கலைவாணர் வள்ளல் என்பது உலகறிந்த விசயம். ஆனால், அவர் இடதுகை கொடுப்பது வலதுகை அறியாது என்பது போலத்தான் உதவி செய்வாராம்.
ஒரு முறை நண்பர்களோடு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு வயதானவர் சற்றே ஏழ்மைத்தோற்றத்துடன் அருகேவந்து
"ஐயா என் பொண்ணுக்குக் கல்யாணம்.உங்ககிட்டக் கேட்டா ஏதாவது பண உதவி செய்வீங்கன்னு சொன்னாங்க. அதுதான் வந்தேன்."
என்றார்.
கலைவாணருக்கு வந்ததே கோபம்.
"ஏம்ப்பா நான் என்ன இங்கக் கொட்டியா வச்சிருக்கேன்.நானே அல்லாடுறேன்.போ.போ..!
என விரட்ட.
நொந்து போன அந்தப் பெரியவரும் அங்கிருந்து அகன்றார்.
சற்றுதூரம் சென்றிருப்பார் ..அவரை அழைத்த கலைவாணர்
"சரி.சரி! வந்தது வந்துட்ட...இந்தா இந்த வெத்தலையைப் போட்டுக்கிட்டுப் போ!'
எனக்கொடுக்க,
அதை வாங்கிக்கொண்டு சற்றுதூரம் சென்று பிரித்துப்பார்த்தபோது அதனுள் பணத்தினை சுருட்டிவைத்துக் கொடுத்திருந்தாராம் கலைவாணர்.
மற்றவர் அறியக் கொடுத்தால் வாங்குபவர் சங்கடப்படுவாரே என நினைத்த கலைவாணர் எங்கே?
ஒரு டியூப் லைட்டைக் கோவிலுக்குக்கொடுத்துவிட்டு அதில் உபயம் - சி.மு.கரு.ப....
என கருப்புமையால் எழுதி வெளிச்சத்தையே மறைக்கும் இந்நாளைய மனிதர்கள் எங்கே?
***************************************************
கக்கன் என்பவரை தமிழகம் நன்கறியும் என நினைக்கிறேன். அறியாவிட்டால் அது தமிழகத்தின் தலையெழுத்து.இவர் காமராஜர் ஆட்சியில் போலீஸ்துறை மற்றும் பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தவர்.
எளிமைக்கு உதாரணமாகத் திகழ்ந்த இவரது நூற்றாண்டு விழாதான் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களால் வெகுவிமரிசையாகக்(?!) கொண்டாடப்பட்டது.
காமராஜர் ஒருமுறை கட்சிக் கூட்டத்திற்குச் செல்லவேண்டும் என கக்கனை அழைத்துச்செல்ல முன்கூட்டியே சொல்லாமல்கொள்ளாமல் அவரைத்தேடி வீட்டிற்கே வந்துவிட்டார்.வாசலில் காரில் இருந்துகொண்டு ஒருவரை உள்ளே அனுப்பி கக்கனை அழைத்துவரச் சொன்னார்.
உள்ளே சென்றவர்
"அய்யா! இன்னும் 5 நிமிடத்தில் வந்திர்ரேன்னு சொன்னாருங்க" என்றார்.
10 நிமிடமாகியும் காணாததால் "இவன் என்னதான் பண்ணுறான் இன்னும்?"
என்றபடி காமராஜர் வீட்டினுள் புக..அங்கே கொல்லையில் தனது வேட்டியைக் கையில் பிடித்து வெயிலில் காயவைத்துக்கொண்டிருந்தார் கக்கன்.
"ஏய்!என்னப்பா பண்ணுற?"
"இல்லைங்க ஐயா! ஒரே ஒரு வேட்டிதான் இருந்தது. இப்பதான் துவைச்சேன்.அதான் காயட்டும்னு வெயில்ல வச்சிருக்கேன்!இந்தா இப்பக் காஞ்சிரும்!"
என்றாராம் அந்த போலீஸ்துறை மற்றும் பொதுப்பணித்துறை மந்திரி.
இவர்தான் பின்னாளில் முடியாமல் இருந்தபோது அரசு ஆஸ்பத்திரியில் கவனிக்க ஆளின்றிக் கிடந்ததாகவும் எதேச்சையாக அவரை எம்.ஜி.ஆர் கண்டு சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியதாகவும் தகவல்கள் உண்டு.
உங்களுக்குத் தெரியுமா?
இன்று பெய்கின்ற மழைகளுக்கெல்லாம் மேகம் விதைத்தவர்கள் இவர்கள்தான்.
"நாளைக்கு!" என்று எதையும் சேர்த்துவைத்துக்கொள்ளத் தெரியாதவர்கள்.
இவர்களெல்லாம் பிழைக்கத் தெரியாதவர்கள்தான்.ஆனால்,
மக்கள் மனங்களில் நிலைக்கத் தெரிந்தவர்கள்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதுபோன்றே தலைவர்கள் அல்ல..
நல்ல மனிதர்கள் பற்றிப் பேசலாம்.
நன்றிகள்!
சில நல்லவர்களைப் பற்றி!
இடுகையிட்டது
அண்ணாமலை..!!
at
செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010
லேபிள்கள்: அனுபவங்களும் ..இன்ன பிறவும்
8 கருத்துகள்:
இதெல்லாம் எங்கயோ படிச்சா மதிரியே இருக்கு.. இருந்தாலும் பரவால்ல நல்ல செய்திகள்
இதையும் கொஞ்சம் பாருங்க
http://rudhraveenai.blogspot.com/2010/08/blog-post_31.html
மற்றவர் அறியக் கொடுத்தால் வாங்குபவர் சங்கடப்படுவாரே என நினைத்த கலைவாணர் எங்கே?
ஒரு டியூப் லைட்டைக் கோவிலுக்குக்கொடுத்துவிட்டு அதில் உபயம் - சி.மு.கரு.ப....
என கருப்புமையால் எழுதி வெளிச்சத்தையே மறைக்கும் இந்நாளைய மனிதர்கள் எங்கே?
.......யோசிக்க வேண்டிய விஷயம்தான்.
//இவர்களெல்லாம் பிழைக்கத் தெரியாதவர்கள்தான்.ஆனால்,
மக்கள் மனங்களில் நிலைக்கத் தெரிந்தவர்கள்.///
இந்த வாசகம் கூடுதல் சிறப்பு..
கலைவாணர், மற்றும் கக்கன் அவர்களை பற்றிய பகிர்வு உண்மையில் அருமை...!!
@ ருத்ர வீணை®,
ஆமாங்க! இவங்களைப் பத்தி எத்தனை தடவை வேண்டுமானாலும் படிக்கலாம்!
மந்திரம் மாதிரி!
நீங்கள் குறிப்பிட்ட பதிவை
இதோ,இப்பவே பார்த்துட்டேன்!
@ Chitra,
உண்மையிலேயே யோசிக்க வேண்டிய விசயம் தானே!
@ Ananthi,
நாட்டுக்காகவும்,மக்களுக்காகவும் உழைத்திட்ட உண்மையான மனிதர்கள் ..!
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.
நல்லவர்கள் பற்றி பதிவு எழுதிய நீங்க நல்லா இருக்கோணும். கண்ணதாசன் ஏரியாவா... வருக வெல்க...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
@ vijayan,
சத்தியமான உண்மை நண்பரே!
@ RVS,
தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி!
நல்லவர்கள்தமைக் கூற நம்வாய் மணக்கும்!
கருத்துரையிடுக