புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

சில (க)விதைகள்.. (ஆடி-5)

*
மூடன்!

ஆண்டவனை
முதியோர் இல்லத்தில்
விட்டு விட்டு..
ஆலயங்கள் தோறும்
தேடல்!

****************************

சகுனம்!

ஓடிய
பூனை
நின்றது.
மனிதன்..
வருகிறான்!

****************************

இதனையும் கவிதை எனலாமா?

அன்று
இளமையில் கல்..
இன்று
இளமையில் க'ள்'..

****************************

விலங்குகள்!

சிந்திக்க மறந்த
விலங்குகள்..
விலங்குகளாகவே ஆயின..
சிந்தித்த மனிதவிலங்கிற்கு
சிந்திப்பே
விலங்குமானது!

****************************

மாற்றம்(?)

அனலடித்த
ஓர்
வெயில்நாளில் கண்டேன்..
வெளிநாட்டுக்காரனின்
கையில்
இளநீரும்..பதநீரும்..!
நம்மூர்க்காரனிடம்
கோக்கும்..பெப்சியும்!

****************************


நன்றிகள்!

14 கருத்துகள்:

Prasanna 21 ஜூலை, 2010 அன்று 5:59 PM  

இப்படி குட்டி குட்டியாக இருப்பது அருமை.. சகுனம்,விலங்குகள்,மாற்றம் -
இது மூன்றும் ரொம்ப பிடித்து உள்ளது..

VELU.G 21 ஜூலை, 2010 அன்று 6:48 PM  

நல்லாயிருக்குங்க

கமலேஷ் 21 ஜூலை, 2010 அன்று 7:57 PM  

///மாற்றம்(?)

அனலடித்த
ஓர்
வெயில்நாளில் கண்டேன்..
வெளிநாட்டுக்காரனின்
கையில்
இளநீரும்..பதநீரும்..!
நம்மூர்க்காரனிடம்
கோக்கும்..பெப்சியும்!///


எல்லாமே ரொம்ப நல்ல இருக்கு நண்பா...மாற்றம் ரொம்ப பிடிட்சிது.

தோழி 21 ஜூலை, 2010 அன்று 9:10 PM  

நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள்...

தூயவனின் அடிமை 21 ஜூலை, 2010 அன்று 10:53 PM  

ஆண்டவனை
முதியோர் இல்லத்தில்
விட்டு விட்டு..
ஆலயங்கள் தோறும்
தேடல்!

இன்றைய தலைமுறை பெற்றோர்கள் விசயத்தில் செய்யும் பெரிய தவறு.

அண்ணாமலை..!! 22 ஜூலை, 2010 அன்று 10:44 AM  

@ பிரசன்னா,

சொல்லிட்டீங்கள்ள ! என்ன நடக்குதுன்னு பாருங்க!
:)


@ VELU.G,

ரொம்ப நன்றிங்க!


@ கமலேஷ்,

மாற்றமோ.?நாகரிகமோ?
என்னென்னமோ சொல்றாங்க..!
நாம என்னத்தைக் கண்டோம் நண்பரே!


@ தோழி,

பெரியவங்க வாழ்த்தறீங்க!
ரொம்ப நன்றிங்க தோழி!


@ இளம் தூயவன்,

இருக்குறவங்களுக்கெல்லாம் வயசாகவே ஆகாதுன்னு ஒரு நினைப்பு!அதான் இப்படி!
வாழ்க்கை ஒரு வட்...
வேணாம் எங்கயோ போகுது!!
நன்றிங்க நண்பரே!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) 22 ஜூலை, 2010 அன்று 11:48 AM  

எல்லாம் பிடிச்சிருக்கு...

//விலங்குகள்!

சிந்திக்க மறந்த
விலங்குகள்..
விலங்குகளாகவே ஆயின..
சிந்தித்த மனிதவிலங்கிற்கு
சிந்திப்பே
விலங்குமானது!//

தலைப்பு விலங்குகள் (கைவிலங்கா?. ஏனோ எனக்கு விளங்காமல்... சிறு குறையாய்... அறியும் ஆவலாய்...

Chitra 22 ஜூலை, 2010 அன்று 1:57 PM  

விலங்குகள்!

சிந்திக்க மறந்த
விலங்குகள்..
விலங்குகளாகவே ஆயின..
சிந்தித்த மனிதவிலங்கிற்கு
சிந்திப்பே
விலங்குமானது!


...WOW! கலக்கல் வரிகள்! பாராட்டுக்கள்!

தமிழ் 22 ஜூலை, 2010 அன்று 2:22 PM  

/இதனையும் கவிதை எனலாமா?

அன்று
இளமையில் கல்..
இன்று
இளமையில் க'ள்'..

****************************

விலங்குகள்!

சிந்திக்க மறந்த
விலங்குகள்..
விலங்குகளாகவே ஆயின..
சிந்தித்த மனிதவிலங்கிற்கு
சிந்திப்பே
விலங்குமானது!

****************************

மாற்றம்(?)

அனலடித்த
ஓர்
வெயில்நாளில் கண்டேன்..
வெளிநாட்டுக்காரனின்
கையில்
இளநீரும்..பதநீரும்..!
நம்மூர்க்காரனிடம்
கோக்கும்..பெப்சியும்!
/
அருமை

ஹேமா 22 ஜூலை, 2010 அன்று 4:28 PM  

சகுனம்,மாற்றம்(?)

முகத்திலடிக்கிறது!

அண்ணாமலை..!! 22 ஜூலை, 2010 அன்று 7:31 PM  

@ தஞ்சை.வாசன்,

கை விலங்கும்,
கை கால்கள் வைத்த விலங்கும் என
2-க்குமே தான்!
:)


@ Chitra,

அப்படியா?
லக..லக.!
நன்றிங்க!


@ திகழ்,

ரொம்ப நன்றிங்க!
தமிழறிஞரே!
அடிக்கடி வாங்க!


@ ஹேமா,

அடி பலமோ??
:)

Unknown 24 ஜூலை, 2010 அன்று 4:25 AM  

அனைத்துமே அருமை அண்ணா தொடருங்கள்

அண்ணாமலை..!! 26 ஜூலை, 2010 அன்று 12:16 PM  

ரொம்ப நன்றிங்க நண்பரே!

வைகறை நிலா 15 ஆகஸ்ட், 2010 அன்று 10:46 AM  

அற்புதம்..அத்தனை கவிதைகளும் சமூக விழிப்புணர்ச்சியை தூண்டும் உயர்ந்த கவிதைகள்..

முதியோர் இல்லம் - கலி காலத்தின் துன்பம்..

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!