புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

எனக்கு மட்டும்தான் இப்படியா? (பேருந்துகளில்!)



பேருந்துகளாலும், பேருந்துக்குள்ளும் ஏற்படும் சிற்சில அனுபவங்கள் மற்றும் தொல்லைகள் கீழ இருக்குங்க! படிச்சு மனசைத் தேத்திக்குங்க!(ஒப்பிட்டுக்குங்க!)எனக்கு மட்டும்தான் இப்படியா? இல்ல, எல்லாருக்குமே இப்படித்தானா?

1. 8.50 - க்கு வர்ற பேருந்துக்கு நாம ஒரு நாள் 8.51 க்குப் போனாலும் கரெக்டா வெள்ளக்காரன் மாதிரி 8.50-க்கே அந்தப் பேருந்து போயிருக்கும்.ஆனா,
அதே பேருந்து நாம வழக்கமா 8.40 - லயிருந்தே கொடுமையாக் காத்திருந்தாலும் 8.59 வருவானே ஏன்?

2. நாம பேருந்துக்காகக் காத்திருக்கும்போது மட்டும் நாம போக வேண்டிய பேருந்து வராம , நமக்கு எதிர்த்திசையிலயே பேருந்து வரிசையாப் போயிட்டிருக்குமே? ஏன்?

3.அடிச்சுப் புடிச்சு பேருந்துல ஏறி சீட்டுப் போட்டு உட்கார்ந்துட்டாலும் வயதானவரோ,குழந்தையுடன் வருபவரோ(நாம சீட்டுக் கொடுப்போம்தான்!)அத்தனை பேர் இருந்தாலும், சரியாகக் கருணை மணியான நம்மை அப்ரோச் செய்வது ஏன்?

4. இன்னும் சிலபேர் கொஞ்சம்கூட கருணை இல்லாம அழுகிற குழந்தையை பயமுறுத்த "பாரு!அழுதா மாமா பிடிச்சிக்கிட்டுப் போயிடும்னு !" நம்மளப் பச்சப்புள்ளைக்கிட்ட பூச்சாண்டியாக்குறது ஏன்?

5.இதனால நாம அந்தப் பிள்ளையைப் பார்க்கும்போதெல்லாம் நம்மை அது "கொன்னு!, மூக்கறுத்து!" என சைகை வேறு செய்ய, அந்தத் தாய்க்குலம் வேறு "இவன் அப்படியே ! அப்பா மாதிரி!" என அதை திருஷ்டி கழிப்பதும், நாம் கிடந்து அல்லாடுவதும் ஏன்?

6.எல்லாரிடமும் 100ரூ-க்கு 97ரூபாயையே கவலையில்லாமல் சில்லறைகளாக வாரி வழங்கும் கண்டக்டர், நம்மிடம் மட்டும் 10ரூக்கே 3ரூ சில்லறை இல்லை என்று சிடுசிடுப்பது ஏன்?

7. எல்லா ஆண்களும்கூட, ஆளில்லாத காரணத்தால் சீட்டில் அமர்ந்திருக்க நம்மிடம் மட்டும் வந்து இது மகளிர்சீட் தானே! எந்திரிங்க! சீட் கொடுங்க ப்ளீஸ்! என மகளிர்கள் ஆதிக்கம் செய்வதுமேன்? :)

8.ஏழு பேரு ஒத்தை ஒத்தையா ஒவ்வொரு சீட்ல உட்கார்ந்திருந்தாலும், லேடீஸ் வந்தா "ப்ளீஸ்!கொஞ்சம் ஜென்ட்ஸோட மாறி உட்கார்ந்துக்குறீங்களா?" எனநம்மிடம் மட்டும் கருணை மனு போடுவதேன்!(சில சமயம் அதிகாரமும்!)

9.என்றாவது, பேருந்தில் எல்லாரும் தூங்கறாங்களே! நாமும் தூங்கித்தான் பார்ப்போமே! என முனையும் போது ,"யாரு பெரியவீதி-ல மூணாவது வீடா?நானும் உங்கப்பாவும்..!"என ஒருவர் வந்து வினைக்குன்னே மாட்டிக் கேள்வியாக் கேட்பாரே?ஏன்?

10. காற்றுப் புகாத இடைவெளியிலும் கனகச்சிதமாகப் புகுந்து வரும் கண்டக்டர் , ஒரு ஆட்டோ போகுமளவு இடமிருந்தும்,நம்மிடம் வரும்போது மட்டும் நம் காலைக் குறிவைத்து மிதித்துவிட்டு "சாரி!"கூட சொல்லாமல் பணிமுடிந்த திருப்தியில் செல்வாரே ஏன்?

11. பாருங்க..! எல்லா ஸ்டாப்பிலும் , சரியாக விசிலடித்து நிறுத்திச் சொல்லும் கண்டக்டர் நம்முடைய ஸ்டாப்பில் மட்டும் நம்மைக் கதறவிட்டு விசிலடித்து நிறுத்துவாரே ஏன்?
டிரைவரும் கண்டக்டருக்கு சற்றும் சளைக்காமல் விசிலடித்து 120 நொடிகள் கழித்தே வண்டியைப் போனால் போகட்டும் என நிறுத்துவது ஏன்?

12.சரி இதையெல்லாம் விடுங்க! இதுபற்றியெல்லாம் குமுற நினைத்து பேருந்தில் அமர்ந்து குறிப்பெழுதும்போது, ஒருவர்
"தம்பி! நீங்க பதிவெழுதுறீங்களா?" என நம்மை சரியாகக் கவனித்து ஆப்படிப்பது ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

7 கருத்துகள்:

கோவி.கண்ணன் 2 செப்டம்பர், 2010 அன்று 12:18 PM  

:) நல்லா இருக்கு

Chitra 2 செப்டம்பர், 2010 அன்று 12:28 PM  

சரி இதையெல்லாம் விடுங்க! இதுபற்றியெல்லாம் குமுற நினைத்து பேருந்தில் அமர்ந்து குறிப்பெழுதும்போது, ஒருவர்
"தம்பி! நீங்க பதிவெழுதுறீங்களா?" என நம்மை சரியாகக் கவனித்து ஆப்படிப்பது ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?


...... அதுக்கு இன்னொரு பதிவு போடுங்க..... :-)

அண்ணாமலை..!! 2 செப்டம்பர், 2010 அன்று 12:34 PM  

@ கோவி.கண்ணன்,

ரொம்ப நன்றிங்ணோவ்!
:)


@ Chitra,

சொல்லிட்டீங்கள்ள!
வேதனை உங்களுக்கு வேடிக்கையா??
:)

ருத்ர வீணை® 2 செப்டம்பர், 2010 அன்று 1:28 PM  

இதெல்லாம் ரொம்ப பழைய கால கதைங்க.. இப்போ எல்லம் எங்க பஸ்ல போறானுங்க.. அவனவன் ஒரு கார் வச்சிகிட்டு டிரஃபிக் ஜாம் பண்றனுங்க.. சரி அத விடுங்க, இதெல்லாம் இல்லனா அது தமிழ்நாடு பஸ் இல்லீங்களே.!!! (என்ன சரிதானே ?!!)

அண்ணாமலை..!! 2 செப்டம்பர், 2010 அன்று 2:35 PM  

@ ருத்ர வீணை®,

//இதெல்லாம் இல்லனா அது தமிழ்நாடு பஸ் இல்லீங்களே.!!! (என்ன சரிதானே ?!!) //

உண்மை வெறும் புகழ்ச்சியில்லை!
அப்படித்தானே!

RVS 2 செப்டம்பர், 2010 அன்று 6:26 PM  

இந்த முதல் ரெண்டு பஸ் மாட்டாரு.. மர்ஃபிஸ் லா அப்படின்னு பேரு... நல்ல கலெக்ஷன்..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அண்ணாமலை..!! 4 செப்டம்பர், 2010 அன்று 4:33 PM  

@ RVS,

என்னமோங்க! நமக்கு மட்டுந்தான் இப்படியா?
இல்ல எல்லாருக்குமே இப்புடித்தானா?
:)

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!