இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே!
பார"தீ"!!!!!! உம்மை வணங்குகிறோம்!
இதைவிடவும் சுதந்திர தாகத்தை ஒருவன் தன்னுடைய
எண்ணங்களில்,தெளிவான பாடல்களில் வெளிப்படுத்த முடியுமா??
*****************************
இப்போ,
வெட்டு ஒண்ணு - துண்டு ரெண்டு!
பாரதி..
பாக்களில் ரதியும்..!
பார்க்கையில் தீயும்..!
*******
பாரதி..
விடுதலைக்கும்..!
விடு தளைக்கும்.!
*******
பாரதி..
கவிதைக்கும்.. - அவன்
கவி தைக்கும்!
*******
பாரதி!
கலை வா நீ!
சில களவானிகளும்.!
*******
பாரதி..
வீணை மீட்டவும்..!
வீட்டை மீட்க வழியற்றும்.!
*******
பாரதி..
பாருக்கே பாக்கொடைஞன்..
பாடைக்குப் பதினோரே பேர்!
*******
உண்மைதானே ..!
நன்றிங்க!
வெட்டு ஒண்ணு..துண்டு ரெண்டு (ஆடி - 18)
இடுகையிட்டது
அண்ணாமலை..!!
at
செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010
லேபிள்கள்: வெட்டு ஒண்ணு..துண்டு ரெண்டு
6 கருத்துகள்:
பின்னிட்டீங்க...... பாராட்டுக்கள்!
அருமையான வார்த்தைகள்.
@ Chitra,
நீங்க சொன்னா சரிதான்!
@ இளம் தூயவன்,
வெகு நன்றிங்க இளம் தூயவன்!
ரொம்ப நன்றிங்க!
பாரதி பற்றிய வரிகள்.. அருமை :-))
வெட்டு ஒன்னு.. துண்டு ரெண்டு..
பொருத்தமான தலைப்பு..!
அப்படியா?
ஆனந்தமுங்கோவ்!
:)
கருத்துரையிடுக