*
கொள்கைகள்!
கைராட்டைக்குப்
போர்த்த
கம்பெனிக் கம்பளி!
********************
இப்போதெல்லாம்
பூங்காக்களிலும்..
கடற்கரையிலும்
பண் பாடுகிறது!
நமது பண்பாடு!
********************
கலைமகளை
பேரம் பேசினர்!
கல்விக்கட்டணம்
எனும் பெயரில்!
********************
நகை செப்பனிடுகிறான்..
கிழிந்த உடையுடன்..
பொற்கொல்லன்!
********************
நீரின்றி அமையாது உலகு..!
வள்ளுவன் ஞானி!
தெருக்கள் தோறும் கடைகள்!
********************
அவ்ளோதாங்க...
இதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்லீங்க!
சில (க)விதைகள் (2)
இடுகையிட்டது
அண்ணாமலை..!!
at
திங்கள், 21 ஜூன், 2010
லேபிள்கள்: சில (க)விதைகள்
15 கருத்துகள்:
நீங்க கூட ஞானி.. ஆமாம் எந்த தண்ணின்னு சொல்லலியே ???? ;-)
அண்ணாமலை...சொன்ன வரைக்குமே நிறைவா...நிறைய இருக்கு.
யோசிக்க வைக்குது.
நீரின்றி அமையாது உலகு..!
வள்ளுவன் ஞானி!
தெருக்கள் தோறும் கடைகள்!
..... correcttu!!!!
கலைமகளை
பேரம் பேசினர்!
கல்விக்கட்டணம்
எனும் பெயரில்!//
நச்!
எல்லா கவிதையும் மிக கலக்கல்.
வாழ்த்துக்கள்.
@ ருத்ர வீணை®
ஆகா!
உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதாக்கும்??
:)
@ ஹேமா
நிறைவா இருந்தா ரொம்ப மகிழ்ச்சிங்க!
@ Chitra
கரீட்டு- இல்ல..
தப்பே!!!
:)
@ சி. கருணாகரசு
தோழர்!
ரொம்ப நன்றிங்க!
டாஸ் மார்க் கான்செப்ட் ரொம்ப நல்லா இருக்குங்க....
///
இப்போதெல்லாம்
பூங்காக்களிலும்..
கடற்கரையிலும்
பண் பாடுகிறது!
நமது பண்பாடு!///
இதுவும் ரொம்ப நல்லா இருக்குங்க...
//கைராட்டைக்குப்
போர்த்த
கம்பெனிக் கம்பளி//
இத்தாலிய இறக்குமதி கம்பளி
//இப்போதெல்லாம்
பூங்காக்களிலும்..
கடற்கரையிலும்
பண் பாடுகிறது!
நமது பண்பாடு! //
ரொம்ப சூப்பரா இருக்கு :-))
//நகை செப்பனிடுகிறான்..
கிழிந்த உடையுடன்..
பொற்கொல்லன்! //
இதுவும் ரொம்ப நல்லா இருக்கு...
ஆனா.. வருத்தமா இருக்கு.. சரியா சொன்னிங்க..!!
@ கமலேஷ்
ரொம்ப நன்றிங்க!
@ vasan
//இத்தாலிய இறக்குமதி கம்பளி //
ஹஹ்ஹா..
@ Ananthi
ரொம்ப நன்றிங்க!
எல்லாமே மிகவும் நிதர்சனமா அருமையா இருக்கு...
1. இந்தியாவின் அவல நிலைமை...
2. நினைக்க புண்படுகின்றது மனம்...
3. காசே தான் கடவுளடா...
4. உண்மையான முரண்பாடு...
5. முக்காலத்தை அறிந்தவன்...
படிக்கின்ற சமயம் மனதில் தோன்றியது...
உங்க விமர்சனம் ரொம்பவே
ரசிக்கும்படியா இருக்கு வாசன்!
நன்றிகள்!
கவிதைகள் அனைத்தும் அற்புதம்..
ஒவ்வொன்றும் யதார்த்தமான இன்றைய சமூக நிலையை சொல்கிறது..
ரொம்ப நன்றிங்க நண்பரே!
கருத்துரையிடுக