புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

மலையாளியும்.. ஒரு கொலையாளியும் :)

*
லையாளிகள் அதிகமாகப் பணிபுரியும் அந்த இடத்தில் வழக்கமாக நான் மலையாளத்திலேயே பேசுவதுண்டு(பேச முயற்சிப்பதுண்டு!)அன்றும் அப்படித்தான் மலையாளத்தில் சம்சாரித்துக் கொண்டிருந்தேன். அந்த மனிதரை அதற்கு முன் அங்கு பார்த்ததில்லை.சிறிது நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவர்.. (என்னையல்ல..நான் மலையாளம் பேசும் அழகை!என்பது பின்னர் புரிந்தது!)
சொன்னார்.
"தம்பி.தமிழ்லயே பேசுங்க.எல்லோரும் புரிஞ்சுக்குவாங்க.
(ஆகா..தமிழுக்காக ஒரு குரலா என வியந்த வேளையில்..)
மலையாளத்துல பேசி அதைக் கொல்லாதீங்க "என்றாரே பார்க்கலாம்.
எனக்கு விதிர்த்துவிட்டது.

தமிழைக் கொல்லாதேன்னு இதுபோல் யாரும் சொல்லிக் கேட்டதில்லை. தமிழர்களுக்குள் பேசிக்கொள்வதோடு சரி. தமிழ் பேச முனையும் நேபாளிகளைக் கூட(மலையாளிகளையும்) நான் தட்டிக் கொடுப்பேனே தவிர திட்டிக் கெடுப்பதில்லை.வெளியே நாகரிகமாக நான் புன்னகைத்த போதிலும் உள்மனம் 'ங்கொய்யால' என கொதித்துக்கொண்டிருந்தது.

"ஏன் சார்! ஆரம்பத்துல தப்பாப் பேசுனா தான் ..அடுத்து சரியாப் பேச முடியும். அதுக்காக பேசாமலே இருக்க முடியுமா என்ன?"என்றேன்.தடுமாறித் தவறிவிழாத எந்தக் குழந்தையும் நடப்பது சாத்தியமில்லை என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
"நீங்க சொல்ற மாதிரி அது 'பறைஞ்சு' இல்ல.
'பறைஞு'-ந்னு சொல்லனும். மலையாளத்தக் கொல்லாதீங்க..!" என மீண்டும் சொன்னவுடன் எனக்கு மண்டை சூடேறிவிட்டது."சார்! இவ்வளவு பேசுறீங்களே! நீங்க மட்டும் என்ன ப்யூர் மலையாளமா பேசுறீங்க?சரி! செந்தூரந்தொஞ்ஞி-ந்னா என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்"ந்னேன்.

மனிதர் அதை எதிர்பார்க்கவில்லை. கேள்வி கேட்டவர் ஒரு மலையாளியாயிருந்தால் அப்படி ஒரு வார்த்தையே இல்லை என்று யோசிப்பின்றி சொல்லி இருக்கக்கூடும்.ஆனால், என்னிடம் தோற்பதற்கு அவருக்கு மனமில்லை.மூளையின் ஞாபக அடுக்குகளில் அவரது செல்கள் வார்த்தை தேடியலைவதை கண்கள் காட்டிக் கொடுத்தன.மனிதர் பேய்முழிமுழித்தவாறே..
'செந்தூரம்'-னா இது என்று நெற்றியில் கைவைத்துக் காண்பித்துக் கொண்டிருந்தார். நான் கேட்டேன் "அப்ப 'தொஞ்ஞி'-ன்னா?"

"நல்லாத் தெரியலைன்னா அடுத்தவங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்குங்க சார்!"
என்றபடி..
அடுத்த 5 நிமிடமும் அங்கிருந்த மற்றொருவரிடம் மலையாளம் கலந்த தமிழிலேயே பறைந்து அவரை வெறுப்பேற்றிவிட்டு வந்தேன்.தமிழில் ஐந்து எப்படி அஞ்சு ஆனதோ.. அதுபோலவே
பறைந்து-பறைஞ்சு- ஆகி - பறைஞு வாகத் திரிந்திருக்க வேண்டும்.உண்மையில் மொழி என்பது ஒருவருக்கோ அல்லது ஓரினத்தவருக்கோ மட்டும் சொந்தமானது அல்ல.பேசுபவர் யாவருக்கும், பேச முனைபவருக்கும் கூட சொந்தமானது.தமிழராகப் பிறக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தமிழுக்கு அருந்தொண்டுகள் புரிந்த வீரமாமுனிவரும், தன்னுடைய கல்லறையில் தான் ஒரு தமிழ் மாணவன் என எழுத வேண்டிய ஜி.யு.போப் அவர்களுக்கும் தமிழ் சொந்தமானது இல்லையா என்ன?
மொழி என்பது காற்று போல.
விருப்பமுள்ளவர்கள் யாவரும் சுவாசித்துக்கொள்ளலாம்.

பி.கு :
அது என்ன 'செந்தூரந்தொஞ்ஞி'.
யாருக்குத் தெரியும்.வாயில வந்ததுதான்.
அர்த்தம் திருப்பிக் கேட்டிருந்தா??
கேள்வியே கேட்ட நமக்கு.. பதிலா தெரியாது?




**************************

12 கருத்துகள்:

Chitra 7 ஜூலை, 2010 அன்று 12:37 PM  

மொழி என்பது காற்று போல.
விருப்பமுள்ளவர்கள் யாவரும் சுவாசித்துக்கொள்ளலாம்.


..... சரியாக சொல்லி இருக்கிறீர்கள். :-)

Prasanna 7 ஜூலை, 2010 அன்று 1:00 PM  

மிகச்சரியா பறைஞ்சிடீங்க :)

சிநேகிதன் அக்பர் 7 ஜூலை, 2010 அன்று 2:04 PM  

உங்கள் கருத்துகள் மிகவும் பிடித்திருக்கிறது.

ஹேமா 7 ஜூலை, 2010 அன்று 4:35 PM  

அருமை அருமை அண்ணாமலை !

ருத்ர வீணை® 7 ஜூலை, 2010 அன்று 5:51 PM  

எந்தா சேட்டா!! இத்தரயும் தேஷ்யம் பாடில்லா கேட்டோ !!!

elamthenral 7 ஜூலை, 2010 அன்று 8:04 PM  

மிக அழகான வார்த்தைகள்... வாழ்த்துக்கள் ..

ரிஷபன் 7 ஜூலை, 2010 அன்று 8:09 PM  

உண்மையில் மொழி என்பது ஒருவருக்கோ அல்லது ஓரினத்தவருக்கோ மட்டும் சொந்தமானது அல்ல.பேசுபவர் யாவருக்கும், பேச முனைபவருக்கும் கூட சொந்தமானது.
நூற்றுக்கு நூறு உண்மை. மொழியின் பெயரால் நிகழும் வன்முறைகள்தான் இப்போது சங்கடப் படுத்துகின்றன.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) 7 ஜூலை, 2010 அன்று 9:23 PM  

என்ன இருந்தாலும் உங்க... "'செந்தூரந்தொஞ்ஞி"....சூப்பர் போங்க..

மனுஷன் மண்ட காய்ஞ்சு இருப்பார்..
அவர் போய் யாரு கிட்டும் கேட்டு, அடி வாங்காம இருந்த சரி.. :-)))

அண்ணாமலை..!! 8 ஜூலை, 2010 அன்று 10:19 AM  

@ Chitra

ஆமா தானே! :)


@ பிரசன்னா

நீங்க சொன்னா சரிதான்!:)


@ அக்பர்

ரொம்ப மகிழ்ச்சிங்க!


@ ஹேமா

ரொம்ப நன்றிங்க!

அண்ணாமலை..!! 8 ஜூலை, 2010 அன்று 10:27 AM  

@ ருத்ர வீணை

இம்புட்டுப் பேசியிருந்தா அந்தப் பயபுள்ளகிட்ட ஏன் பேச்சுவாங்குறோம்!
கோபம்லாம் இல்லீங்க!
ஒரு சின்ன ஆதங்கம்! அவ்ளோதான்!:)


@ புஷ்பா

ரொம்ப நன்றிங்க!


@ ரிஷபன்

உங்கள் கருத்து மிகச்சரியே!


@ Ananthi

யாரு பெத்த பிள்ளையோ? :)

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) 10 ஜூலை, 2010 அன்று 8:43 AM  

உங்கள் வாழ்வின் நிகழ்வுபோல் இங்கே கன்னட மக்களுடன் என் வாழ்விலும் நடந்தது உண்டு...

மொழியை காப்பதாக நினைத்து, நம்மின் மீது வன்மை மொழிந்து, அவர்கள் மொழி வளர்வதை அவர்களே தடுத்துக்கொண்டு...

அண்ணாமலை..!! 10 ஜூலை, 2010 அன்று 5:13 PM  

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி வாசன்!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!