*
காந்திஜியோட பையன் பேரு என்ன? தெரிஞ்சவங்க சொல்லலாம்?
யோசிங்க.. யோசிங்க..!
விடை கீ..ழே!
***********************************
“அண்ணே! மொய்தீன் அண்ணே!
நல்லா இருக்கீங்களாண்ணே”
“நல்லா இருக்கேம்ப்பா! நீ நல்லாஇருக்கியா?”
“நல்ல்ல்லா இருக்கண்ணே!வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?போன் எதுவும் பண்ணுணீங்களா?”
“இன்ஷா அல்லாஹ்!!!!! பண்ணுணேம்ப்பா!
நேத்துகூடப் பேசுனேன். எல்லாம் நல்லா இருக்காங்க.”
“சாப்பிட்டாச்சாண்ணே!”
“இல்லப்பா !”
“ஏண்ணே! மணியாச்சே!”
“ஆமாமா!”
“என்ன போங்க! இத்தன மணியாச்சு .இன்னுமா சாப்பிடாம இருக்குறது.”
“ம்ம்.”
“என்னண்ணே! என்ன வேலை இருந்தாலும் முதல்ல சாப்பிட்டுட்டு அப்புறம் பாருங்கண்ணே!
போங்கண்ணே முதல்ல!”
“தம்பி ! நான் நோன்புல இருக்கேன்!” - சொல்லிவிட்டு அவர் அகல,
(ஆகா! இது தெரியாமப் போச்சே!)
"உணர்ச்சிவசப்பட்டவண்டா தமிழன்!" என்று விரல்களை மடக்கி, பல்லைக் கடித்து கட்டைவிரலும், ஆட்காட்டிவிரலும் படுமாறு இதயப்பகுதியில்(என்னுடையதில்தான்!) ரெண்டு குத்துவிட்டேன்!
***********************************
தமிழ்ல இரண்டு வார்த்தைகளாக வரும் வாக்கியங்களைக் கொஞ்சம் மாற்றிப் போட்டால் கட்டளை போடுவது போல் வந்துவிடுமென்று நண்பர் விஷ்ணு சொன்னார்.
உதாரணத்திற்கு,
அவரையே முதலில் அழைத்துவிடுவோம்.
வீட்டுக்கு விருந்தாளி வருகிறார்.
அவரையே
"வாங்க.விஷ்ணு!" என்றால் எப்படி..
"விஷ்ணு. வாங்க!" என்றால் கட்டளை போல் மாறிருதுல்ல...
அவர் வரும்போதே ஒரு சைஸாக விழிக்க நேரிடும்.
"அதை எடுங்களேன்!" என்றால் கெஞ்சல்.
"எடுங்களேன் அதை!" என்றால் கொஞ்சல்(?!கட்டளை)
"உள்ளே உட்காருங்க!" , வெளில இருங்க! , சாப்பிட வாங்க!,
என இவற்றை எல்லாமே மாற்றிப் போட்டால் கட்டளை தான்!
***********************************
எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு அருமையான பெரிய கல் இருக்கிறது.அதில்தான் கிறுக்குவேன் சமயத்தில். இப்போது கணினி வந்தபிறகு எழுதுவது குறைந்துவிட்டது.
சரி! தமிழ்நாட்டில் நாம் சோழர்,பாண்டியர்,சேரர் என அனைவரைப் பற்றிய தகவல்களையும் எப்படி அறிய முடிகிறது.ஒவ்வொருவரைப் பற்றியும் செவிவழிச்செய்தியாகப் பல பாடல்கள் உள்ளபோதும் வரலாற்றுநோக்கர்களுக்கு அது போதுமானதாக இல்லை.கல்வெட்டுகளே மன்னர்களின் வரலாறுகளைத் தீர்மானிக்கின்றன. அவைகள் கூறுவதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு மன்னருடைய காலத்தையும் பொருத்திப் பார்த்து அறிய முடிகிறது. உதாரணத்திற்கு, ராஜராஜனைப் பற்றிய கல்வெட்டுகளை எப்படி அறிந்துகொள்கிறார்கள்?
"திருமகள் போல " எனத் தொடங்கும் அனைத்துக் கல்வெட்டுகளும் ராஜராஜனின் புகழ்பாடும் கல்வெட்டுகளே!
அவரது மகன் ராஜேந்திர சோழனது கல்வெட்டுகள் "திருவன்னி வளர" எனத் தொடங்கும்.
சரி! மன்னர்களெல்லாம் ஓ.கே. நம்மைப் பற்றிய தகவல்களையெல்லாம் வருங்கால வாலிப சமுதாயம் அறிந்துகொள்வது எப்படி?
அதற்குதான் முதலிலேயே சொன்னேன்.என் வீட்டிற்குப் பக்கத்திலுள்ள கல்லில் நான் கிறுக்கு(!?)வது.
***********************************
பாக்களில் ரதி நிறைத்த பாரதியோ சிறுவயதிலேயே பாவியற்றும் புலமையினால் பாரதி(கலைவாணி) என்ற பட்டம் பெற்றிருந்தான்
ஒருமுறை பாரதியின் பாப் புலமையை (ராக்.. இல்லங்க தமிழ்ப்பாட்டு!) சோதிக்க விரும்பிய சற்றே பொறாமையும் கொண்ட காந்திமதிநாதன் என்பார் பாரதி சின்னப்பயல் என இறுதியடி வருமாறு பாடக் கூறினார். எந்தத் தயக்கமுமின்றி பாரதி பாட்டிசைத்தான்.
கார்அது போல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப்
பார்அதி சின்னப் பயல்
ஆப்பைக் கேட்டு அதில் அமர்ந்துகொண்டார் காந்திமதி! :)
சரிங்க! உங்களுக்கு அது தெரிஞ்சதுதானா?இன்னொரு தடவை படிக்கிறது நல்லதுதானே!
தமிழையும் சிறிது ஆங்கிலத்தையும் மட்டும் கலந்து பேசிவிட்டுத் தமிழ்மொழி இனிது ! இனிது!
என்றெல்லாம் நாம் சொல்வதில் பெருமையில்லை. பதினாறு மொழிகளைக் கற்றுத்தேர்ந்து அதில் பாவியற்றும் அளவிற்குப் புலமையுடன் விளங்கிய பாரதி சொன்னானே!
"தமிழ்மொழி அமிழ்தினும் இனியதென்று !"
அதுதான் சிறப்பு!
(எந்தக் கடை(கை)யில் அமிழ்தம் கிடைக்கும் என்று யாராவது சொன்னால், அதற்கு உபகாரமாக அவர்களுக்கும் இரண்டு துளி அமுதம் பகிர்ந்தளிக்கப்படும்.)
***********************************
காந்திஜியின் பையன் பேரு "தினேஷன்"
எப்படினு கேக்கறீங்களா?
அவர்தானே " ஃபாதர் ஆஃப் தி நேஷன்!"
(காந்தியவாதிகள் கோபிக்கக் கூடாது.தேசமே அவரது குழந்தைதான் என்றே இதை எடுத்துக் கொள்ளலாம்!)
***********************************
அடுத்த பதிவு என்னன்னா?அடுத்த பதிவுல தானே தெரியும்-ந்னு சொன்னா அவ்வளவு நல்லாயிருக்குதுல்ல! :) அதிரடி ரிலீஸ்!
பதிவன் என்பவன் யார்?
***********************************
அடுத்த பதிவு என்னன்னா???
இடுகையிட்டது
அண்ணாமலை..!!
at
செவ்வாய், 7 செப்டம்பர், 2010
9 கருத்துகள்:
பதிவன் என்பவன் யார்?
//
யாருங்க...
//யாருங்க... ?//
அடுத்த பதிவுல பாருங்க!
:)
ம்... இதுவும் நல்லா இருக்கு.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
அடுத்த பதிவு என்னன்னா?அடுத்த பதிவுல தானே தெரியும்-ந்னு சொன்னா அவ்வளவு நல்லாயிருக்குதுல்ல! :) அதிரடி ரிலீஸ்!
பதிவன் என்பவன் யார்?
.......ஹா,ஹா,ஹா...... சஸ்பென்சு தாங்கல.........
மோனே தினேஷா உமக்கு ரொம்ப குசும்பு..
இந்தப் பதிவு வித்தியாசமா இருந்தது
நண்பரே.ரசித்தேன். "பதிவன்"னா யாரு? என்னங்க
இப்படி தொங்கல்ல விட்டுட்டீங்க?.. சரி.. நாளைக்கு சொல்லிடுவீங்க தானே?
@ RVS
ரொம்ப நன்றிங்க!
@ Chitra,
ஓவரா பில்டப் குடுத்துட்டனா? :)
@ ருத்ர வீணை®,
எல்லாம் தங்களிடம் கற்ற வித்தை மன்னா!
@ மோகன்ஜி,
ரொம்ப நன்றிங்க நண்பரே!
நாளைக்குப் பதிஞ்சிருவேன்!
வித்தியாசமான பதிவு நல்லா இருக்கு நண்பரே...
//எந்தக் கடை(கை)யில் அமிழ்தம் கிடைக்கும் என்று யாராவது சொன்னால், அதற்கு உபகாரமாக அவர்களுக்கும் இரண்டு துளி அமுதம் பகிர்ந்தளிக்கப்படும்.//
தெரிஞ்சா நாங்க முதலில் வாங்கி, உங்களுக்கும் இரண்டு துளி தரோம்...
உங்களுக்கு கிடைச்சா எங்களுக்கு கொடுங்க.. சரியா?
"நஞ்சே ஆனாலும் தனித்து உண்ணார் தமிழர்!!"
:)
கருத்துரையிடுக