*
நாத்திகவாதிகளிடமும், ஆத்திகவாதிகளிடமும் சில கேள்விகள்! நான் எந்தப் பக்கமாவது
சாய்ந்திருந்தால் தெரிவித்துவிடவும்!
அன்பாக!
ஒவ்வொன்றைப் பற்றியும் இருவரும் என்னென்ன கற்பனை
கொண்டிருக்க முடியும் என்பதான கற்பனை!
கடவுள்?
**இல்லாத ஒருவன்
**எங்கும் நிறைந்தவன்
சிலைகள்?
**வெறும் கல்..
**கடவுளின் மற்றுமொரு உறைவிடம்(உருவம்!)
பூசைகள்?
**வெட்டிச் செலவுகள்
**இறைவனுக்கான சில தொண்டுகள்.
அன்னதானம்?
**அரிசிமூட்டைகளுக்கு இடப்படும் அரிசிமூட்டைகள்.
**மக்கள் தொண்டின் ஒருபகுதி!(மகேசன் தொண்டு!)
நடைபயணம்?
**வருட உணவு செரிக்கச் செல்வது.
**உடலோடு இறைபக்தியையும், அர்ப்பணிப்பையும் உறுதிசெய்கிறது.
இதிகாசங்கள்?
**சோம்பேறிகளாக்கும் தலையணைகள்
**கடவுளர்களின் கருத்துகள் உலகிற்கு.
உண்டியல்?
**ஏமாற்றுவோரின் நிதிநிலையங்கள்.
**கோவிலுக்கான நற்கொடைகள்
பக்தி?
**பணம் பறிக்க எளிய வழி.
**இறைவனிடம் வாங்கிய கடனுக்கு வட்டியாவது செலுத்துவோம்..
வாழ்க்கை?
**உலகை முன்னேற்ற நாம் பெற்ற ஓர் வாய்ப்பு.
**பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட சிறியகால இடைவெளி
கணவன் மனைவி?
**சமூகக் கட்டமைப்பில் தூண்கள்
**கடவுளால் சொர்க்கத்திலேயே ஒருங்கிணைக்கப்பட்டவர்கள்
எழுத்து?
**இருட்டினைக் கிழிக்கும் வாள்
**இறைவனின் கொடை
உலகம்?
**சூரியனிலிருந்து பிரிந்த பெரியபந்து.
**அண்டத்தில் இறைவன் உருட்டி விளையாடும் பந்துகளில்
இதுவும் ஒன்று.
மனிதன்?
**கடவுளென்று ஒருவன் இருப்பானேயானால்
அவனையும் கடந்து உள்ளிருப்பவன்
**கடவுளால் ஆட்டிவைக்கப்படும் பொம்மைகள்.
இறந்த பின் உயிர் என்னவாகிறது ?
சட்..
கணினி தட்டச்ச மறுக்கிறது.
தெரிந்தால் சொல்லுங்களேன்!
சூன்யம்!
சூன்யம்!
நாத்திகமும்..ஆத்திகமும்!
இடுகையிட்டது
அண்ணாமலை..!!
at
புதன், 11 ஆகஸ்ட், 2010
2 கருத்துகள்:
நல்லவராக இருந்தால் உலகம் புகழும்.
மோட்சத்திற்குப் போய் விட்டார் !
கடவுள் மனிதனின் உன்னதப் படைப்பு.
அவரன்றி ஓரணுவும் அசையாது,இருந்தாலும் எல்லாம் நாமதான் செய்யனும்.
உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்!
கருத்துரையிடுக