பக்திப் பிரசங்கம்!
முருகனை வேண்டுங்கள்
முக்தி!
மால்மருகனை வேண்டுங்கள்!
முக்தி!
அதோ ஒருவன்..
கூட்டத்தில் புகுகிறான்..
நையப் புடையுங்கள்!
*****************
கடவுள்!
கூன் கிழவியின்
ஊண் உன்னாலென்றால்..
சிரிப்பது கிழவியல்ல..
அதுதான் கடவுள்!
*****************
சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும்
விண்ணப்பம்
பூர்த்தி செய்கிறது..
உன் நாக்கு!
*****************
ஐம்புலனையும் அடக்கி வாழ்!
வறியவர்க்குக் கொடுப்பதில்
அல்ல!
*****************
அனாதை இல்லத்திற்கு
அரைவேளை உணவிட்டாயா?
இதோ குறித்துக்கொள்..
இந்த மழை
உன்னால் பெய்கிறது!
*****************
செத்தபின் செல்வது
சொர்க்கமா? நரகமா?
உன் அண்டைவீட்டுக்காரனே
அதை முடிவு செய்கிறான்!
*****************
சரி! சற்றே பெரியதாயிருப்பினும்
இதையும் படித்துவிடுங்கள்!
எம் வழி! அற வழி!
காறி முகத்தினில் உமிழ்ந்திடும்போதும்
.........கையால் துடைத்து விட்டிடுவோம்!
மாறி மாறியே முகத்தில் அறையினும்
.........மன்னித்தே நாம் அருள்புரிவோம்!
பாரினில் யாவரும் பெரும்பழி தந்திட
.........பகவானிடம் நாம் வேண்டி நிற்போம்!
ஆயினும், ஆயினும் ஒன்று உரைப்பேன்..!
ஓரிரு வார்த்தை களேனும் தமிழை
.........உயர்வு குறைத்துப் பேசுவார் தம்மின்
நாவை அறுத்திடுவோம்! அவரை
.........நடுங்கப் புடைத்திடுவோம்!
******
தமிழ் தேதியை நான் இங்கு சென்று கண்ட போது இந்த வாக்கியத்தையும் காண நேர்ந்தது.!
உங்களுக்காகப் பொய் சொல்கிறவன்..
உங்களுக்கு எதிராகவும் பொய் சொல்வான்!
***********
நன்றிகள்!
சில கவிதைகள் (ஆவணி- 5)
இடுகையிட்டது
அண்ணாமலை..!!
at
புதன், 18 ஆகஸ்ட், 2010
லேபிள்கள்: சில (க)விதைகள்
15 கருத்துகள்:
//அனாதை இல்லத்திற்கு
அரைவேளை உணவிட்டாயா?
இதோ குறித்துக்கொள்..
இந்த மழை
உன்னால் பெய்கிறது!//
சரிதான்.
இதுபோலவே எல்லாக்கவிதைகளின் வீச்சமும் கருத்துக்களையும் சொல்கிறது... அருமையா எழுதியிருக்கீங்க அண்ணாமலை...
//சரி! சற்றே பெரியதாயிருப்பினும்
இதையும் படித்துவிடுங்கள்!//
சரி படிச்சாச்சு...
காசு தாங்க..
எல்லாமே சிந்தனையோடு வாசிக்க வைக்கிறது அண்ணாமலை.கடைசி வரிகள் உண்மை !
//ஐம்புலனையும் அடக்கி வாழ்!
வறியவர்க்குக் கொடுப்பதில்
அல்ல!
அனாதை இல்லத்திற்கு
அரைவேளை உணவிட்டாயா?
இதோ குறித்துக்கொள்..
இந்த மழை
உன்னால் பெய்கிறது!//
இவ்வரிகள் மிக அருமையாக இருக்கிறது... வாழ்த்துக்கள் அண்ணாமலை சார்...
சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும்
விண்ணப்பம்
பூர்த்தி செய்கிறது..
உன் நாக்கு!
நல்ல வரிகள்.
அத்தனையும் அற்புதம்..
இனிய தமிழ் மொழிமீதுதான் உங்களுக்கு எத்தனை பற்றுதல்..
கவிதை என்றால்..தமிழ் மொழிபோல் இனிய மொழி எதுவும் இல்லை..
//அனாதை இல்லத்திற்கு
அரைவேளை உணவிட்டாயா?
இதோ குறித்துக்கொள்..
இந்த மழை
உன்னால் பெய்கிறது!//
அற்புதம்.
@ க.பாலாசி,
ரொம்ப நன்றிங்க பாலாசி!உங்களிடம் தமிழ் அற்புதமாக இருக்கும்!
@ dharshi,
கரும்பு தின்னக் கூலி தருவதாயில்லை..!
(காசில்லைன்னு சொன்னது சரி! ஆனா,
உன் கவிதையைக்(!?) கரும்புன்னு சொன்னதுதான் தாங்க முடியலைன்னு சொல்லாதீங்க!)
:)
@ ஹேமா,
கண்டிப்பாக நானும்கூட அதை நினைத்துத்தான் பதிவிட்டேன்!ரொம்ப நன்றிகள்!
@ புஷ்பா,
தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றிகள்!
@ இளம் தூயவன்,
ரொம்ப நன்றிங்க நண்பரே!
@ வைகறை நிலா,
தமிழராய்ப் பிறந்துவிட்ட ஒவ்வொருவருக்கும் இருக்கும் பண்புதானே இது!
ஒப்புவமை இல்லாத தமிழாயிற்றே!
தங்களுக்கு ரொம்ப நன்றிகள்!
@ கலாநேசன்,
ரொம்ப நன்றிங்க நண்பரே!
//ஓரிரு வார்த்தை களேனும் தமிழை
.........உயர்வு குறைத்துப் பேசுவார் தம்மின்
நாவை அறுத்திடுவோம்! அவரை
.........நடுங்கப் புடைத்திடுவோம்!//
தங்கள் தாய்(தமிழ்)மொழிப் பற்றினைக்கண்டு வியந்து மலைத்து..வாய்ப்பேச்சற்று.. வாழ்த்தவோ பாராட்டவோ வகையற்று...விடைபெறுகிறேன்..
//சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும்
விண்ணப்பம்
பூர்த்தி செய்கிறது..
உன் நாக்கு!
//
அட அட... இது தாங்க... டாப்.. சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..!!!
நச்சுன்னு இருக்கு.. :-)))
//ஆயினும், ஆயினும் ஒன்று உரைப்பேன்..!
ஓரிரு வார்த்தை களேனும் தமிழை
.........உயர்வு குறைத்துப் பேசுவார் தம்மின்
நாவை அறுத்திடுவோம்! அவரை
.........நடுங்கப் புடைத்திடுவோம்!//
தமிழுக்காய் பேசிய வரிகள்
தனித்து நின்று வியக்க வைத்தது.. :-))))
//செத்தபின் செல்வது
சொர்க்கமா? நரகமா?
உன் அண்டைவீட்டுக்காரனே
அதை முடிவு செய்கிறான்!//
இதென்ன கலாட்டா...
//உங்களுக்காகப் பொய் சொல்கிறவன்..
உங்களுக்கு எதிராகவும் பொய் சொல்வான்!//
நிதர்சனமான உண்மை...
//நாவை அறுத்திடுவோம்! அவரை
.........நடுங்கப் புடைத்திடுவோம்!//
இது தான் அறவழியா? நல்லா இருக்கு...
அந்த இணைப்பு எனக்கு திறக்கவில்லை
ஆஹா.. சொல்ல வேண்டியதை சொல்லாம விட்டாச்சே..
கவிதைகளின் தொகுப்பு மிகவும் அருமை...
வாழ்த்துகள்...
@ ஆதிரா,
தங்களைப் போன்ற நற்கவிகளின் ஆசிகளே!
நன்றிங்க!
@ Ananthi,
நம்ம தமிழாச்சே!
விட்டுடுவோமா என்ன!
நன்றிங்க!
@ தஞ்சை.வாசன்,
ரொம்பவே நன்றிங்க வாசன்!
ஏனோ அந்த இணைப்பு இப்போது திறக்கவில்லை!
கருத்துரையிடுக