போன பதிவுல கொஞ்சம் ஓவராப் பேசிட்டதால நல்ல பிள்ளையா இந்தப் பதிவைக் கொடுத்திடறேன்.பதிவுல எந்த உள்குத்தும் இல்லைன்னு சொன்னா..
நீங்க என்ன நம்பவா போறீங்க??? மியூசிக் தொடங்கிருச்சா? ஓ.கே!
எப்படித்தான் பதிவெழுதுவது?
பத்திலோர் பதினொன்றாய்
....புத்தியை நீசெலுத்தி
பத்தியாய்ப் பதிவெழுதி
....பந்தியில் இட்டுவைக்க!
சித்திகள் உனக்குவரும்
....திட்டுகள் கூடவிழும்!
கலங்காதே அதைக்கண்டு!
....கவலையின்றி நீ எழுது!
எழுதியாச்சா ஓ.கே! அடுத்து என்ன செய்யனுமுன்னா.
தளராத மனமுடனே
....தலைவர்கள் பதிவுசென்று
தான்தோன்றித் தனமாகத்
....தனித்தெரிய பின்னெழுது!
சண்டைபோடத் தயங்காதே!
....சமத்துவங்கள் பேசிவிடு!
கொன்றிடுவார் தமிழைஅவர்
....கூறு!அவர் போல்வருமா?
அது மட்டும் பத்தாது!!அப்புறம் என்ன பண்ணனுமுன்னா..
எட்டுத்திக் கும்சென்று
....எழுதிஅவர் பதிவிணைக்க
கொட்டுமேளத் துடன்உன்னை
....குட்டிவாரி சாய்எடுப்பார்!
கண்ணீரை எழுதிவிடு!
....கவலைகளை உதறிவிடு!
பன்னீரோ! செந்நீரோ!
....பக்குவமாய்க் கடந்துவிடு!
பூக்களும் வரும்..சமயத்துல கல்லும் பறக்கும். பக்குவமா நாம ஒதுங்கிக்கிறதே அவ்வை பாணியில சொல்றதுன்னா"சாலச் சிறந்தது...!!!"
கடலுக்குள் மூழ்கியவன்
....கண்ணீரின் நிறம்சொல்வான்!
உடலுக்குள் மூழ்கியவன்
....ஒழுங்கிருக்க வழிசொல்வான்!
தேடவேண்டும்! தேடவேண்டும்!
....தேடிக்கொண் டிருக்கவேண்டும்!
தேடுதேடு! தேடுதேடு!
....தேடித்தேடித் தேறுதேறு!
தேடுனாக் கிடைக்காதது இந்த உலகத்துல இருக்கா என்ன?
"அன்பைத் தவிர!" . அதுனால நல்லாத் தேடுங்க. ஆனா,
அடுத்து வர்ரது தான் ரொம்ப முக்கியமானது!
தமிழுக்கோர் சிற்றழிவும்
....தன்னாலே நேருமென்றால்
தயவுசெய்து நிறுத்திவிடு!
....தலைவலியைத் துரத்திவிடு!
இயன்றவரை தமிழெழுதி
....இணையத்தில் புகுத்திவிடு!
முயன்றவரைக் கரையேற்ற
....முழுமூச்சாய் முனைந்துவிடு!
அறிவுர சொன்னது போதும் மகனே! பெரிசா பீலா விட்டியே!
பதிவன்னா யாருன்னு? அதச் சொல்லு!ஓ..பாட்டாவே கேட்டருறீங்களா?
பாடியதெல்லாம் சரிதான்!
....பதிவனென்றால் யார்கூறு?
பதிவனென்போன் யாரென்றால்?
....பதிவெழுதத் தொடங்கியே! ஓர்
பத்துமாதம் ஆனபின்னே!
....பதிவனென்றால் யாரென்றோர்
பதிவுதனை இடுபவனே
....பதிவனெனக் கொண்டிடுக!
அதிகமாய்ப் பேசிவிட்டேன்!
....அடிகள்கூட விழக்கூடும்!
தீந்தமிழால் திட்டென்றால்
....தேனெனவே பெற்றிடுவேன்!
அனைத்தையும் எழுதிவிட்டு
...."அப்பப்பா! அனைத்துமிங்கே!
விளையாட்டுக் கென்றுசொல்லி
....வினையில்லை என்றுமுடி!"
(*இது 50-ஆவது பதிவுன்னா.. அதற்காக இப்படியா?)
கவிதை(?) கொஞ்சம் சிறியதாகப்(?)போய்விட்டதில் வருத்தமே! இவ்வளவு சின்னக் கவிதையை யாரு முழுசாப் படிச்சுறப் போறாங்க? ;-)
பதிவன் என்பவன் யார்???
இடுகையிட்டது
அண்ணாமலை..!!
at
புதன், 8 செப்டம்பர், 2010
12 கருத்துகள்:
நல்ல வரிகள்.. உண்மையான வரிகள்... அண்ணாமலை சார், இப்படி கலக்குறிங்க!!!!
//சித்திகள் உனக்குவரும்
....திட்டுகள் கூடவிழும்!
கலங்காதே அதைக்கண்டு!
....கவலையின்றி நீ எழுது//
இதை தான் நானும் செய்துக்கொண்டிருக்கிறேன்..
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்... 50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
அதிகமாய்ப் பேசிவிட்டேன்!
....அடிகள்கூட விழக்கூடும்!
தீந்தமிழால் திட்டென்றால்
....தேனெனவே பெற்றிடுவேன்!
அனைத்தையும் எழுதிவிட்டு
...."அப்பப்பா! அனைத்துமிங்கே!
விளையாட்டுக் கென்றுசொல்லி
....வினையில்லை என்றுமுடி!"
//
அத்தனையும் கூறிவிட்டு அடிவாங்காமல் லாவகமாய் தப்பிக்க இப்படியும் ஒரு வழியா..
அத்தனையும் உண்மையான வரிகள்... மிகவும் ரசித்தேன்..
பதிவன் இலக்கணம் பாங்காய் பகிர்ந்திட்ட
மலைகளின் மலையே... அண்ணாமலையே......
நீயே பண்பாளன்.. நீயே பதிவன்...
எனக்கு கவிதை வராது.. அண்ணாமலை ப்ளாக்-ன் பின்னூட்டாளரும் கவி பாடுவார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
அருமை அருமை....அண்ணாமலை.ஏன் இப்படி ஒரு சிந்தனை !
இன்னும் தொடர்ந்து எழுத மனம் நிறைந்த வாழ்த்துகள்.
கலக்கல் கவிதை..... என்ன அழகான தமிழ் வார்த்தைகள்! கருத்தும் அசத்துது!
50 - வாழ்த்துக்கள்!
தங்களின் முத்தான 50வது பதிவிற்கும் மற்றும் நாங்கள் காண இருக்கும் பற்பல பதிவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்...
50வது பதிவு கவிதைகளுடன் அருமையாய்....
அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்!
___/\_____
கலக்கலான வரிகள்..வாழ்த்துகள்!!!
ரொம்ப நன்றிங்க!
நல்லாருக்குங்க!
கருத்துரையிடுக