..வேண்டாம்.நிறைய ரத்தம் சேதமாகும்.
கயிறு..ம்..சரியான ஆயுதம்..நான் பலமான ஆள்தான்.
பின்பக்கம் சென்று (ஏன் முன்பக்கமாகவே! நானென்ன கோழையா?)
கழுத்தோடு இறுக்கி வைத்து சொடக்..ஃபினிஷ்..
ஏதோ 28 கொலைகள் செய்தவனைப் போல் பேசுகிறேன்.

இந்தக் கொலையால் என்ன லாபம்?
இழந்த பணம்,பதவி,மரியாதை திரும்பக்கிடைத்து விடுமா?
இல்லை.ஆனால், நம்பிக்கைத்துரோகியை கொல்வதில் உள்ள சுகம் வேறெதிலுமில்லை.
என்ன சரிதானே?
நீங்கள் மனதுக்குள் முயற்சிக்கிறீர்கள்.நான் கைகளில் நைலான் கயிறோடு கிளம்பிவிட்டேன்.அவ்வளவுதான்.

எந்தத் தடயமும் விட்டுவிடக்கூடாது.
கைகளுக்கு உறை..ஷூ-அச்சுகளைத் தவிர்க்க வாஷ்பேஷினை ஓப்பன் செய்துவிட்டால் வீடு நீரால் நிரம்பப்போகிறது.
ஃபாரன்சிக் திணருவார்கள்.
காரியம் முடிந்து கைரேகைகள் கவனித்து..கபாலென்று காரில் வந்து..உடனே கனடா!
என்ன யாரும் சந்தேகிக்க முடியாது.கொலை நடந்த நேரம் பெங்களூரில் என் பெயரில் ஒரு ரூம் புக்காகியிருக்கும்.
போலீசாருக்கு என் மேல் சந்தேகம் வந்தாலும் இருக்கவே இருக்கிறது இந்த ஆதாரம்.
அவனுக்கு மனைவி, குழந்தைகள் யாருமில்லை.இன்றைய கிழமை வேலைக்காரன் வேறு லீவ்..
ஏற்கனவே எல்லாத் தகவலும் கைவசம்.

******************
வன் வீடு இருந்த சந்தில் கார் புகுந்து திரும்பியது.
ஆனால், வழக்கத்தைவிட அவன் வீட்டின் முன்னால் ஒரே கூட்டம்.
தெருவின் முனையிலிருந்தே அங்கு நடப்பவைகளைக் கவனிக்க முடிந்தது.படிகளில் நிலைதடுமாறி கைகால்கள் பரப்பிக்கிடக்க..சட்டைகளில் ரத்தத் திட்டுகளுடன்..பட்டாபிராமன்..இப்போதைய பரம வைரி..

"ஷூட் பண்ணிட்டாங்கப்பா! எல்லாம் முடிஞ்சு போச்சு!"
இரண்டு மத்தியதரக் குடும்பஸ்தர்கள் கண்களில் கலவரத்துடன் காருக்கு அருகில் முணுமுணுத்துவிட்டுப் போனார்கள்

எனக்கே கொஞ்சம் அதிர்ச்சி..ஆனாலும்,
துரோகி ஒழிந்தான்.ஆனால், என் வாய்ப்பை எவனோ தட்டிப் பறித்துவிட்டான்.
துரோகிகள் ஒருவனுக்கு மட்டும் துரோகமிழைப்பது இல்லை போலும்.

******************
நைலான்கயிறை மெல்லத் தொட்டு கைகளில் அணைத்து காரின் அடியில் தள்ளினேன்.அருகில் சென்று அவனைப் பார்க்கும் ஆவலிருந்தும்..அந்தத் துரோகியை சவமாகக் கூட மீண்டும் சந்திக்க மனமில்லாததால்..
"போடா..!பட்டாபிராமா..! குட்பை!'..பார்ப்போம்..வாய்ப்பிருந்தால் நரகத்தில்.40 வருடங்கள் கழித்து..!
இனி..நோ..ப்ராப்ளம்..! நேரே கனடா.. மருந்துக்கும் இந்தியாவை நினைக்கப் போவதில்லை..
என்னை முந்திக் கொண்ட, அந்த முகம் தெரியா 'x'-க்கு நன்றிகள்!

புகை கக்கியபடி கார் சாலை வளைவில் திரும்பி மறைந்தது.

******************
"சார்!கைகுடுங்க..ரொம்ப நன்றி சார்! வீட்டை சூட்டிங்குக்காக கொடுத்ததோட இல்லாம நானே எதிர்பார்க்காத அளவுல,கொலை சீன்ல நீங்களே நடிச்சுப் பிரமாதப்படுத்திட்டீங்க சார்!"

அந்த டைரக்டர் கைகுலுக்க...பட்டாபிராமன் பெருஞ்சிரிப்போடு சொன்னான்.
"வேற சட்டை இருந்தா கொடுங்கப்பா..கசகசன்னு இருக்குது.."

******************
ங்கு நடந்தது எதுவும் தெரியாமல் நான் பழிவாங்கிய திருப்தியோடு
கனடா-வுக்கு விமானமேறிக் கொண்டிருந்தேன்!

********முற்றும்********


படம் : நன்றி கூகிள்

6 கருத்துகள்:

தோழி 7 ஆகஸ்ட், 2010 அன்று PM 10:20  

நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்.!

தூயவனின் அடிமை 8 ஆகஸ்ட், 2010 அன்று AM 1:57  

நீங்க மலை தானுங்க அதுல மாற்றமில்லை.

ஹேமா 8 ஆகஸ்ட், 2010 அன்று AM 4:19  

கதையை இப்பிடி மாத்திட்டீங்களே அண்ணாமலை !

அண்ணாமலை..!! 8 ஆகஸ்ட், 2010 அன்று AM 11:18  

@ RAJ

விளம்பரமா?நடத்துங்க..நடத்துங்க.!
(அதுவும் நம்ம பதிவுல!)
:)


@ dharshi,

ரொம்ப நன்றிங்க உங்க வாழ்த்துகளுக்கு!!!



@ இளம் தூயவன்,

நீங்க வேற..!
உங்களை விடவா பாஸ்!
:)


@ ஹேமா,

இன்னும் கூட யோசிச்சு நல்ல கிளைமாக்ஸ் எழுதி இருக்கலாம்!
நீளம் கருதி இதையே போட்டுட்டேனுங்க!

Ananthi (அன்புடன் ஆனந்தி) 9 ஆகஸ்ட், 2010 அன்று PM 9:38  

அவ்வ்வ்வ்.. கொலையா.. நா வரல..
(ஓ... வெறும் சினிமா ஷூட்டிங்-ஆ... அப்போ சரி.. )

அண்ணாமலை..!! 10 ஆகஸ்ட், 2010 அன்று AM 11:51  

எல்லாமே சூட்டிங் இல்லைங்க!
கொல்லப் போனது உண்மைதான்.ஆனா,
பட்டாபி இறந்தமாதிரிக் கிடந்தது மட்டும்தான் சினிமா சூட்டிங்!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!