புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

வெட்டு ஒண்ணு..துண்டு ரெண்டு!




விசயம் ஒன்னுதான்..
அது ரெண்டு இடங்கள்ள எப்படி பயன்படுதுன்னு
இப்படியும் எழுதிப் பார்ப்போமே!
காசா..பணமா?


விளையாடுகிறது...
தோட்டத்தில் புறாவும்..
கூட்டுக்குள் பாம்பும்..

*******
சுதந்திரமாய்..
சிங்கங்கள் கூண்டிலும்..
நாய்கள் நடுவீதியிலும்..

*******
வதந்தீ..
வாழ்வை அழிக்கவும்..
வயிற்றை நிறைக்கவும்..

*******
காற்று..
மாலையில் தென்றலாகவும்
காலையில் கத்ரீனாவாகவும்..

*******
சமூகம்..
ஆழ்ந்தவர்கள் கூடியதும்..
வாழவிடாததும்..

*******
பூக்கள்..
கல்லறையிலும்..
மணவறையிலும்...

*******
தெய்வம்...
நல்லவனுக்கு துன்பம் தரவும்..
கெட்டவனுக்கு அள்ளிக் கொடுக்கவும்..

*******
உண்மைகள்..
சொல்லுபவனிடம் கேட்க ஆளில்லாமலும்..
சொல்ல மறுப்பவனிடம் சுற்றி நின்று கேட்கப்படுவதும்..

*******

அவ்ளோதான்..!
விரும்பினால் நீங்களும் முயற்சி
செய்துபாருங்களேன்!
நன்றிகள்!
:)

16 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் 27 ஜூலை, 2010 அன்று 11:43 AM  

நன்று.

Chitra 27 ஜூலை, 2010 அன்று 11:44 AM  

உண்மைகள்..
சொல்லுபவனிடம் கேட்க ஆளில்லாமலும்..
சொல்ல மறுப்பவனிடம் சுற்றி நின்று கேட்கப்படுவதும்..

.....ஆஹா..... அப்படி போடுங்க!

ஜில்தண்ணி 27 ஜூலை, 2010 அன்று 12:17 PM  

செம வெட்டு :)

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) 27 ஜூலை, 2010 அன்று 12:35 PM  

வழக்கம்போல எல்லாம் நல்லா இருக்கு... வார்த்தைகளினால் எல்லாம் து(உ)ண்டானது...

பூக்கள்..

மனிதர்களின் கல்லறையிலும்...
தெய்வத்தின் கருவறையிலும்...

தூயவனின் அடிமை 27 ஜூலை, 2010 அன்று 3:40 PM  

வதந்தீ..
வாழ்வை அழிக்கவும்..
வயிற்றை நிறைக்கவும்..

எல்லாவற்றிலும் ,ரொம்ப கொடுமையான ஓன்று இந்த வதந்தீ..

ஹேமா 27 ஜூலை, 2010 அன்று 8:28 PM  

ம்ம்ம்...வெட்டும் துண்டும் தொகுத்தது எல்லாமே அருமையா இருக்கு.பாராட்டுக்கள் அண்ணாமலை.

Muruganandan M.K. 27 ஜூலை, 2010 அன்று 8:53 PM  

வெட்டும் துண்டும்
சிறப்பான தொகுப்பு

அன்புடன் நான் 27 ஜூலை, 2010 அன்று 8:53 PM  

தொகுப்பு நல்லாயிருக்குங்க.

அண்ணாமலை..!! 28 ஜூலை, 2010 அன்று 10:31 AM  

@ முனைவர்.இரா.குணசீலன்,

ஐயா!மிக நன்றிகள்!


@ Chitra,
போலீஸ் திருடன் கிட்டக் கேட்பாங்களே.அதைச் சொன்னேன்!


@ ஜில்தண்ணி - யோகேஷ்,

வாங்க ஜில்..ஜில்..!!
:)


@தஞ்சை.வாசன்,

வாசன் உங்களது வெட்டு ஒண்ணு - துண்டு ரெண்டு
ரொம்ப நல்லாயிருக்கு!

அண்ணாமலை..!! 28 ஜூலை, 2010 அன்று 10:34 AM  

@ இளம் தூயவன்,

கண்டிப்பான உண்மை!


@ஹேமா,

ரொம்பவே நன்றிங்க!


@ Dr.எம்.கே.முருகானந்தன்,

ரொம்ப நன்றிங்க!


@ சி. கருணாகரசு,
வாங்க தோழர்! நலமா?

vasan 29 ஜூலை, 2010 அன்று 2:39 PM  

//பூக்கள்..
கல்லறையிலும்..
மணவறையிலும்...//
செடியிலும், கொடியிலும்,
கொடியிடையின் கூந்த‌லிலும்,
பூஜையிலும்,
குழ‌ந்தை‌யின் புன்ன‌கையிலும்
நீண்டு கொண்டே வரும்..
நீங்க‌ள் எழுதிய‌து போல்
'மண‌த்திலும் மர‌ண‌த்திலும்'

Unknown 30 ஜூலை, 2010 அன்று 1:22 AM  

வெட்டுக்கள் அழகாக வீழ்ந்துள்ளன

தோழி 31 ஜூலை, 2010 அன்று 10:48 AM  

வித்தியாசமான சிந்தனை... சிறப்பாக இருக்கின்றது..

அண்ணாமலை..!! 31 ஜூலை, 2010 அன்று 11:45 AM  

@ vasan,
உங்கள் வர்ணிப்புகள் மிக அழகு!
'மண‌த்திலும் ம(ர)‌ண‌த்திலும்'


@பாலன்,

ரொம்ப நன்றிங்க நண்பரே!


@ தோழி,

ரொம்ப நன்றிங்க தோழி!

Murugeswari Rajavel 2 ஆகஸ்ட், 2010 அன்று 6:25 PM  

அருமையான (க)விதைகள்

அண்ணாமலை..!! 4 ஆகஸ்ட், 2010 அன்று 10:31 AM  

ரொம்பவே நன்றிங்க!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!