புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

சில நல்லவர்களைப் பற்றி!



காங்கிரஸில் அந்த மாமனிதர் உறுப்பினராயிருந்த காலம்.
கிடைத்த குறைவான சம்பளத்தில் குடும்பத்தை ஓரளவு மனநிறைவுடனே அந்தத் தம்பதியினர் ஓட்டி வந்தார்கள்.
அந்த மாமனிதரின் மனைவிக்கோ ஒரு சிறிய நகை வாங்கிவிட வேண்டுமென்று வெகுநாளைய ஆசை.கேட்டாலும் "ஆகட்டும் பார்க்கலாம்!" என காமராஜர் போல சொல்லிவந்தாரே அன்றி அந்தக் கணவர் அந்நினைப்பை ஏறெடுத்தும் பார்த்தாரில்லை.

பொறுத்துப் பொறுத்துப்பார்த்த மனைவி ஒருநாள் கணவனை அழைத்தவர்
"நீங்கள் ஒன்றும் எனக்கு அதனை வாங்கித்தர வேண்டாம்.நானே வாங்கிக்கொள்வேன்.
என்னிடம் கொஞ்சம் பணமுள்ளது " என்று கணவனிடம் காண்பித்தார்.

"உனக்கு எப்படிக் கிடைத்தது இந்தப் பணம்"? என்றார் அந்தக் கணவர்.

மாதந்தோறும் நீங்கள் தரும் சம்பளத்தில் குடும்பச்செலவு போக..மீதப் பணத்தை சேர்த்து வைத்துள்ளேன்.உங்களின் 120 ரூ சம்பளத்தில் 90 ரூபாயைக் குடும்பச்செலவு போக மீதம் 30 ரூபாயை சேமித்தேன்.அதில் வந்த தொகைதான் இது என்று காண்பித்தார்,கணவர் தனது சேமிப்புத்திறனைப் பாராட்டுவார் என்ற நோக்கில்.
அந்த மாமனிதர் உடனே ஒரு கடிதம் எழுதினார் தன்னுடைய காரியாலயத்திற்கு,

என்னுடைய குடும்பத்தை நடத்துவதற்கு 90 ரூபாயே போதுமானதாக உள்ளது.ஆனால்,நீங்கள் எனக்கு 120ரூ சம்பளம் அளிக்கின்றீர்கள்.எனவே அடுத்த மாதத்திலிருந்து அந்த 30 ரூபாயைக் குறைத்து எனக்கு சம்பளம் வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.மேலும்,
இதுவரை எனக்களித்த அந்த 30 ரூ அதிகப்படி சம்பளத்தை மொத்தமாக இந்தக் கடிதத்துடன் அனுப்பி வைத்துள்ளேன்!"

இப்படி அனுப்ப , அந்த மனைவி என்ன நினைத்திருப்பாள்?
அந்த மாமனிதர் திருமிகு.லால்பகதூர்சாஸ்திரி அவர்கள்.


*****

ப.ஜீவானந்தம் என்பவர் அந்நாளைய புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர்.
ஒருமுறை அகில இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு மூட்டையுடன் ஊருக்கு வரும் வழியில்,

அவரைக் கண்ட நண்பர்.
"என்ன ஜீவா? வெயிலில் இப்படி வருகிறீர்களே?"
எனக் கேட்டுவைக்க,

"கட்சிக்கூட்டம் முடிச்சிட்டு இப்பத்தான் வர்ரேன்."

"ரொம்ப சோர்வா இருக்குறீங்களே! சாப்பிட்டாச்சா?"

"இல்லைப்பா! ரொம்பப் பசியாத்தான் இருக்குது! ஆனா, கையில காசு இல்லை.அதான் வீட்டுல போயி சாப்பிட்டுகுறேன்!"

"ஏங்க அப்படி? அது என்ன கையில மூட்டை?"

"ஓ!இதுவா? இது கட்சிக்காக தொண்டர்கள் திரட்டிக்குடுத்த நிதிப்பணம்"

"அதுல கொஞ்சம் எடுத்து சாப்பாடு வாங்கிட்டு பிறகு வைத்துவிடலாமே!" என நண்பர் கேட்க..

"ஐயையோ! இது கட்சிக்காகத் தொண்டர்கள் கொடுத்த நிதி! இதைத் தொடக்கூடாது.நான் வீட்டுலயே போயி சாப்பிட்டுக்கிறேன்."

எனக் கூறிவிட்டு நண்பர் அழைத்ததற்கும் மறுத்து தன்வழியில் பயணமானார் அந்தத் தன்னலமற்ற தலைவர்.


*****


ன்னியாகுமரியில் சிற்றாறு அணைக்கட்டுத் திட்டத்தை செயல்படுத்தினார் கர்மவீரர்.உடனே ரப்பர் தோட்ட முதலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து காமராஜரை சந்தித்தனர். ஒரு கோரிக்கையுடன்,
"இங்கு அணை கட்டப்பட்டால் ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவுள்ள இந்த ரப்பர் தோட்டங்கள் எல்லாம் பாழாகிவிடும்.அதனால், அணைகட்டும் திட்டத்தைக் கைவிட்டு விடுங்கள்" என்றும் கூறினார்கள்.

காமராஜர் அவர்களை நிதானமாகப் பார்த்துவிட்டுச் சொன்னார்.
"அரிசிக்குப் பதிலாக நீங்கள் கூறுகின்ற இந்த ரப்பரைத் தின்றே மக்களெல்லாம் உயிர் வாழ முடியுமென்றால் சொல்லுங்கள். அணைக்கட்டுக்கான திட்டத்தைக் கைவிட்டுவிடுகிறேன்!"

"நாடு பார்த்ததுண்டா? இதுபோல் தலைவரை நாடு பார்த்ததுண்டா?"
என்றுதான் தோன்றுகிறது.

********************************
நன்றிகள்!

15 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ 4 செப்டம்பர், 2010 அன்று 1:04 PM  

அருமை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

இதே போல நான் கேட்ட ஒரு சம்பவம். நுங்கம்பாக்கத்தில் அண்ணா குடி இருந்த பொழுது அருகில் இருந்த முடி திருத்தும் கடைக்கு நடந்தே செல்வாராம் (இப்போதும் அந்த கடை உள்ளது, விஜய் டி வி, நிசான் சர்வீஸ் ஆபீஸ் அருகில், மீனாட்சி ஹோட்டல் எதிர் புறம் உள்ள வீடு.) பெரியவரின் மகன் இப்போது அதை நடத்துகிறார்).

ஒரு முறை காலையில் முடி வெட்டி விட்டு பணம் கொடுக்கையில் மீதி இரண்டு ரூபாய் இல்லை என்றதும், வெற்றிக்கு சென்று தானே எடுத்து வந்து கொடுத்தாராம்.
இன்று நினைத்தால் கொட நாட்டிற்க்கு விமானப் பயணம்.

அண்ணாமலை..!! 4 செப்டம்பர், 2010 அன்று 1:21 PM  

தங்களின் பகிர்தலுக்கும் நன்றிகள் நண்பரே!
இப்போது எளிமையான அரசியல்வாதியாக இருந்தால்,
எளிதில் ஆபத்து வந்துவிடும் என்ற பயம் எல்லாத் தரப்பு அரசியல்தலைவர்களுக்கும் உள்ளது போலும்!

மோகன்ஜி 4 செப்டம்பர், 2010 அன்று 3:36 PM  

அண்ணாமலை சார், உங்கள் பதிவைப் படித்தவுடன் மனது நெகிழ்ந்து போய் விட்டது. பொது வாழ்வில், தூய்மை,எளிமை போன்றவைகளை இன்று யாராவது சொன்னால் அது ஒரு கதைப் போல தோன்றலாம். ஹும்.. திருவாளர் பொதுஜனம் எதெல்லாம் கேட்டு பெருமூச்சு விடத்தான் முடியும்

அண்ணாமலை..!! 4 செப்டம்பர், 2010 அன்று 4:31 PM  

@ மோகன்ஜி,

இது போன்ற மனிதர்களும் இருந்தாங்கன்னு நினைச்சுப் பெருமூச்சுதான் இப்ப விடமுடியும்!
பொதுஜனம் ஓட்டுப்போடும் இயந்திரமாகி ரொம்பக் காலம் ஆச்சுங்க!
:)

ருத்ர வீணை® 4 செப்டம்பர், 2010 அன்று 7:26 PM  

இவர்கள் தலைவர்கள். இப்போதுள்ளவர்கள் ????

RVS 4 செப்டம்பர், 2010 அன்று 9:43 PM  

பை நிறைய கட்சி காசு இருந்தும் ஒரு டீ கூட வாங்கிக்குடிக்காத ஜீவா எங்கே.. பல லட்ச ரூபா டீ செலவுக்கு எழுதிட்டு காசை பைல போட்டுக்குற மக்கள் எங்கே... ஒன்னும் சொல்றதுக்குல்லை. நல்ல பதிவு. தொடர வாழ்த்துக்கள்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Chitra 4 செப்டம்பர், 2010 அன்று 9:48 PM  

இவர்களை பற்றி எழுதி இருப்பதற்கு நன்றி. நல்ல தலைவர்களையும் அவர்களின் கொள்கைகளையும் நாடு மறந்து விட்ட நேரம் இது!

Unknown 5 செப்டம்பர், 2010 அன்று 7:45 AM  

நல்ல தலைவர்கள் நம் நினைவுகளாய்ப் போனதுதான் கொடுமை.

ரிஷபன் 5 செப்டம்பர், 2010 அன்று 9:07 AM  

நல்ல தலைவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று ”கடந்த காலத்தில்” சொல்ல நேர்வதே நம் தலையெழுத்து.
மீண்டும் நினைவு கூர்ந்து மனம் கனத்தது.

அண்ணாமலை..!! 5 செப்டம்பர், 2010 அன்று 11:09 AM  

@ ருத்ர வீணை®,

(நானும்..)
இப்போதுள்ளவர்கள் ????


@ RVS,

ரொம்பவே நன்றிங்க!


@ Chitra,

நாடு திரும்பப் பெற முடியாத தலைவர்கள்!


@கலாநேசன்,
@ ரிஷபன்,

இப்போதும் அப்படி யாரேனும் இருக்கின்றார்களோ என்னவோ?
ஒருவேளை இறப்பிற்குப் பின்னர் விருதுகள் கொடுத்து நாம் அவர்களைக் கொண்டாடக்கூடும்! :)

nimmie 5 செப்டம்பர், 2010 அன்று 11:39 AM  

Some are still alive like Nallakannu

முத்துலெட்சுமி/muthuletchumi 5 செப்டம்பர், 2010 அன்று 2:14 PM  

பாராட்டுக்கள் ..நல்லவர்களைப்பற்றி மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தால் யாருக்காவது அதில் ஒரு பர்சண்டேஜ் நடக்கமுடியுதா பார்ப்பம்..

ம.தி.சுதா 6 செப்டம்பர், 2010 அன்று 1:08 AM  

நல்ல பதிவொன்று சகோதரரே... என் தள வருகைக்கும் பின் தொடர்ந்தமைக்கும் மிக்க நன்றி...

வைகறை நிலா 6 செப்டம்பர், 2010 அன்று 10:37 AM  

நற்குணங்கள் நிறைந்த தலைவர்களை பற்றிய தொகுப்பு..வெகு சிறப்பு..

அண்ணாமலை..!! 6 செப்டம்பர், 2010 அன்று 3:52 PM  

@ nimmie,

ஆம் நண்பரே!அவரின் எளிமை பற்றி நானும் கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன்!


@ முத்துலெட்சுமி/muthuletchumi,

அதேதானுங்க!


@ ம.தி.சுதா,

தங்களுக்கும் நன்றிகள் பல!


@ வைகறை நிலா,

ரொம்பவே நன்றிங்க !!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!