*
காவிரிநீர்..
கரைபுரண்டு..
கர்நாடகாவிலிருந்து..
ச்சே!
காலையிலேயே
கனவு!
**************
"சிந்திக்காமல்
சில நேரம் இரு"
என்றேன் மனதை!
நிந்திக்கிறது
அறிவு!
***************
எங்குள்ளது உயிர்?
கழுத்தில்..?
இருதயத்தில்..?
மூளையில்..?
என் காலில் முள்குத்த
அலறுகிறாள்
தாய்..
இப்போது சொல்லுங்கள்!
****************
சிறப்பு!
அர்ச்சனைத் தட்டில்
ஆயிரத்தை விட..
அனாதை இல்லத்தில்
அரைப்பணம் இடுவது!
****************
செத்துமடிந்த மரம்
சொல்கிறது சேதி!
நான் மீண்டும் வருவேன்!
அதோ...!
காற்றில் பறக்கிறது..
ஒற்றை விதை!
****************
வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம்
வாடினேன்!
"ப்ச்"
இந்தக் கீரையை
நாளை யார் வாங்குவார்கள்?
****************
மூன்றாவது முறையாக
சில்லறை கேட்கப் போனேன்!
கடைக்காரர்
வசைபாடி விரட்டினார்.
பிச்சைக்காரனை!
பெரிய வித்தியாசமில்லை!
****************
இதுகளைக் கவிதைன்னும் சொல்லலாம்.
சிலசமயங்கள்ள கழுத்தறுப்புன்னும் சொல்லலாம்.
ஆனாலும்,
அவ்ளோதான்!
:)
உறை(ரை)ப்புகள்!
இடுகையிட்டது
அண்ணாமலை..!!
at
திங்கள், 13 செப்டம்பர், 2010
லேபிள்கள்: சில (க)விதைகள்
16 கருத்துகள்:
செத்துமடிந்த மரம்
சொல்கிறது சேதி!
நான் மீண்டும் வருவேன்!
அதோ...!
காற்றில் பறக்கிறது..
ஒற்றை விதை!
......கருத்து செறிந்த கவிதை....
நல்லா இருக்கு அண்ணாமலை...வாழ்த்துக்கள்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
ஏதாவது ஒன்றை இரண்டைப் பொறுக்கி நல்லாயிருக்கென்று சொல்லலாம் என்றால் முடியாது அண்ணாமலை.எல்லாமே அற்புதம் !
Easy 1...2...3. Read and write your own article. A new collabrative dimension - www.jeejix.com
//செத்துமடிந்த மரம்
சொல்கிறது சேதி!
நான் மீண்டும் வருவேன்!
அதோ...!
காற்றில் பறக்கிறது..
ஒற்றை விதை!//
காற்றில் பறக்கிறதுனு சொல்லறதுக்கு பதிலா
மண்ணில் புதைகிறதுனு சொல்லலாம்.. சும்மா தோனுச்சு..!!
அருமையான கவிதைகள்..
தங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்...
http://verumpaye.blogspot.com/2010/09/blog-post.html
உங்கள் கவிதைகளில் எப்போதும் ஒரு தனித்தன்மை உள்ளது .. வாழ்த்துக்கள்..
@ Chitra,
தங்களது கருத்தான பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல!
@ RVS,
நீங்க சொன்னா சரிதான்!
ரொம்பவே நன்றிங்க!!!!
@ ஹேமா,
அப்புடியா சொல்லுறீங்க! அப்ப நல்லாதானிருக்கும்!
@ sweatha,
உங்கள் முயற்சிக்கு நன்றிகள்!
@ ருத்ர வீணை®,
நீங்க சொல்றதும் அழகாத்தாங்க இருக்குது!
ஆனா, தன்னம்பிக்கை மாதிரி சொல்லுறப்ப
"புதைகிறது"-ந்னு சொல்றது ஒரு மாதிரியா இருக்கும்"-ங்கிறது எனக்கு சும்மா தோணுச்சு!:)
"புதைக்கப்படவில்லை - விதைக்கப்படுகிறார்கள்!"
என்றெல்லாம் பலரும் கருத்து சொல்வதால் இதுவும் அழகே!
(என்னாது..?? இதுக்கு பதிவே பரவால்லையா..?!)
@ வெறும்பய,
சிறுத்த சிக்கிருச்சு!
எனக்கும் அந்த ஆவல் இருக்கு நண்பரே!
கூடிய சீக்கிரம் நேரமும்,தகவல்களும் பொருந்துறப்ப எழுதிர வேண்டியதுதான்!
@ Dharshi,
வாழ்த்துக்கு நன்றிங்க!
(எனக்குத் தாங்க உங்க ப்ரொஃபைல் பாக்க தைரியமில்ல!)
:)
வாடிய பயிர் கவிதை நன்றாக இருக்கு....
அர்ச்சனை தட்டு கவிதை இன்றைய சமூக நிலையை காட்டுகிறது...
அற்புதமான கவிதைகள்.
வாழ்த்துக்கள் நண்பரே
கவிதை அனைத்தும் நலம்.
அருமையான கவிதைகள்!!!!
///காவிரிநீர்..
கரைபுரண்டு..
கர்நாடகாவிலிருந்து..
ச்சே!
காலையிலேயே
கனவு!
///
எப்படிங்க இப்படி.. நல்ல கனவு தான் போங்க.. :D
காவிரிநீர்..
கரைபுரண்டு..
கர்நாடகாவிலிருந்து..
ச்சே!
காலையிலேயே
கனவு!//
ஹஹ்ஹா மிக அருமை அருமை!!
@ வெண் புரவி,
@ ராஜவம்சம்,
@ Priya,
@ Ananthi,
@ மைந்தன் சிவா,
அனைவருக்கும் மிக நன்றிகள்!
எல்லா உரைப்புகளும் அருமையாய்...
//வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம்
வாடினேன்!
"ப்ச்"
இந்தக் கீரையை
நாளை யார் வாங்குவார்கள்?//
மிகவும் அருமை...
நானும் வாடிக்கொண்டு உங்கள் பாதம் எந்தன் பக்கம் நீண்டகாலமாக படாமல்...
பதிவுகள் இட்டும் நாட்கள் ஆகிவிட்டன... நலமுடன் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டி நான்....
கருத்துரையிடுக