புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

மன்னாதிமன்னன்- இராஜராஜசோழன்! (பகுதி-2)

பகுதி 1 இங்கே -> வீழ்ச்சிகளும்,எழுச்சிகளும்!


விழித்துக்கொண்ட பேரரசு - திருப்புறம்பியம் போர்!

சோழனும் சரி! பாண்டியனும் சரி! சேரனும் சரி! தங்கள் கைகள் ஓங்கும்போதெல்லாம் தங்களுக்குள் அடித்துக்கொண்டார்களே தவிர,தமிழகத்தைத் தாண்டிச் சென்று பிறபகுதிகளைக் கைப்பற்றுவதை கற்பனையிலும் நினைக்கவில்லை.தமிழகத்தை முழுவதும் ஆளவேண்டும் என்பதே அவர்கள் எண்ணமாக இருந்தது.மூவேந்தர்களும் இணைந்து ஒரு பேரரசை ஏற்படுத்தியிருந்தால் முழு இந்தியாவையும் கைக்கொள்ளும் மூளையும்,பலமும் நம்மவர்களிடம் நிறையவே இருந்தது.

ஆனால், வலியச்சென்று தாக்குவதை அவர்கள் விரும்பவில்லை.தங்கள்,தங்கள் பகுதிகளைக் காத்துக்கொள்ளக் கட்டமைத்தவர்கள் அடுத்த நாட்டினைக் கைப்பற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.அவர்களின் அதிகபட்ச இலக்கு முழுத்தமிழகமே!

சேரன், சோழனுடனோ அல்லது சேரன்,பாண்டியனுடனோ சேர்ந்து கொண்டு மற்றவரை எதிர்ப்பதே வாடிக்கையாக இருந்தது.இதுபோன்ற நிலையில்தான் ,ஆட்சிப்பொறுப்பேற்ற ராஜராஜன் கிட்டத்தட்ட இன்றைய பீகார் வரை படையெடுத்து வெற்றி கண்டான்.அதற்கு முன்,

ஆண்டு கி.பி 848. ஆட்சிக்கட்டில் ஏறினான் விஜயாலய சோழன்(பரகேசரி என்ற பட்டத்துடன்!)இதற்குப் பின் வந்தவர்கள் தங்களது பெயர்களுடன் பரகேசரி,இராஜகேசரி போன்ற பட்டங்களை சேர்த்துக் கொண்டனர்.

அந்நேரம் சிற்றரசாக உறங்கிக்கிடந்தது சோழ அரசு. தஞ்சை மற்றும் அருகிலிருந்த சில வளமான பகுதிகளை பாண்டியர்களுக்குக் கட்டுப்பட்ட முத்தரையர்கள் ஆண்டு வந்தனர்.இந்த முத்தரையர்களை அகற்றிவிட்டு அந்தப் பகுதிகளைத் திறமையாகக் கைப்பற்றினான் விஜயாலயசோழன்(கி.பி 848-871)
(பார்க்க படம்:1)பாண்டியர்களும்,பல்லவர்களும் முனைப்போடு தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலம்.இருவருக்கும் இடையிலான தொடர்ச்சியான போர்களினால் இரு நாடுகளிலும் குழப்பம் மிகுந்திருந்தது.

நிருபதங்க பல்லவன் ஆட்சிக்குவர பாண்டியனும், அபராஜித பல்லவன் ஆட்சிக்கு வர சோழனும் உதவிபுரிய வந்தார்கள்.கங்க நாட்டு மன்னனாகிய பிரதிவீபதியும் அபராஜித பல்லவனுக்குத் துணையாக வந்தான்.

இருபடைகளுக்கும் இடையே திருப்புறம்பியம் எனும் இடத்தில் போர் மூண்டது.பலநாட்கள் தொடர்ந்த போரில் (பிற்பாடு வரப்போகும் சோழசாம்ராஜ்யத்துக்கான மிக முக்கிய திருப்புறம்பியம் போர் இதுதான்!) சோழர்கள் சார்ந்த அபராஜித பல்லவன் படை வெற்றிபெற்றது.
பாண்டியர்களும், நிருபதங்க பல்லவனும் தமிழகத்தின் வட பகுதிகளிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர்.
இந்தப் போரில் ஒரு மெய்சிலிர்க்கும் வீரச்செயலும் சொல்லப்படுவதுண்டு.

அபராஜித பல்லவனுக்குத் துணைபோன சோழர்படை அடிமேல் அடிவாங்கி தோற்கும் நிலை.அங்குப் படைகளின் போரைக் காண வந்த விஜயாலயசோழன் இந்த நிலையைக் கண்டான்.இருகைகளிலும் வாளேந்தி படைவீரர்களின் தோளில் அமர்ந்து சென்று(இருகால்களும் செயல் இழந்திருந்த நிலையில்!) நாலாபக்கமும் வாளைச் சுழற்ற சிதறி வீழ்ந்தன எதிரிகளின் தலைகள்.இதைக் கண்டு வீராவேசமடைந்த சோழர்படை எதிரிப்படைகளை முன்னேறித் துவம்சம் செய்தது என்பதும் செவிவழிச் செய்திகள்.

இப்போருக்குப் பின் அபராஜித பல்லவனுக்கு பல்லவநாட்டின் அரசனாக முடிசூட்டப்பட்டது.போரில் அதிகபட்ச வீரம் காட்டிய கங்க நாட்டு மன்னன் பிரதிவீபதி வீரமரணமடைந்தான்.ஆனால் இந்தப் போர்களினாலும்,பிளவுகளினாலும் பல்லவர்படை வலுவற்று இருந்தது உண்மை.

அடுத்த சில ஆண்டுகளிலேயே ராஜதந்திரமாக கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அபராஜித பல்லவனைக் கொன்று பல்லவநாட்டையும் சோழதேசத்துடன் இணைத்தான் விஜயாலயசோழனின் புதல்வனாக ஆட்சிக்குவந்த முதலாம் ஆதித்தன்(கி.பி-871-907)

இப்போது தொடங்கிய இந்தப் பிற்கால சோழராட்சியில் விஜயாலய சோழனைத் தொடர்ந்து முதலாம் ஆதித்த கரிகாலனும் அவனைத் தொடர்ந்து பராந்தக சோழனும்(கி.பி 907-950) ஆட்சிக்கட்டில் ஏறினார்கள்.

பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தில் ஆட்சியை மேலும் விரிவாக்கும் எண்ணத்துடன் பாண்டியமன்னன் ராஜசிம்மனுடன் போரிட, பாண்டியனுக்கு ஆதரவாக இலங்கையின் ஐந்தாம் காசியபன் படைகொண்டு வர, இருபடைகளையும் ஏககாலத்தில் வெற்றிகண்டான் பராந்தக சோழன்.ஆனாலும், தனது மணிமுடியை இலங்கைமன்னன் காசியபன் வசம் பாண்டியமன்னன் ஒப்படைத்ததால் அதனைக் கவர்வதற்காக இப்போதிலிருந்து தொடங்கியதுதான் இலங்கையுடனான சோழர்களின் போர்.

பராந்தக சோழனுக்குப் பிறகு ஆட்சிக்குவந்த கண்டராதித்தர்(கி.பி 949-958) ஆட்சியின் மீது பிடிப்பு அற்றுப்போய், தனது தம்பி அரிஞ்சய சோழனுக்கு அடுத்து பட்டத்தை சூட்டினான்.கண்டராதித்த சோழன் போர்களை விரும்பாமல், இறைவழிபாட்டில் மனதைச் செலுத்த சோழர்பகுதிகள் ஒவ்வொன்றாக எதிரிகள் வசமாகத் தொடங்கியது.
அரிஞ்சய சோழன்(கி.பி 956-957) எதிரிகள் வசமிருந்த பகுதிகளை மீட்க முயன்று அதில் தோல்வியே கண்டான்.

அடுத்து இவனுடைய மகன் சுந்தரசோழன் (கி.பி 956-973) ராஜகேசரி என்ற பட்டத்துடன் ஆட்சிக்கு வந்தான்.கண்டராதித்தரின் புதல்வன் மதுராந்தகன் சிறுவயது என்பதால், தானே ஆட்சிப்பொறுப்பேற்றான் இந்த அரிஞ்சய மைந்தன்.சுந்தரசோழனின் ஆட்சியில் விரிவுபெறத் தொடங்கியது சோழநாடு.

சுந்தரசோழனின் கீழ் சோழநாடு(படம்:2)


இவனுக்கு மூன்று குழந்தைகள்.ஆதித்த கரிகாலன்,குந்தவை,அருண்மொழிவர்மன்.
சுந்தரசோழனின் ஆட்சியில் சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலன் தலைமையிலான சோழர்படை வீரத்துடன் போரிட்டு வீரபாண்டியனுடைய தலை கொய்யப்பட்டது.அடுத்து வடக்கே காஞ்சிப் பகுதிகளில் தொடர்ந்து தொல்லை தந்து கொண்டிருந்த ராட்டிரகூடர்களை அடக்கக் கிளம்பினான் (இரண்டாம்)ஆதித்த கரிகாலன்.

தீராப்பகையுடன் இருந்த இலங்கையை வெற்றிகொள்வது சுந்தரசோழனின் வெகுவான ஆவலாயிருந்தது.ஆதித்தன் வடபகுதிகளில் போர்களில் இருந்ததால், இலங்கைகுப் படையெடுத்துச் செல்ல தந்தையால் அனுப்பப்பட்டவன் தான் 19 வயதே நிரம்பிய அருண்மொழிவர்மன் எனும் ராஜராஜசோழன்!

-தொடர்ந்து வருவான்.

23 கருத்துகள்:

வெறும்பய 18 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:11  

ஆரம்பமே அமர்களப்படுத்துகிறது... ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்கு...

Chitra 18 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:22  

இந்த மாதிரி வரலாற்றுப் புத்தகத்திலும் கதை மாதிரி சொல்லி இருந்தால், ஒழுங்கா படிச்சு இருந்து இருப்பேனோ என்னவோ? நல்லா எழுதுறீங்க.

கலாநேசன் 19 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:38  

ரத்தினச் சுருக்கமாய் வரலாறு. தொடர்ந்து கலக்குங்க....

சைவகொத்துப்பரோட்டா 19 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:11  

பள்ளி நாட்களை நினைவிற்கு கொண்டு வருது இந்த வரலாறு.

அண்ணாமலை..!! 19 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:54  

@ வெறும்பய,

@ Chitra,

@ கலாநேசன்,

@ சைவகொத்துப்பரோட்டா,


எல்லாருக்கும் ரொம்ப நன்றிங்கோவ்!!!

Balaji saravana 19 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:18  

அருமையான தொகுப்பு அண்ணாமலை!
தொடர்ந்து கலக்குங்க :)

Balaji saravana 19 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:20  

இன்ட்லில இணைக்கலியா?

ers 19 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 1:21  

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

அண்ணாமலை..!! 19 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 1:22  

@ Balaji saravana,

ரொம்ப நன்றிங்க நண்பரே!

இணைத்துவிட்டேன்!

அண்ணாமலை..!! 19 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 1:25  

@ ers,

நன்றிங்க!
இணைத்துவிடலாம்!

periyar 19 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 1:32  

கண்டிராதிதம் மண்ணில் பிறந்தவன் என்பதை சொல்லிகொள்வதில் பெருமழ்ச்சி அடைகிறேன் ,,,,,,, இதுபோன்ற வரலாற்றை எழுதுவதன் மூலம் சோழன் மாட்டுக்கறி தின்றவன் என்ற விபசார( செல்வாராகவன் என்னும் வரலாறு தெரியாது பன்னிக்கு ) கூட்டங்களுக்கு பதில் சொல்லுவோம் ....
உங்கள் கட்டுரைகள் வரவேற்கபடுகிறது ....

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி 19 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 1:40  

சரித்திரங்கள் சிலவற்றை மட்டுமே பதிவு செய்து இருக்கின்றன..அதில் ராஜராஜ சோழனும் இடம் பெறுகிறார்.. பதிவு செய்யப் படாத எத்தனையோ மாமனிதர்கள்(மன்னர்கள் இல்லை) வாழ்ந்து இருக்கிறார்கள்..அவர்களையும் அடையாளம் காட்ட வேண்டும். நன்றி..

அண்ணாமலை..!! 19 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 1:48  

@ periyar,

பெருந்தலைவரின் பெயர்கொண்ட நண்பரே! தங்களது கருத்துகளைக் கூற தங்களுக்கு முழு உரிமையுண்டு!
ஆனால், தனிமனித விமர்சனம்
வேண்டாமே ப்ளீஸ்!
நன்றிகள்!


@ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி,

நன்றி நண்பரே தங்களின் கருத்துகளுக்கு!
நீங்கள் கூறிய அந்த எத்தனையோ மனிதர்கள் வாழ்ந்தார்கள்..!
பதிவுகள் செய்யாமல் இன்னும் வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள்!

Dr. சாரதி 19 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 2:38  

அருமை.....கல்கியின் பொன்னியின்செல்வனை வாசித்த சுகம்........இன்னும் நிறைய எழுதுங்கள்.................ஆவலுடன் காத்திருக்கிறேன்

Robin 19 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 2:45  

நல்ல பதிவு.
எனக்கும் வரலாறு படிப்பதில் ஆர்வம் உண்டு.
நன்றி.

ஜோதிஜி 19 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:37  

முந்திக் கொண்டு விட்டீர்கள். வெகு விரைவில் இது போல் உண்டு.

மோகன்ஜி 19 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:35  

அண்ணாமலை சார்! நல்ல துவக்கம்.முடிந்தவரை ஆதாரக் குறிப்புகளை கடைசியில் இணைக்க முயலுங்கள். வாழ்த்துக்கள். ஆவலுடன்

SurveySan 19 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:20  

அருமையான விவரங்கள். தூள் சாரே.

அண்ணாமலை..!! 20 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 2:19  

அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
___/\___

♥♪•வெற்றி - VETRI•♪♥ 20 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:37  
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
siva 24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:16  

:)

SUREஷ் (பழனியிலிருந்து) 27 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 5:03  

//சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலன் தலைமையிலான சோழர்படை வீரத்துடன் போரிட்டு வீரபாண்டியனுடைய தலை கொய்யப்பட்டது//


ஃபுட் பால் விளையாடியதாக கல்கி எழுதியிருக்கிறார் அண்ணாச்சி

ஜீவன்சிவம் 16 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:43  

அருமை. நண்பருக்கு ஒரு வேண்டுகோள் முடிந்தவரை உண்மை தகவல்களை தரவேண்டும். ஆதாரங்களின் தொகுப்பை அவ்வப்போதோ இல்லை கட்டுரை முடிவிலோ கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!