புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

சேதுவை மேடுறுத்தி பீதி சமைப்போம்!!!!னிதரை மனிதர் கொல்லும் நோய்க்கு
மருந்தொன் றிங்கு வேண்டும்!
மீனவர் வாழ்வும் மானிட வாழ்வென
மாற்றார் புரிந்திட வேண்டும்!

புனிதர்கள் என்றே யாரும் இங்கிலர்
புரிந்திடல் நன்றே யாகும்!
குனிந்திடக் குனிந்திடக் கொட்டுதல் முறையோ?
கேட்கவும் நாதியு மிலையோ?

திரிகள் என்றே அழைப்பவர் கூட
இப்படிச் செய்திட மாட்டார்!
புதிராய் இருக்குது புரியவும் மறுக்குது
பூனைக்கு மணியும் இலையோ?

னியொரு மனிதனுக் குணவில் லையெனில்
செகத்தினை அழித்திடச் சொன்னார்!
இனியொரு மனிதன் அழிந்திடும் போதும்
இப்படித் தானா இருக்கும்?

ட்டுகள் மட்டும் போதுமிங் கென்றால்
ஓலம் தொடர்ந்திடச் செய்யும்!
வீட்டுக்குள் துயரம் வந்ததாய் நினைத்து
விரட்டிட முனைவோம் வாரீர்!

நமது மீனவர்களுக்காக நாம் நகர்த்தும் ஓர் கோரிக்கைக்கப்பல்!

*****

தொடுப்பு:

சேதுவை மேடுறுத்த
செங்கற்கள் தேவையில்லை!
செத்த மீனவனின்
உடல்களே போதுமானது!

3 கருத்துகள்:

மோகன்ஜி 28 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:06  

//சேதுவை மேடுறுத்த
செங்கற்கள் தேவையில்லை!
செத்த மீனவனின்
உடல்களே போதுமானது!//

உள்ளத்தை பதற வைத்து விட்டீர்கள்

♔ம.தி.சுதா♔ 1 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 8:50  

தலைப்பே ஒரு பெரிய கவிதைங்க.. அருமை...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
காணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.

அண்ணாமலை..!! 10 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 6:53  

@ மோகன்ஜி,

எனக்கும் அந்த பதற்றம் உண்டு நண்பரே!


@ ♔ம.தி.சுதா♔

நன்றி நண்பரே!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!