புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

எங்கே உள்ளது குற்றம்?



ரொம்பவே கனவுகளோடு என் நண்பன் E.B-யில் நடந்த நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளச் சென்றான்.E.B-யின் உள்வாயிலில் ஒரு குறிப்பிட்ட தலைமைக்கட்சியின் டாடாசுமோ, கட்சிக்கொடியுடன் நிற்கவே, தெரிந்துவிட்டது.இந்த இண்டர்வியூ என்ன ஆகப்போகிறதென்று!
(பல மரம் கண்ட தச்சனாயிற்றே!)

"பரமேஸ்வரன்..!"
இவன் பெயரை இண்டர்வியூ அறையிலிருந்து விளித்தவுடன்,
சற்றே நிதானித்தவன்..
சான்றிதழ்கள் அடங்கிய ஃபைலை இன் செய்யப்பட்ட சட்டையின் முதுகுப்பகுதிக்குள் மறைத்துக்கொண்டு சுற்றிக் காத்திருந்த அனைவரையும் பரிதாபமாகப் பார்த்தான். ஒவ்வொருவர் கண்ணிலும் எப்படியாவது இந்த வேலையைப் பெற்றுவிட வேண்டும் என்கிற கனவு.கண்களிலும்,நெஞ்சினிலும் ரௌத்ரத்துடன் உள்ளே பிரவேசித்தான்.

பிதுங்கிய தொப்பைகளுடன் சோபாவில் புதைந்திருந்தார்கள் 3-4 கேள்(லி)வியாளர்கள்.
கேட்டார் ஒருவர் "சர்டிபிகேட்ஸ் எங்கே?"

"இல்ல சார்.பஸ்ல வர்றப்ப மிஸ் ஆகிடுச்சு"

"என்ன இவ்வளவு கூலா சொல்ற?" - எகத்தாளமாகக் கேட்டார் அவர்.

"ஏன், சர்டிபிகேட் இருந்தா மட்டும் வேலை தந்துருவீங்களா என்ன?"
முதல் அடியே வலுவாக அடித்தான்.

"ஒரிஜினல் இருந்தா தான் உங்களை செலக்ட் பண்ண முடியும் தம்பி"
உடைபட்ட மூக்கை ஒட்டவைக்க முயற்சி செய்தார்.

"நாந்தான் ஏற்கனவே ஜெராக்ஸ் குடுத்துருக்கேனே .அதை நீங்கள் பார்க்கலாமே!"
நண்பன் அசராமல் அடித்ததில் மிரண்டவர்கள்.என்ன இவன் இவ்வளவு ராங்காப் பேசுறான்?
என்றபடி அருகில் இருந்தவரிடம்,
"சரிங்க! இவரோட பேரைப் பார்த்து அந்த ஃபைலை எடுங்க.."

"நல்லாத்தான் மார்க்கெல்லாம் வாங்கியிருக்க.
என்ன படிச்சீங்க?"
பயம் கொஞ்சம் மரியாதையை உருவாக்கியது.

"அதுலயே போட்டிருக்குமே!"

"சொல்லுங்க தம்பி ..குறைஞ்சா போயிருவீங்க!"

"எலெக்ட்ரிகல் ஐ.டி.ஐ !"

"ஏன் அது படிக்கனும்னு உங்களுக்குத் தோணுச்சு..?"

"அதுதான் அப்ப கிடைச்சது .அதனால படிச்சேன்!"

"கிடைக்கலைன்னா.."

"மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஏதாவது படிச்சிருப்பேன்."

"ஓ! அப்ப இப்ப எதுக்காக இங்க இண்டர்வியூக்கு வந்தீங்க?"

"என் அம்மாவுக்கு அவங்க பிள்ளை கவர்ன்மெண்ட் வேலைபார்த்தா சந்தோஷம்.
அதனாலதான்!"

"இந்த வேலை கிடைச்சதுன்னா என்ன பண்ணுவீங்க?"

"வீட்டுல சந்தோசப்படுவாங்க"

"கிடைக்கலைன்னா?"

"நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்!"
எந்த பயமுமின்றி அவன் பேசியதில் அவர்கள் ஆடித்தான் போனார்கள்.

ஒரு மஞ்சள் நிற வயரை எடுத்து(வயரை எலெக்ட்ரிகல் மொழியில் 320 கே.ஜி, 720 கே,ஜி என்றெல்லாம் வரையறுப்பதுண்டு!) அவனிடம் கேள்வி கேட்டார்கள்.
"இது என்ன வயர்?"

அவன் சொன்னான்.
"யெல்லோ வயர்"

"தம்பி என்ன இப்படி ராங்கா பேசுற?"

"பின்ன என்ன சார்! ஏற்கனவே ஆளை செலக்ட் பண்ணிட்டீங்க.அப்புறம் எதுக்கு சார் இந்த இண்டர்வியூ?"

கொஞ்சமே கொஞ்சம் .. தயங்கிய அவர்கள் ஒத்துக்கொண்டார்கள்.
"ஆமாந்தம்பி! எங்கள என்ன பண்ணச் சொல்கிறீங்க.இது வெறும் கண்துடைப்புதான்.உங்களுக்குப் புடிக்கலைன்னா போயிடுங்க.நாங்க என்ன பண்ண முடியும்?
இன்னும் கொஞ்ச நேரத்துல E.P-லயிருந்து செலக்ட் ஆனவங்க லிஸ்ட் வரும்!"

"அப்படி முதல்லயே சொல்ல வேண்டியதுதான சார்! வெளியூர்லயிருந்தெல்லாம்
அவனவன் காலையிலேயே வந்து சாப்பிடாமக் கெடக்கான்.அப்புறம் எதுக்கு சார் போஸ்ட் கம்பம் ஏறச் சொல்றீங்க?விழுந்து கைகால் உடைஞ்சிருந்தா?

"சரிங்க தம்பி நீங்க யாரு..போன் நம்பர் என்னா-ந்னு சொல்லுங்க" என்று எதற்கும் பெரிய விவகாரம் ஆகிவிட்டால் தொடர்பு கொள்ள ஏதுவாக வாங்கி வைத்துக் கொண்டார்கள்.எந்தத் தயக்கமுமின்றி கொடுத்துவிட்டு கதவை அறைந்துசாத்திவிட்டு வெளியே வந்தவன்,
சத்தமாகச் சொன்னான்,

"இங்க நடக்குறது எல்லாமே வெறும் கண்துடைப்புதான்.அவங்க ஆளுங்களை ஏற்கனவே செலக்ட் செய்தாச்சு.நான் சண்டை போட்டுட்டு வந்துட்டேன்.கிளம்புறவங்க கிளம்புங்க.இனிமேலும் காத்துக்கிடக்காதீங்க"

என்றபடி அந்த இடத்தைவிட்டு அகல,

ஒரு 3,4 பேர் அவனுடன் சேர்ந்து வெளியே கிளம்ப மற்றவர்கள் அனைவரும் இருந்து நேர்முகத்தேர்வை சிறப்பித்துவிட்டே கிளம்பினார்கள்.

எனக்கு ஒரு சந்தேகம்.இதில் யார்மீது குற்றம்?
மக்கள்????அதிகாரிகள்????அரசாங்கம்????
எனக்குத் தெரியவில்லை.ஆனால், ஒன்று புரிகிறது.

அன்பளிப்பு லஞ்சம் ஆனதும்!
அதிகாரம் நாட்டை ஆள்வதும்!



பி.கு :
*நண்பனது பெயரை சிறிது மாற்றியிருக்கிறேன்.
*மற்றபடி சம்பவங்கள், வசனங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க உண்மையே!
*எந்த நபரின் ஆட்சிக்காலத்தில் இது நிகழ்ந்தது என்று சொல்வதற்கில்லை.
காமராஜரின் வசனத்தைக் கொள்க.

அப்புறம்,
நாளைக்கு சுதந்திரதினம்!!!!

14 கருத்துகள்:

கமலேஷ் 14 ஆகஸ்ட், 2010 அன்று PM 5:36  

என்ன நண்பரே இதுக்கு பதில் சொல்ல முடியும்.
உங்க ஸ்டைல்லயே நானும் சொல்கிறேன்.
சுதந்திர தின வாழ்த்துக்கள்.

தூயவனின் அடிமை 15 ஆகஸ்ட், 2010 அன்று AM 4:07  

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

வைகறை நிலா 15 ஆகஸ்ட், 2010 அன்று AM 10:40  

திறமையான இளைஞர்கள் முன்னேற முடியாமல் தடையாக இருக்கின்ற சில விஷயங்களில்(இந்தியாவில்) இதுவும் ஒன்று..
இந்த நிலை மாறினால் இந்தியாதான் எல்லாவற்றிலும் சிறந்த நாடாக இருக்கும்..

எல்லோருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

அண்ணாமலை..!! 15 ஆகஸ்ட், 2010 அன்று AM 11:00  

@ கமலேஷ்

ஒண்ணும் சொல்லுறதுக்கில்ல நண்பரே!..


@ வைகறை நிலா,

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால்!" என சொல்லும் யார் வந்தாலும் இந்த நிலைமைதான் ..

@ இளம் தூயவன்,

உங்களுக்கும் நண்பரே!


****அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!****
______/\_______

எல் கே 15 ஆகஸ்ட், 2010 அன்று AM 11:52  

மக்களின் குற்றமே . நாம்தானே நான்கு நாட்களில் நடக்கவேண்டிய வேலை மூன்று நாட்களில் முடிய வேண்டும் என்று லஞ்சம் கொடுக்கக் துவங்கினோம் ????

அகத்தியம் 15 ஆகஸ்ட், 2010 அன்று PM 6:45  

// ஆனால், ஒன்று புரிகிறது,

அன்பளிப்பு லஞ்சம் ஆனதும்!
அதிகாரம் நாட்டை ஆள்வதும்!... /// உண்மை தான் அதுக்கு இப்போ என்ன பண்ணலாம் என்றீங்க?


சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

அண்ணாமலை..!! 16 ஆகஸ்ட், 2010 அன்று AM 10:58  

@ LK,

நானும் உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்!
முன்னவர்கள் செய்ததற்கு,
பின்னவர்கள் படுகிறார்கள்! இப்போது பின்னவர்களும் செய்கிறார்கள்!


@ அகத்தியம்,

இப்படி எழுதி வைக்கிறதைத் தவிர வேறு வழியே இல்லையா??
தமிழ் கண்ட அகத்தியர்தான் ஏதாவது சொல்லனும்!
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

Unknown 17 ஆகஸ்ட், 2010 அன்று PM 6:32  

திறமைக்கும் படிப்பிற்கும் இடமில்லாது போனதால்தான் நம் நாடுகள் இன்னும் பின்தங்கிப் போயுள்ளன. பகிர்விற்கு நன்றி நண்பரே!

sakthi 18 ஆகஸ்ட், 2010 அன்று PM 1:12  

அருமையானதொரு பதிவு அண்ணாமலையாரே

Aathira mullai 19 ஆகஸ்ட், 2010 அன்று PM 7:19  

திறமைக்கு வாய்ப்பு இல்லாது போக இந்த அன்பளிப்பு என்ற ஒன்றும் என்ற இலஞ்சமே முக்கிய காரணம்..
பயனுள்ள பதிவு...

vasan 20 ஆகஸ்ட், 2010 அன்று PM 4:31  

//எங்கே உள்ள‌து குற்ற‌ம்?//
ந‌ம்மிட‌ம். ம‌க்க‌ளாட்சியில் பின் யாரைச் சொல்வ‌து அண்ணாம‌லை?
முழித்திருந்து காக்க‌ வேண்டிய‌ சுத‌ந்திர‌த்தை, காசுக்கு விற்றால்
வாங்கிய‌வ‌ன் எப்ப‌டி முத‌ல் தேற்றுவ‌து? மாற்று இல்லை அல்ல‌து
ச‌ரியில்லை என்ப‌தால், தாக‌த்திற்க்கு,க‌ள்ளிப்பால் அல்ல‌து எருக்க‌ம்பால்
இர‌ண்டில் ஒன்றை குடிப்போமா? இர‌ண்டையும் கொட்டிவிட்டு, தாக‌த்தோடு
வேறு த‌ண்ணீர் தேட‌மாட்டோமா? 'தேடுங்க‌ள் கிடைக்குமென்றார்' ஏசு.

அண்ணாமலை..!! 21 ஆகஸ்ட், 2010 அன்று AM 11:55  

@ பாலன்,

மிக்க உண்மை நண்பரே!


@sakthi,

ரொம்ப நன்றிங்க நண்பரே!


@ஆதிரா,

வேகமாக வேலை நடக்க நாம் செய்த வேலைதான் இது.ரொம்ப நன்றிங்க!


@vasan,

உங்கள் வாக்கியங்கள் எனக்கு
ரொம்பப் பிடித்திருக்கிறது.
அருமை!

Aathira mullai 22 ஆகஸ்ட், 2010 அன்று PM 10:49  

//சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும்
விண்ணப்பம்
பூர்த்தி செய்கிறது..
உன் நாக்கு!//
எப்படி இப்படி சிந்திக்க முடிகிறது சிந்தனைச் சிற்பியே வாழ்க! வளர்க நும் கவித்திறன்.

அண்ணாமலை..!! 24 ஆகஸ்ட், 2010 அன்று PM 12:07  

அனைத்தும் தங்களைப் போன்ற நற்கவிஞர்களின் ஆசிகளே!நன்றிகள்!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!