புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!
"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசைப் பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு"


கவியரசரின் இந்தப் பாடலை கேட்காதாரும், விரும்பாதவர்களும் யாருமில்லை.
பாட்டிற்குப் பொருள்கொள்ள விரும்பினால்
கவியரசர் அவர்கள்,
மதுவில் தான் குடியிருப்பதாகவும், அந்நேரம் ஒரு மங்கையைத் துணை வைத்திருப்பதாகவுமே எளிதில் கண்டுகொள்ள முடியம்.இதில் மறைபொருளாக இன்னொரு பொருளும் அடங்கி இருப்பதை நான் நண்பர் உயர்திரு.ராமகிருஷ்ணன் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அறியமுடிந்தது.

மறைபொருள் இதுதான்..
அந்நாளிலே மைப் பேனாவைக்கொண்டே எழுதப் பயன்படுத்தியதால் அந்த மை புட்டியைத் தான்
ஒரு கோப்பை என்றும், அதிலேதான் தனது கருத்துகள் குடிகொண்டு வாழ்வதாகவும்,
கோலம் வரையும் மயிலாகப் பேனாவை உருவகப்படுத்தி அதுவே அவர்கையில் நாளும் துணையிருப்பாய் இருந்ததாகவும் இருபொருள்படக் கூற விரும்பிய கவியரசர் அவர்கள் மேற்கண்டவாறு எழுதியிருக்கின்றார்.
அதாவது, கோப்பையை மைபுட்டி-யுடனும்
கோலமயிலை - பேனாவுடனும் ஒப்பிட்டிருக்கிறார். ஆனால், இருபொருள் தொனிக்கும் வகையில்!
இன்னும் கவியரசரோட என்னென்னப் பாட்டுக்கெல்லாம் என்னென்ன அர்த்தம் இருக்குதோ???

********************************

ண்பனுடன் இணைய நிலையத்திற்கு(பிரௌசிங் சென்டர்-தான். சரியா இருக்கா?!)சென்றிருந்தேன்.வேலை முடிந்து பணத்தைக் கட்டிவிட்டுக் கிளம்பும்போது, கடைக்காரர் மீதப்பணமாக ஒரு 20ரூ நோட்டைக் கொடுக்க,
நண்பன் 20ரூபாய்க்குப் பதில் இரண்டு 10 ஆகவே கொடுத்துவிடுங்கள் என்றான்.
ஏற்கனவே இவன் பையில் சில்லரைகள் பிதுங்கியிருக்க எதற்கு இப்படிக் கேட்கிறான் என நினைத்தவாறே நான் அவனை வினவ..
சொன்னான்..

"நோட்டு கிழிஞ்சிருக்கு..வேற நோட்டுக்குடுங்க - ந்னு சொன்னா அவன் மனசு வருத்தப்படும். அதனாலதான் இரண்டு 10 ஆகக் கேட்டுவிட்டால் ஏதோ தேவை போலிருக்கிறது-ந்னு அவன் கொடுத்து விடுவானில்லையா.எந்தப் பிரச்சினையும் இல்ல பாரு!" என்றான்.

இல்லைன்னு சொல்லிட்டாருன்னா..??
நான் கேட்க,
"நம்ம கண்ணு முன்னாடிதான ட்ராயரை ஓப்பன் பண்ணுணான்.கண்டிப்பா நாம பார்த்திருப்போம்-ன்னு அவனுக்குத் தெரியும்" என்றான்.
சில்லரையை வாங்க்க்கொண்டு அவனுடன் 'நடைபயின்றேன்'.

**********************************************

னது நண்பர்களுக்குக் கொஞ்சம் தமிழ்பக்தி அதிகம்.அதிலும் சிலபேர் உரக்கத் தமிழ்பேசி, புழக்கத்திலேயே அதிகமில்லாத (புளகாங்கிதம்! போன்ற) வார்த்தைகளைப் பயன்படுத்தி சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பார்கள்.பாடல்களில் 'ழ'கர உச்சரிப்புகள் சற்றுத் தூக்கலாகவே இருக்கும்.மின்னியல்துறையில் வேலைசெய்யும் நமது நண்பர் 'ழ'கரப்புகழ் சுரேஷ் என்பவர்...வெகுநாளாக வேலைக்கு அழைத்தும் வரமறுத்த அவருடைய நண்பரான சப்-காண்ட்ராக்டர் ஒருவரை,

ஒரு வாரமா போன் செய்றேன்.எங்கப்பா போன? என ஆரம்பித்துக் கோபமாகி ஏகத்துக்கும் விளாசத்தொடங்க,
பேச்சை இடைமறித்த அந்த சப்-காண்ட்ராக்டர் சொன்னார்.
"சுரேஷு இதைக்கேளுங்க.ஒரு நல்ல கவிதை. தலைப்பு இதுதான்
"பொறுமை!"

தண்ணீரையும் சல்லடையில் எடுத்துச் செல்லலாம்.
அது பனிக்கட்டியாகும்வரை
பொறுமையிருந்தால்!


அதுனால கொஞ்சம் பொறுமையா இருங்க சுரேஷு..என சொல்லிவைக்க..
வெறுத்துப்போன நம் நண்பர்.எவ்வளவு சொல்றோம்.கவிதையா சொல்ற நீ என்றபடி..
கொஞ்ச நேரம் பேசிவிட்டுக் கிளம்ப எத்தனித்த காண்டிராக்டரக் கையமர்த்தியவர்.."நான் ஒரு கவிதை சொல்றேன்.நீங்க கேளுங்க" என்றார்.
தலைப்பு இதுதான்
“காலதாமதம்.”

தண்ணீரையும் சல்லடையில் எடுத்துச் செல்லலாம்.
அது பனிக்கட்டியாகும்வரை
பொறுமையிருந்தால்!ஆனால்,
அந்தப் பனிக்கட்டியும் மீண்டும் தண்ணீராகிவிடும்
சற்றே காலதாமதித்தால்!


யோவ்...உனக்கு எத்தனை மணிக்கு வரனும்னு சொல்லு.4 மணிக்குத் தான சொன்ன..3 1/2க்கே வர்ரேன் ஆளை விடு! என சப்-காண்ட்ராக்டர் நொந்து கிளம்பினாராம்.

**********************************************

ம்மகிட்ட உள்ள கெட்டப்பழக்கமே எதையாவது பார்த்தால், படித்தால் நாமும் அதுபோலவே செய்ய வேண்டும் என சாட்டையைச் சொடுக்குவதுதான்.
காளமேகப்புலவரின் பாடல்களில் அவர் இகழ்வது போலக் கடவுளர்களைப் புகழ்ந்து பாடியவை மிகப்பிரசித்தி பெற்றவை.
இதைப்படித்ததிலிருந்து கை அரிப்பு உண்டாகி நாமும் முயன்று..
காளமேகம் பொறுத்தருள்வாராக..
கண்ணனைப் பற்றி..!

கொண்டலாய் வண்ணமும் பொன்முடி அற்றுமே
சின்னமயில் தன்னினதுத் தோகையைக் - கொண்டிலங்கும்
கண்ணா உனக்குநாளும் கள்வனென்று வேறுபெயர்
பின்னெப்படிப் பெண்கொடுப் பார்!


கொண்டல்-மேகம்
கொண்டிலங்கும்-கொண்டு விளங்கும்
*******************************************

5 கருத்துகள்:

Chitra 30 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 7:08  

கொண்டலாய் வண்ணமும் பொன்முடி அற்றுமே
சின்னமயில் தன்னினதுத் தோகையைக் - கொண்டிலங்கும்
கண்ணா உனக்குநாளும் கள்வனென்று வேறுபெயர்
பின்னெப்படிப் பெண்கொடுப் பார்!


....புல்லரிச்சு போச்சு....

ஹேமா 31 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 2:09  

கண்ணன் கவிதை நல்லாத்தானே இருக்கு அண்ணாமலை !

இளம் தூயவன் 31 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 5:14  

தண்ணீரையும் சல்லடையில் எடுத்துச் செல்லலாம்.
அது பனிக்கட்டியாகும்வரை
பொறுமையிருந்தால்!

நல்ல வரிகள்.

அண்ணாமலை..!! 31 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:25  

@ Chitra,

அப்புடியா சொல்றீங்க! :)


@ ஹேமா,


நீங்களே நல்லாயிருக்குன்னு சொல்லிட்டீங்க!
அப்ப ஓ.கே!


@ இளம் தூயவன்,

ரொம்பவே நன்றிங்க நண்பரே!

Kiran J 28 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:47  

தண்ணீரையும் சல்லடையில் எடுத்துச் செல்லலாம்.
அது பனிக்கட்டியாகும்வரை
பொறுமையிருந்தால்!ஆனால்,
அந்தப் பனிக்கட்டியும் மீண்டும் தண்ணீராகிவிடும்
சற்றே காலதாமதித்தால்!

நல்லா இருக்கு நண்பரே... நேரம் கிடைத்தால் என் வலைப்பதிவுக்கு வாருங்கள்... kirankavithaigal.blogspot.com

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!