புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

மன்னாதிமன்னன்- இராஜராஜசோழன்! (பகுதி-4)

*
பகுதி 1 இங்கே -> வீழ்ச்சிகளும்,எழுச்சிகளும்!
பகுதி 2 இங்கே -> விழித்துக்கொண்ட பேரரசு - திருப்புறம்பியம் போர்!
பகுதி 3 இங்கே -> அரங்கேறியது ஒரு இராஜகொலை -ஆதித்த கரிகாலன் மரணம்!


அரியணை ஏறினான் இராஜராஜசோழன்!

சுந்தரசோழன் இறந்தபிறகு, உத்தமசோழன்(மதுராந்தகன்) பரகேசரி என்ற பட்டத்துடன் ஆட்சிக்கு வந்தது சரியாக கி.பி 973-ல்.இதிலிருந்து சரியாகப் பனிரெண்டு ஆண்டுகள் அருண்மொழிவர்மன் பட்டத்து சோழ இளவரசனாக வலம்வந்தான்.

உத்தமசோழனைப் பற்றி அத்தனை கொடுங்கோலன் என்றெல்லாம் எந்தக் கல்வெட்டுகளோ,குறிப்புகளோ குறிப்பிடவில்லை.அவனுடைய ஆட்சிக்காலம் சிறப்பாகவே இருந்தது.ஏனெனில் சுந்தரசோழனுடைய ஆட்சிக்காலத்திலேயே எதிரிகளாக அச்சுறுத்தியவர்கள் சற்றே அடக்கி வைக்கப்பட்டிருந்தனர்.தவிரவும் ஈழத்திலும்,பாண்டிய மண்டலத்திலும் உத்தமசோழனது நாணயங்கள் காணக்கிடைக்கின்றன.

தனிப்பட்ட முறையிலும் அரசாங்க காரியங்களிலும் சிறந்தவனாகவே உத்தமசோழன் இருந்துவந்தான்.திருநாரையூர்,திருவீசையூர்,திருவாலங்காடு உள்ளிட்ட பல சிவாலயங்களுக்கு நிவந்தங்களும் அளித்துள்ளான்.சைவசமயத்தின் பால் அதிகமான ஈடுபாடு கொண்டவனாக இருந்தபோதிலும்,வைணவ ஆலயங்களையும் அவன் மறுக்காமல் சில விஷ்ணு ஆலயங்களுக்கும் நிவந்தங்கள் செய்துள்ளான்.

இராஜராஜனும் மதுராந்தகரிடம் மிகப்பாசம் கொண்டிருந்தான்.தனது மகனான (முதலாம்) ராஜேந்திரன் பிறந்தவுடன் தன் சிற்றப்பனின் மேல் கொண்ட அன்பாலும்,குழந்தையின் மதுரமான சிரிப்பைக் கொண்டும் மதுராந்தகன் என்றே பெயரிட்டான்.

உத்தமசோழன் அரிஞ்சய சோழனுக்குப் பிறகே ஆட்சிக்கு வந்திருக்க வேண்டியவன்.உரியவயது இல்லை என காரணம்காட்டி பலகாலம் அரியணை மறுக்கப்பட்டான் என்று கூறுவோரும் உள்ளனர்.

உத்தமசோழனுடைய ஆட்சியில் மக்கள் நன்றாகவே இருந்தார்கள் என்றாலும், சோழநாட்டின் வடக்குப்பகுதிகளிலும்,பாண்டிய நாட்டிலும் ஏற்பட்ட கிளர்ச்சிகளை உத்தமசோழனால் அடக்க இயலவில்லை என்றே தெரிகிறது.மலைநாடும்,சில சிற்றரசுகளும்கூட போர்க்கொடியைத் தூக்கியிருந்தன.

சோழநாட்டுக்கு வடக்கில் இந்நேரம் மிகப்பெரிய திருப்பம் ஒன்று நிகழ்ந்திருந்தது.

காலம்காலமாகவே மிகப்பெரிய நிலபரப்பைத் தன்னகத்தே கொண்டு வலிமையுடன் விளங்கிய பேரரசு மான்யகேதா-வைத் தலைமையாகக் கொண்ட ராட்டிரகூடப் பேரரசு.கி.பி-730 - களில் (சரியாகச் சொல்வதானால் கி.பி 735-ல்) சாளுக்கியர்களை ஒழித்துவிட்டு அந்த பரந்த நிலப்பரப்பைக் கைப்பற்றிய ராட்டிரகூடத்தின் முதல்மன்னன் தந்திதுர்கனே, பிற்காலச் சோழர்களுக்குப் பெரும் தலைவலியைத் தொடங்கி வைத்தான்.பல்லவர்கள் இருந்த வரை அவர்களை ஒருவழி செய்தவர்கள்,அடுத்து சோழர்களைப் பதம்பார்க்கத் தொடங்கியிருந்தனர்.

இவர்களிடமிருந்து நாட்டின் வடபகுதியைக் காப்பதற்கே பெரும்பாலான படைகளை சோழர்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது.ராட்டிரகூடர்களிடமிருந்து தங்களது பகுதிகளைக் காப்பதே பெரிய வேலையாக இருந்ததால் அவர்களிடமிருந்து எந்தப்பகுதிகளையும் கைப்பற்றுவதைப் பற்றி நினைத்துக்கூடப்பார்க்க முடியாத நிலை.

அதிலும் கண்டராதித்தர் ஆட்சியின்போது கிட்டத்தட்ட இன்றைய தஞ்சை வரை வந்து ராட்டிரகூடர்கள் ஆக்கிரமித்துக்கொண்டதும்,பின் அரும்பாடுபட்டு அவர்களை அப்புறப்படுத்தியதும் நடந்தது.சாளுக்கியர்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தங்களது கொடியைப் பறக்கவிட்ட இந்த ராட்டிரகூடர்களின் கடைசிமன்னன் இந்திரா IV.

(பார்க்க படம் - ராட்டிரகூடப் பேரரசு)வாழ்க்கை மட்டுமல்ல ..வரலாறும் வட்டம் என்பதுபோல்,
கி.பி - 973-ல் தைலப்பா-II என்ற மேலைச்சாளுக்கிய மன்னன் இந்திரா-IV -ஐ வெற்றிகொண்டு ராட்டிரகூடத்தில் 240 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சாளுக்கியக் கொடி ஏற்றினான்.இத்துடன் ராட்டிரகூட வம்சம் சிதறிப்போய் விட்டது.
(இவ்வளவு விவரமாக இவர்களைப் பற்றிச் சொல்வதில் விசயம் இருக்கிறது.ஏனெனில்
இந்த தைலப்பா-II கி.பி 997-ல் இறந்துவிட்டபோது ஆட்சிக்கு வந்தவனே சத்யாசிரயன்.
தந்தையைவிட அடாவடித்தனத்தோடு சோழர்களுக்குத் தொல்லை தந்தவன்)

இந்த சாளுக்கிய நாடும் இரண்டாகப் பிளவுபட்டிருந்தது.
கல்யாணியைத் தலைநகராய்க்கொண்ட மேலைச்சாளுக்கியநாடு.வடபெண்ணை முதல் கிருஷ்ணா வரை கொண்ட வேங்கி தலைநகரான கீழைசாளுக்கியநாடு.

சரி! ராட்டிரகூடர்களை புறந்தள்ளி நம் ராஜராஜனிடம் வருவோம்!

(கி.பி 973-985 )உத்தமசோழன் 12 ஆண்டுகள் ஆட்சிசெய்து கி.பி 985-ல் மரணமடைந்தான்.மதுராந்தக கண்டராதித்தன் என்ற பெயரில் உத்தமசோழனுக்கு ஒரு மகன் இருந்தபோதிலும் கொடுத்த வாக்கின்படி அருண்மொழியே ஆட்சிக்கு வர ,இளைய மதுராந்தகன் கோவில் நிலங்களையும்,நிர்வாகங்களையும் கண்காணிக்கும் முக்கியப்பொறுப்பில் அமர்த்தப்பட்டான்.

அடுத்து அருண்மொழி அரியணை ஏறும்முன் , சட்டென
சோழநாட்டைச் சுற்றி அப்போது இருந்த நாடுகளை ஒரு நோட்டம் விடுவோம்!
(பார்க்க படம்:2)சோழநாட்டுக்குத் தெற்கே பாண்டியநாடு,அதற்கும் கீழே ஈழநாடு,மேற்குக்கரையில் மலைநாடு(சேரம்),அதை ஒட்டி கங்கபாடி,காவிரி தொடங்கும் குடகுநாடு,மைசூரை உள்ளடக்கிய தடிகைபாடி,மைசூருக்குக் கிழக்கே நுளம்பபல்லவர்கள் ஆண்ட நுளம்பபாடி(தும்கூர்,பெங்களூரு முதலிய பகுதிகள்!),வடக்கே சாளுக்கிய நாடு,கலிங்கநாடு என்ற அளவில் நாடுகளும்,அவற்றால் பகைகளும் சோழநாட்டைச் சூழ்ந்திருந்தன.

இந்நிலையில்தான்,
புறாவுக்காக சதைகொடுத்த சிபிச்சக்கரவர்த்தி,நீதிக்காய் மகனைத் தேர்க்காலில் கிடத்திய மனுநீதிச்சோழன்,இமயத்தில் கொடி பொறித்த கரிகாற்பெருவளத்தான் என அனைத்துப்புகழ்பெற்ற சோழச்சக்கரவர்த்திகளின் மொத்த உருவமாய்,
கி.பி 985-ஆம் ஆண்டு ஆடிமாதம் புனர்பூச நட்சத்திரம்(ஜூலை 18) அருண்மொழி வர்மன் ராஜகேசரி என்ற பட்டத்துடன் உலகப்புகழ் பெறப்போகும் இராஜராஜசோழனாக அரியணை ஏறினான்.

இனி செல்லுமிடம் எங்கும்... ஜெயக்கொடிதான்!


-தொடர்ந்து வருவான்

17 கருத்துகள்:

Kamal 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:19  

arumai...seekiram adutha part podunga :)

அன்பரசன் 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:13  

அருமையா கொண்டு போயிட்டு இருக்கீங்க நண்பா.

Seenu 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:17  

ஒருவேளை, ராஜராஜனும் மதுராந்தகனும் சேர்ந்து ஆதித்யனை கொண்றிருந்தால் [ஒப்பந்தம் - முதலில் மதுராந்தகன் ஆள பிறகு ராஜராஜன் அரியணை ஏற]. இந்தக் கருத்தில் எனக்கே உடன்பாடு இல்லைதான். ஆனாலும் வாழ்க்கையும் வரலாறும் நாம் நினைப்பதைவிட வேறாக எண்ணிலா திருப்பங்களை உடயதாகவே இருக்கின்றன.

நல்ல தொடர். வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:08  

வணக்கம் (வரலாறு) வாத்யாரே :))

Dr. சாரதி 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:16  

அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்

Chitra 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:41  

You should become a teacher to teach History. You are good at it.

♠புதுவை சிவா♠ 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:41  

அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் me too

:-)

ஹேமா 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:47  

ஆர்வமாய்க் காத்திருக்கிறேன் அண்ணாமலை.

அஹோரி 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:51  

தல .. ஒரே மூச்சில் அனைத்து பகுதிகளையும் படிச்சாச்சி. ரொம்ப காக்க வைக்காதீங்க, சீக்கரம் ஆகட்டும்.

siva 24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:20  

அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்

Ananthi 25 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:39  

நா ஹிஸ்டரி-ல கொஞ்சம் வீக்..
இருந்தாலும் முயற்சி பண்ணேன்.. :-)))

அண்ணாமலை..!! 25 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:59  

அனைவருக்கும் பணிவான நன்றிகள்!
____/\_____

SUREஷ் (பழனியிலிருந்து) 27 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 5:00  

//மதுராந்தக கண்டராதித்தன் என்ற பெயரில் உத்தமசோழனுக்கு ஒரு மகன் இருந்தபோதிலும் கொடுத்த வாக்கின்படி அருண்மொழியே ஆட்சிக்கு வர ,இளைய மதுராந்தகன் கோவில் நிலங்களையும்,நிர்வாகங்களையும் கண்காணிக்கும் முக்கியப்பொறுப்பில் அமர்த்தப்பட்டான்.//கொடுத்த வாக்கு என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா தல.,


அல்லது சரித்திர சிந்தனையாளர் என்ற சுதந்திரம்தான் காரணமா?

sweatha 15 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 2:00  

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்
வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம் .ஜீஜிக்ஸ் தளத்தை பற்றிய ஒரு ப்ளாகரின் விமர்சனத்தை காண இங்கே கிளிக் செய்யவும் http://adrasaka.blogspot.com/2010/08/500.html

ஆதிரா 4 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:12  

பயனுள்ள பதிவு.. அறியாத செய்திகளைத் தொடர்ந்து தருவதற்கு நன்றி.
உயிரின் ஆதார சுருதியான அன்பும், அமைதியும் இன்பமும் வாழ்வில் நிறைந்திருக்க.. இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்..அண்ணாமலை

செல்வமுரளி 29 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:12  

அருமையான பதிவுகள் ,,, தொடர்ச்சியாக எழுதுங்கள்.......

bhuhari 23 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 3:25  

commendable job sir couple of points.

Madhurandhagan means "the destroyer of madurai" and Rajarajan took over the kingdom from utthama cholan as he retired (not dead). The reason is said to be his losses against western chalukyas. If possible try neelakanda shastris cholas and sadhasiva pandaratthar works on chloas

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!