புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

கல்விக்கண் திறந்ததின்று!


ல்விக்கண் திறந்த தின்று!
கார்மேகம் திரண்டதின்று!
கர்மவீரர் பிறந்ததின்று!
காமராசர் உதித்ததின்று!
சூரியனோ டொப்பிட்டால்
சூரியனோ ஒளியிழக்கும்!
மாரியினோடொப்பிட்டால்
மழைநீரோ வற்றிநிற்கும்!

ஒப்புவமை இல்லாத
உயர்வான ஒருபொருளை
எப்பொருளோ டொப்பிடுவேன்
இயலாது திகைத்துநிற்பேன்!
காமராசர் ஆட்சி செய்ய
கலகங்கள் துடைத்து நிற்க
நூறுபேரின் வாய்திறக்கும்
நின்முகமோ பசியாற்றும்!

குன்றாத புகழ்வாய்ந்த
எம்.சி.ஆர் அன்று சொன்னார்
அண்ணா- என் வழிகாட்டி!
காமராசர் - என் தலைவர்!
ஆயிரம்பேர் அய்யாவின்
ஆட்சி செய்யத் துடித்திடலாம்!
தனக்குவமை இல்லாத
தலைவர் காமராசர்தான்!

அய்யன் காமராசர் வந்த
அருமையான இந்நாளில்
அவரை வணங்கி நிற்க
அழகுபெறும் நம்வாழ்வும்!

தனக்குவமை இலாத அருந்-
தலைவரவர் தாள்பணிவோம்!படிக்காத மேதை அவர்களின் அரிய புகைப்படங்களும்,தகவல்களும் இங்குள்ளன.
http://kamarajar.blogspot.com/
நன்றிகள்!

12 கருத்துகள்:

vijayan 15 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 11:37  

அண்ணல் காந்தியை போல ,ஆச்சாரியன் இராமானுசர் போல நம் தலைவரும் என்றென்றும் ஏழைகள் மனதில் வாழுவார்.

ஜில்தண்ணி - யோகேஷ் 15 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 1:05  

//சூரியனோ டொப்பிட்டால்
சூரியனோ ஒளியிழக்கும்!
மாரியினோடொப்பிட்டால்
மழைநீரோ வற்றிநிற்கும்!//

அருமையான ஒப்பீடு

தன்னிகரில்லா மனிதருக்கு தலைவணங்குகிறேன்

வைகறை நிலா 15 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 4:37  

அற்புதமான தலைவரைப் பற்றி
அருமையான கவிதை.

//சூரியனோ டொப்பிட்டால்
சூரியனோ ஒளியிழக்கும்!
மாரியினோடொப்பிட்டால்
மழைநீரோ வற்றிநிற்கும்!//
அருமையான வரிகள்.

பிரசன்னா 15 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 6:33  

கவிதைக்கு நன்றி..

அக்பர் 15 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 6:57  

அவரின் புகழ் என்றும் மறைவதில்லை.

ஹேமா 16 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 3:35  

மனிதம் நிறைந்த மனிதர்கள்.
நினைத்துகொள்வோம்.

Ananthi 16 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 9:53  

தகுதி உள்ள தலைவருக்கு, நீங்கள்
தந்த வரிகள் அழகு.. :-)

Ananthi 16 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 9:53  

உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))

http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html

அண்ணாமலை..!! 17 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 10:28  

அனைவருக்கும் நன்றிகள்!
___/\___

தஞ்சை.வாசன் 20 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 1:28  

தங்கள் வரிகள் கர்ம வீரருக்கு புகழ் சேர்க்கும் வகையில் மிகவும் அருமையாய்...

மகிழ்ச்சியும் & நன்றியும்...

vasan 20 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 4:22  

த‌லைவ‌ரின் தாய் ம‌றைவுக்கு, என் அப்பா 50 மைல்
ப‌ஸ்ஸில், த‌ன் உற‌வின் இழ‌வாய் போய் வ‌ந்த‌து நினைவில்.
‌முக்கால்கை ச‌ட்டைய‌ணிந்த முட்டிவ‌ரை நீண்டகை கொண்ட‌
கருத்த‌ என் பெருங்க‌ட‌வுள் காம‌ராஜ‌,மாகாராஜா தான்.

அண்ணாமலை..!! 21 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 5:09  

ரொம்பவே நன்றிகள்!
___/\___

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!