படம்: நன்றி தினமலர்
இளவட்டக்கல்..!
இதுக்கு இன்னொரு பேரு கல்யாணக்கல்..
சும்மா உருண்டு திரண்டு ஒவ்வொரு கோவிலுலயும் ஊருக்கு ஊரு இது பாண்டிய நாட்டுல இருக்குங்க..முன்னாடியெல்லாம் இந்தக் கல்லைத் தூக்கி கோவிலை வலம் வர்ரது..ஊருணியை வலம்வர்ரது -ந்னு வந்து நானும் ரௌடி-ந்னு நிரூபிச்சா தான் பொண்ணு. இல்லன்னா , வாயில மண்ணு விழுந்தாலும் பொண்ணு கிடையாது..
காளை மாட்டை அடக்குறது..கல்லு தூக்குறது மூலமா உடல்வலிமையை நிரூபிச்சாதான் ..சரி.இவன் நம்ம பொண்ணைக் கல்யாணம் பண்ணுனாலும் கடைசி வரைக்கும் வச்சு உழைச்சுக் காப்பாத்துவான்- ந்னு ஒரு நம்பிக்கை. ஏன்னா ..அப்ப எல்லாமே உடல் உழைப்பு சம்பந்தமான தொழில்கள்.அதுக்காகத்தான் இதெல்லாம்.லியோனி சொன்ன மாதிரி,
இப்பல்லாம் கல்லத் தூக்குனாதான் பொண்ணுன்னு சொன்னா கொள்ளப் பயபுள்ளைகளுக்குக் கல்யாணமே நடக்காது.
சரி..இப்ப இளவட்டக்கல்லுக்கு வருவோம்.
இது பார்த்தீங்கன்னா நல்ல உருண்டையா , எந்த பிடிப்பும்
இல்லாம,சும்மா வழுவழு-ந்னு இருக்கும்.
எப்படித் தூக்குவது.. ?
1. முதலில் குத்த வைத்தது போல் கல்லோடு சேர்ந்து
உட்கார்ந்து கொண்டு அதனைச் சுற்றி மாலையாகப் பிடித்து
உங்கள் கைகளுக்குள் வைத்து உடம்போடு சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டும்.
2.கைகளைக் கல்லைச் சுற்றி அணைத்தபடியே அப்படியே
எழுவதற்கு முயற்சி செய்து , உடல் நிமிர்ந்தவுடன்
ஒ.கே..ஸ்டார்ட்..
3. இப்போது கல்லை மெல்ல தூக்கி வந்து முழங்காலில்
வைத்து சிறிது கால இடைவெளி கிடைக்கும். (ரொம்பக் கவனமா கல் வழுக்கிடாம விரல்கள்ள இருந்து உங்க முழங்கைகள் வரை கல்லை அணைச்சிருக்கணும்.கொஞ்சம் கல் வழுக்கியதுன்னாலும் கை சிராய்ப்பாகிவிடும்.)
4. இப்போது மேலும் மூச்சை நன்றாக இழுத்துக் கொண்டு சற்றே
வளைந்திருக்கும் உடம்பை மெல்ல நிமிர்த்தி கல்லை உங்கள்
நெஞ்சினில் வைத்து உருட்டி அங்குலம் அங்குலமாக மேலேற்ற
வேண்டும்.( இப்போதைய நிலைதான் படத்திலுள்ளது!)
5. உங்களுக்கு எது எளிதாக உள்ளதோ அந்தப் பக்கம் (இடது
அல்லது வலதுபுறம்) கல்லை உருட்டி ஏற்றி..(நெஞ்செலும்புகள்
மடமடவென்று லேசான சத்தத்தை ஏற்படுத்தக்கூடும்...முதல்
முறையென்றால்)
மூச்சடக்கித் தோள்பட்டையில் வைத்துவிட்டால் உங்களுக்குப் பொண்ணு உறுதி.. :)
இதில் மார்பிலிருந்து , தோள்பட்டை வரை கல்லை நகர்த்தும் போதுதான் பலர் தோல்வியடைந்து விடுவார்கள்.கல்லை அவ்வளவு தூரம் தூக்கி விட்ட பிறகு சிலபேர் அப்படியே தோள்பட்டையில் கல்லை வைத்துக் கொண்டு எப்புடி??? என்பது போல கொஞ்ச நேரம் போஸ் கொடுப்பார்கள்.
இன்னும் சிலர் அருகிலுள்ள கோவிலை வலம் வருவார்கள்.இன்னும் சில ஊறிப்போன பயபுள்ளைக.. கோவிலுக்கு முன்னாடி இருக்கிற ஊருநி-யவே வலம் வரும்.
இந்த அங்குல..அங்குல நகர்த்தல்களெல்லாம் நம்மல மாதிரி கத்துக்குட்டிகளுக்குத் தான்..ஒண்ணுரெண்டு பீமனுங்க அசால்ட்டா கல்லத்தூக்கிப் போட்டுட்டு
..அடுத்த வேலை என்ன? என்பது போல பார்க்கும்..
எங்க ஊருல இதுமாதிரி மூன்று இளவட்டக்கற்கள் இருக்கின்றன.அதுல ஒரு கல்லை நிறைய பேரு தூக்கீருக்காங்க..ஆனா, மத்த ரெண்டும் யாருமே தூக்குனதில்ல.தூக்குனவங்கள்ளாம் போய்ச் சேர்ந்துட்டாங்க..போன தலைமுறை ஆட்களோட சரி..
ஒரு நாள் ஆளில்லாத நேரமாப் பார்த்து இருட்டுல போய் எல்லாரும் போல நானும்
அந்த இரண்டு பெரிய இளவட்டக்கற்களை முயற்சி பண்ணுனேன்..
தரையிலிருந்து 2 அங்குலம் வருவதற்குள்ளாகவே மூச்சு
முட்டி, வியர்த்து காதடைத்து ..அய்யோ..போதும்டா சாமி...என்று யாரும் பார்க்கும் முன்னே
கா(கல்)லைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே ! - ந்னு
கவிமணி அவர்களின் பாடல் போலத்
தப்பித்து ஓட்டம் பிடித்தேன்!.
ஆனால் ஒன்று, என்னால் நம் முன்னோர்களின் உடல்பலத்தை
வியக்காமலிருக்க முடியவில்லை.இனிமேல் கிராமத்துக்குப் போனால் கோவில்களில் அந்த இளவட்டக்கற்களைத் சற்றுத் தேடிப் பாருங்கள்.எங்கேனும் ஒரு ஓரத்தில் அந்த வீரம் ஒளிந்திருக்கக் கூடும்!
(வாய்ப்புக் கிடைத்தால் படங்களுடன் பின்னொரு நாளில் வெளியிடுகிறேன்!நன்றிகள்!)
16 கருத்துகள்:
இளவட்டக்கல் தகவல் பார்த்து மனதில் மகிழ்ச்சி வட்டம்! உடல் பலம் மட்டுமில்லாமல் மன பலமும் இருந்தால்தான் அது சாத்தியம்.
இது இன்னும் நம்ம ஊர்ல நடக்குதா? அருமை....
/// ஒரு நாள் ஆளில்லாத நேரமாப் பார்த்து இருட்டுல போய் எல்லாரும் போல நானும்
அந்த இரண்டு பெரிய இளவட்டக்கற்களை முயற்சி பண்ணுனேன்..
தரையிலிருந்து 2 அங்குலம் வருவதற்குள்ளாகவே மூச்சு
முட்டி, வியர்த்து காதடைத்து ..அய்யோ..போதும்டா சாமி...////
நெக்ஸ்ட் டைம் முயற்சி பண்ணுங்க... உங்களுக்கு பொண்ணு கிடைக்கணும்ல அதுக்கு..
மிக நல்ல பகிர்வு தோழரே...நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்...
@ ரிஷபன்,
ஆம் நண்பரே!கண்டிப்பாக உடல்பலத்தோடு, மனபலமும் இதற்கு ரொம்ப அவசியம்!
@ புஷ்பா,
நம்ம ஊருல போட்டி நடக்காதுங்க. ஆனா, நேரம் கிடைக்கும் போதெல்லாம் பசங்க இதை முயற்சி பண்ணுவாங்க!
@ தோழி,
நாங்கள்ளாம் ஏற்கனவே தூக்கிட்டோம்க!
2-ஆவது கல்லுக்குத்தான் இப்பப் போட்டியே! :)
(இதப் பார்த்தெல்லாம் ..இப்ப யாரும் பொண்ணு குடுக்குறது இல்லங்க!)
@ கமலேஷ்,
ரொம்பவும் நன்றிகள் நண்பரே!
ஆஹா.. என்ன ஒரு வீரம்.. ஹ்ம்ம்.. அடுத்த முறை ட்ரை பண்ணுங்க..
எப்படியும் தூக்கி... அப்புறமா வெற்றி வெற்றின்னு ஒரு பதிவு போடணும்னு வாழ்த்தறேன்..!
ஏன் இந்த கொல வெறின்னு கேக்க பிடாது ..!! :D :D
இன்றைய இளைய சமுதாயம் அந்த கல்லை தூக்க முயற்சி செய்தால் , கல் மேல் உயராது ,உள்ளே உள்ள சிகரெட் புகை எல்லாம் ,மேல் வாயாலும் கீழ் வாயாலும் வெளியில் வரும். ஒரு முறை நினைத்து பார்த்தேன் சிரிப்பு அடக்க முடியவில்லை.
@ Ananthi,
பார்க்கலாம்..ஆனா, பயங்கர வெய்ட்டுங்க!
இல்லைன்னா பாத்திரக் கடையில இருக்கவே
இருக்கு பழைய கோப்பைகள்!
(செயிச்சு..! செயிச்சு கப்பு வாங்கிருக்கோம்!)
@ இளம் தூயவன்,
ஹஹ்ஹா..
நீங்கள் சொன்னதக் கற்பனை பண்ணிப் பார்த்தேன்!
எனக்கும்கூட :) வந்திருச்சுங்க!
நல்ல பகிர்வு. பகிர்வுக்கு நன்றிகள்
வாசிக்க வாசிக்க ....புதுசா ஒரு விஷயம் அறிஞ்சிருக்கிற திருப்தி.நன்றி அண்ணாமலை.
இப்போலாம் நம்ம பயபுள்ளைக வயித்திலேயே ஒரு கல்ல தூக்கிட்டு திரியுது (அதான் தொப்பை) :)
@ சந்ரு,
ரொம்ப நன்றிங்க நண்பரே!
@ ஹேமா,
எனக்கும் ரொம்ப மகிழ்ச்சிங்க!
@ பிரசன்னா ,
உண்மையைச் சொல்லுங்க..அந்தப் படத்துல நடுவுல ஒருத்தர் நிக்கிறாரே! அவரைப் பார்த்துப்புட்டுத்தான நீங்க சொன்னீங்க! :)
//நடுவுல ஒருத்தர் நிக்கிறாரே! அவரைப் பார்த்துப்புட்டுத்தான நீங்க சொன்னீங்க//
ஹா ஹா ஹா.. நான் பொதுவாத்தான் சொன்னேன்.. ஆனா இங்கயே ஒரு மாடல் இருக்கு.. இருந்தாலும் அவர் போஸ் சூப்பர்.. :)
பிரசன்னா! ஆளுதான் அப்படின்னு பார்த்தீங்கன்னா..
அவரு பனியன்-ல தோள்பட்டை வரைக்கும் மண்ணு இருக்கு பாருங்க!
மனுசன் இளவட்டக்கல்லை ஏற்கனவே தூக்கிட்டார்!
வலுவான உடம்புதான்..!
எந்த கல்லானும் எங்கிட்டே சொல்லுங்கோ........
எந்த கல்லானும் எங்கிட்டே சொல்லுங்கோ........
கருத்துரையிடுக