கண்ணனைப் பற்றி எத்தனை கவிதை வேண்டுமானாலும் எழுதிக்கொண்டே இருக்கலாம்!
கனவில் வந்த கண்ணன் கவியெழுத உரைத்தான்.!
(கண்ணனுக்குப் போதாத காலம், நம்ம கனவுலயெல்லாம் வர ஆரம்பிச்சுட்டார்)
விடுவேனா நான். கேள் என் கவியை! என கண்ணனே உரைப்பதாக ஒரு கவிதைய எடுத்துவிட்டேன்.
அம்புட்டுதேன்.மகாலட்சுமியே தேவலை என்று நான் கண்விழிக்கும்போதுமறைந்துவிட்டான்.
மாயக்கண்ணன்!
யாரெனக் கண்ணனைக் கேட்டால்,
அவன் தன்னை எப்படி அறிமுகம் செய்வான்?கற்பனைதான்!
அன்னையர் எனைத்தான் கண்ணன் என்பார்!
கன்னியர் எனைத்தான் கிருஷ்ணன் என்பார்!
விண்ணவர் முன்னவர் யாவருக்கும் நான்
அன்னவர் என்றே அறியப் படுவேன்!
வேதம் நான்கினையும் ஓதும் அடியார்தம்
நாவினில் இருப்பதும் நானே ! நானே!
ஊதுகுழல்பிடிக்கும் ஆய்ச்சியர்தம்மில்
கீதமிசைப்பதுவும் நானே! நானே!
பாதம்வரைவார் தம் பாகமொன்றாக
வீடு புகுவதும் நானே! நானே!
தாதன்போல நிதம் தயங்கும்வேளைதனில்
காதில் உரைப்பவனும் நானே! நானே!
வீணை மீட்டிவிட விரல்கள் முனைகையில்
நாதம் ஒலிப்பவனும் நானே!நானே!
மானே!தேனே! எனும் மயங்கும் வார்த்தைதனில்
மருகும் அன்புமது நானே!நானே!
இன்பமும் துன்பமும் படைக்கும் மனிதா!
எல்லாப் பொருளிலும் இயக்கம் நானே!
கல்லார் இதயமும் கற்றவர் உதயமும்
எல்லாம் எழுவதும் என்னரு ளாலே!
ராதையர் தேடிடும் கண்ணனும் நானே!
கீதையின் நாயகன் கிருஷ்ணனும் நானே!
பாதையில் தோன்றிடும் முட்களும் நானே!
வீதியில் ஓடிடும் எறும்புமென் உயிரே!
இந்த அறிமுகம் போதுமா ?
இன்னும் கொஞ்சம் வேண்டுமா?? என்று கேட்பானோ?
(இவிங்க அழிம்புகளுக்கு ஒரு அளவே இல்லையா?!)
நானே! நானே! அனைத்தும் நானே!
இடுகையிட்டது
அண்ணாமலை..!!
at
புதன், 1 செப்டம்பர், 2010
லேபிள்கள்: நெடுங்கவிதைகள்
7 கருத்துகள்:
மீ த ஃபர்ஸ்ட் ..
கிருஷ்னனுக்கு இப்படி ஒரு CV..
என்ன கொடுமை இது !!..
ஹீ ஹீ ஹீ...
@ ருத்ர வீணை®,
//மீ த ஃபர்ஸ்ட் .. //
இதுதாங்க கொடுமை!
காமெடிதான?
:)
”என்னைப் பற்றி” ல கிருஷ்னன் படம் இருக்கறதுனால இத உங்க CV னு சொல்லலாமா ???
@ ருத்ர வீணை®,
என்னங்க இப்படிக் கோத்து விடுறீங்க!
இதைக்கேட்டா கண்ணன் என்னை CV -ரப்போறான்!
கண்ணனின் சுயவிவரப் பட்டியல் சூப்பர்..புதுசு புதுசா சிந்திக்கிறீர்கள் அண்ணாமலை அவர்களே.. நன்றாக இருக்கிறது.
ரொம்ப நன்றிங்க ஆதிரா அவர்களே!
கண்ணன் பற்றிய அறிமுகம் அருமை...
//வீணை மீட்டிவிட விரல்கள் முனைகையில்
நாதம் ஒலிப்பவனும் நானே!நானே!
மானே!தேனே! எனும் மயங்கும் வார்த்தைதனில்
மருகும் அன்புமது நானே!நானே!//
ரொம்ப நல்லா இருக்கு...
கருத்துரையிடுக