புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

வெட்டு ஒண்ணு..துண்டு ரெண்டு!



நிறைய விசயம் எழுதி இருந்தும் அதனைத் திருத்துவதற்கு நேரமற்ற காரணத்தாலேயே பதிவை இட முடியாமல் போய்விடுகிறது.எல்லோருக்குமே இப்படித்தான் என நினைக்கிறேன்.
சிறப்பாகவே எழுதவேண்டும் என நினைக்கிறது மனம் ஒவ்வொரு முறையும்.இரண்டு நாட்கள் கழித்து எடுத்துவைத்துப் பார்க்கும்போதும் இனிமேல் திருத்தவே வழியில்லை என நினைத்த இடுகையிலும் சிறுசிறு திருத்தங்கள் இருக்கத்தான் செய்கிறது.
இதனாலேயே நாளை பதிவிடலாம் என நாளைத் தள்ளிப்போட வேண்டியிருக்கிறது. ஒருவேளை அந்த நாளை என்னும் நாளைச் சந்திக்காமலேயே போய்விட்டால்?((நம்பிக்கைதானே வாழ்க்கை!)
அதனால்தான் அனுபவத்தால் ஒவ்வொரு மனிதனும் பக்குவமடைகிறான் என்று சொல்கிறார்களோ? ஒரு நண்பர் பக்குவம் என்றால் என்ன? என்று கேள்வியெல்லாம் கூடக் கேட்பார். விட்டுவிடுவோம்.
தலைப்புக்குத் தகுந்தபடி பதிவில்லாததற்கு மன்னிக்கவும்.
வெட்டுஒண்ணு - துண்டு ரெண்டு கீழே!!

திருக்குறள்..
கடைச் சங்க காலத்திலும்..
கடை சந்து பொந்துகளிலும்..

*************
பாஞ்சாலி..
பாரதியின் சபதங்களிலும்.!
பார்ப்பவரின் கண்களிலும்..!

*************
சண்டை..
தெருக்களிலும்..
திரைப் படங்களிலும்..

*************
சிந்தனை..
நல்லவனிடத்திலும்..
கெட்டவனிடத்திலும்..

*************
காதல்..
கடற்கரைகளிலும்..
கண நேரங்களிலும்..

*************
செம்மொழி..
செம்புலப்பெய நீராயும்..
சென்னைவாசியிடமும்..

*************
ஆங்கிலம்..
காப்பாற்ற தமிழனும்..
கரையேற்ற ஆங்கிலேயனும்..

*************
நண்பன்..
கண்ணனும் குசேலனும்..
ஜூலியஸ்சீசரும் ப்ரூட்டசும்..

*************
மதம்..
புத்தரிடத்திலும்.. !
புத்தரின் பேரன்களிடத்திலும் அல்லது
யானைகளிடத்திலும்..!



நன்றிகள்!

6 கருத்துகள்:

தோழி 29 ஆகஸ்ட், 2010 அன்று PM 1:32  

/// மதம்..
புத்தரிடத்திலும்.. !
புத்தரின் பேரன்களிடத்திலும் அல்லது
யானைகளிடத்திலும்..! ///

இது எதோ அரசியல் பேசறது போல இருக்கே..

நடத்துங்க.. நடத்துங்க..

அண்ணாமலை..!! 29 ஆகஸ்ட், 2010 அன்று PM 2:28  

@ dharshi,

என்னங்க இப்பிடிச் சொல்லிட்டீங்க..
இதுல எந்த உள்குத்தும் இல்லைங்க..

அப்டின்னு சொன்னா நீங்க என்ன நம்பவா போறீங்க??
கண்டிப்பா இருக்க்க்க்கு...!

Unknown 29 ஆகஸ்ட், 2010 அன்று PM 3:57  

நன்று
தலைப்பும்
கவிதைகளும்

vasan 29 ஆகஸ்ட், 2010 அன்று PM 10:05  

//நண்பன்..
கண்ணனும் குசேலனும்..
ஜூலியஸ்சீசரும் ப்ரூட்டசும்..//

துரியோத‌ன‌னும் க‌ர்ண‌னும்..
ஜூலியஸ்சீசரும் ப்ரூட்டசும்..

மிக‌ப் பொருத்த‌மாய் இருந்திருக்க‌லாமோ, அண்ணாம‌லை!!

Chitra 30 ஆகஸ்ட், 2010 அன்று AM 10:47  

சிந்தனை..
நல்லவனிடத்திலும்..
கெட்டவனிடத்திலும்..

...Superb!!!

அண்ணாமலை..!! 30 ஆகஸ்ட், 2010 அன்று PM 5:40  

@ கலாநேசன்,

ரொம்ப நன்றிங்க நண்பரே!


@ vasan,

நீங்க சொன்னது ரொம்ப ரொம்பப் பொருத்தமாக
இருக்கிறது!!!!


@ Chitra,

ரொம்பவே நன்றிங்க!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!