புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

5,6 வரிச் சிறுகதைகள்!

*
ராஜனும்,ராமுவும் நண்பர்கள்.எங்கும் ஒன்றாகவே செல்வார்கள்.

இணைபிரியாத நண்பர்களான அவர்கள்,
பிறிதொரு நாளில் பிரிந்தார்கள் மனக்கசப்பால்..

மீண்டும் ஒருநாள் இணைந்தார்கள்.
பக்கத்து பக்கத்துக் கல்லறைகளில்..
(வாழும் காலம் கொஞ்சம்!)

******************************

கையினில் சினேகமாய் ஊர்ந்து விளையாடியது எறும்பொன்று.
தட்டிவிட்டு தேடிச்சென்று செருப்பால் தேய்த்தேன்.

"அப்பாடா! காலில் படவில்லை!"!

தலையில் நசுங்கல்பட்டு செத்திருந்தது.
எறும்பும் கூடவே..
காருண்யமும்!

******************************

2 வாழைப்பழம் வாங்கிவரச் சொன்னேன்.1-மட்டும் வாங்கி வந்தான்.

"எங்கே?வாழைப்பழம்?" என்றேன்.

"இதுதான் அது" என்றான். குழப்பம்.

இது எப்படி அதுவாகும்.

இப்பழம் சிவப்பாய்,உருண்டையாய் இருக்கிறது.
இல்லை.இது இன்னும் குழப்பமான கதை.

******************************
னிதாவும்,கார்த்திக்கும் காதலித்தார்கள்.அவளுடைய மாமனுக்கு இது தெரிந்து விட்டது.

கையில் அரிவாளுடன்.."ஹேன்ட்ஸ் அப்! யூ ஆர் அண்டர் அரஸ்ட்!
உங்களை நாங்க இப்ப கைது பண்ணப் போறோம்!..."

மன்னிக்கவும்..!"அலைகள் ஓய்வதில்லை" படத்தில், பில்லா போலீஸ் மேஜர் சுந்தர்ராஜனின் கிளைமாக்ஸ் வந்துவிட்டது.

*******************************
"உன்னால் முடியும் தம்பி.. தம்பீ!!!!!!" எங்கோ ரேடியோவில் பாடல் தன்னம்பிக்கையுடன்.

"டேய்! இது உன்னால முடியலேன்னா எதுக்குடா வர்றீங்க..!முயற்சி இருக்கனும்டா!"

"டேய்.சும்மா இரு! இந்த உலகத்துல முடியாதது எதுவுமே இல்ல!"

"ஹி..ஹி..பார்க்கத்தானே போறேன் உன்னோட திறமைய."

"இந்தா என்னால முடியலாட்டி நீ என்னான்னு கேளு..நீ ஊத்துடா!"

6-ஆவது ரவுண்டுக்கு சியர்ஸ் சொல்லி அவனைத் தயார் செய்தார்கள்.

பாட்டு எங்கோ கரைந்தது. "உன்னால் முடியும் தம்பி.தம்பீ(ர்)!!!!!

****************************************

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே- இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!!!!"

டேய்! யாருடா இது? ஃபங்சன் நடக்குற பள்ளிக்கூடத்துல இந்த மாதிரிப் பாட்டுப் போடுறது.மொதல்ல நல்ல கலக்கலாப் பாட்டுப் போடுங்கப்பா!பசங்களுக்கு ரிகர்சலுக்கு எடைஞ்சலா இருக்காம்!

குழந்தைகள் ஆர்வத்துடன் ரிகர்சல் செய்ய..பெற்றோர்கள்
ஆர்வக்கோளாறுகளுடன் கைதட்டினார்கள்.அருந்தமிழ்ப்பாட்டு..
"டாடீ..மம்மீ...வீட்டில் இல்ல!
தடபோட யாருமில்ல!"

(வாவ்..! வெளங்கிரும்!)

**************


பி.கு:
* சும்மா ஒரு முயற்சிதான்! என்னவாயிருந்தாலும் சொல்லுங்க.
மெக்கானிக்க வச்சாவது சரிபண்ணிரலாம்!

7 கருத்துகள்:

ருத்ர வீணை® 6 செப்டம்பர், 2010 அன்று 7:21 PM  

//"டாடீ..மம்மீ...வீட்டில் இல்ல!
தடபோட யாருமில்ல!"//

அதான் இப்படியெல்லாம் எழுத தோணுது..

எல்லா கதையும் அருமை !!

Chitra 6 செப்டம்பர், 2010 அன்று 11:59 PM  

ராஜனும்,ராமுவும் நண்பர்கள்.எங்கும் ஒன்றாகவே செல்வார்கள்.

இணைபிரியாத நண்பர்களான அவர்கள்,
பிறிதொரு நாளில் பிரிந்தார்கள் மனக்கசப்பால்..

மீண்டும் ஒருநாள் இணைந்தார்கள்.
பக்கத்து பக்கத்துக் கல்லறைகளில்..
(வாழும் காலம் கொஞ்சம்!)


..... எல்லாமே நன்றாக இருந்தாலும், முதல் "சிறுகதை" கருத்துடன், தனித்தன்மையுடன் முதல் பரிசை தட்டி செல்கிறது.

ஜெயந்த் கிருஷ்ணா 7 செப்டம்பர், 2010 அன்று 9:02 AM  

ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையை சொல்கிறது

அண்ணாமலை..!! 7 செப்டம்பர், 2010 அன்று 5:03 PM  

@ ருத்ர வீணை®,

ஏனுங்க..அம்புட்டா ரகளை செய்யுறேன்!



@ Chitra,

பரிசை வாரிவழங்கிய சித்ரா அவர்களுக்கு
நன்றி! நன்றி! நன்றி! :)


@ வெறும்பய,

அப்புடியா?(கதைன்னு ஒத்துக்கிட்டாங்க!)
ரொம்ப நன்றிங்க!

RVS 7 செப்டம்பர், 2010 அன்று 6:17 PM  

அட்டகாசம் அண்ணாமலை...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அண்ணாமலை..!! 8 செப்டம்பர், 2010 அன்று 3:16 PM  

நீங்க சொல்லிட்டீங்கள்ள..!
அப்ப சிறப்புதான்!

தனி காட்டு ராஜா 16 செப்டம்பர், 2010 அன்று 11:50 AM  

நல்ல முயற்சி....

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!