புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

கொஞ்ச(ம்) நீ என்னருகில் வாயேன்!!!!சாம்பாருடன் கொஞ்சம் சோறு
சடுதியாட நிறை சேறு!
பாம்பாட்டி போலொரு ஆட்டம்!
பம்பரம் போல்சுழல் ஓட்டம்!
வீம்பாகத் தலைசாய்ப்பு, கோபம்
விளையாட்டாய்க் கொஞ்சலொடு சிணுங்கல்
தாம்பாலத் தட்டினிலே இனிப்பு
தகிக்காத வெயிலினிலே களிப்பு!

கள்ளமில்லா சிறார் வேணும்!
காலத்துக்கும் விளையாட வேணும்!
பள்ளமில்லா வாழ்க்கையும் வேணும்!
பயமின்றிப் பாடியாட வேணும்!
உள்ளத்தில் உருவாகும் நினைப்பு!
உயர்வாகி நலம்பெறவே வேணும்!
பள்ளிக்கு மீண்டும்நான் போயே
பாடமிரண்டு படித்திடவும் வேணும்!

குருவிபோல் வானத்தின் மீதே
குழந்தைநான் பறந்திடவும் வேணும்!
தெருவிலே நண்பனொடு அலைந்து
தேடிபழம் அடித்திடவும் வேணும்!
நல்லபிள்ளை யாயிருப்பேன் - அம்மா!
நலமாகச் சொல்கேட்பேன் - அம்மா!
கொஞ்சம்நீ என்னருகில் வாயேன்-மீண்டும்
குழந்தையாய் மாற்றிவிடு தாயே!

23 கருத்துகள்:

Chitra 8 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 11:11  

அருமையாக எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்!

அண்ணாமலை..!! 8 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 11:18  

நீங்க சொன்னா சரிதான்!
ரொம்ப நன்றிங்கோவ்!
:)

தோழி 8 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 12:27  

நல்லா எழுதீருக்கீங்க... அருமை...

அண்ணாமலை..!! 8 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 1:19  

ரொம்ப நன்றிங்க தோழி!

பிரசன்னா 8 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 4:59  

ஆஹா..அருமை :)

பிரசன்னா 8 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 5:00  

திரட்டிகளில் இணைக்கவில்லையா..

ரிஷபன் 8 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 5:57  

கவிதை வாசிக்கும்போதே இனிக்கிறது.. அழகு தமிழால்..

அண்ணாமலை..!! 8 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 7:08  

@பிரசன்னா

நன்றிங்க பிரசன்னா!
இனிமேல் தான் இணைக்க வேண்டும்!


@ரிஷபன்

மகிழ்ச்சிங்க ரிஷபன்!

ஹேமா 9 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 4:13  

அத்தனை ஏக்கங்களையும் கொட்டி
வைத்திருக்கிறது கவிதை !

அண்ணாமலை..!! 10 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 10:37  

அது ஒரு நிலாக்காலமுங்க!

சி. கருணாகரசு 11 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 7:45  

படமும்.... படைப்பும் அசத்தல்!

அண்ணாமலை..!! 12 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 11:32  

ரொம்ப நன்றிங்க நண்பரே!

Ananthi 12 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 10:42  

அருமையா இருக்கு.. :)

மீண்டும் குழந்தையாய் மாறி பள்ளிக்கு செல்ல ஆசை தான்.. :D :D

அண்ணாமலை..!! 13 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 11:02  

ஆச..தோச..! :)

ரொம்ப நன்றிங்க!

K.B.JANARTHANAN 15 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 10:20  

இயல்பான, மனம் வருடும் கவிதை!

vasan 15 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 3:31  

//கொஞ்சம்நீ என்னருகில் வாயேன்-மீண்டும்
குழந்தையாய் மாற்றிவிடு தாயே! //

SUPER TOUCH

அண்ணாமலை..!! 15 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 8:54  

@ K.B.JANARTHANAN

ரொம்பவும் நன்றிங்க!

@ vasan

உங்களுக்குப் புடிச்சிருந்தா ஓ.கே தான்

தஞ்சை.வாசன் 17 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 3:28  

கெஞ்சலாய்... அழகாக...

அண்ணாமலை..!! 17 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 10:50  

@ தஞ்சை.வாசன்

அன்பு வாசன்,
இனி அதெல்லாம் நடக்காதுன்னு தெரிஞ்சு போச்சு!
எல்லாம் ஒரு ஏக்கப் பயபுள்ள தான்!

பாலன் 18 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 5:26  

அழகிய நடையில் அருமைக் கவிதை அண்ணா! அன்றையகாலத்தினை நினைத்து ஏங்க வைத்த சுவைமிகு கவிதைக்கு நன்றிகள்.

அண்ணாமலை..!! 19 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 10:38  

மிக்க நன்றிகள் நண்பரே!

வைகறை நிலா 28 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 1:11  

//வீம்பாகத் தலைசாய்ப்பு, கோபம்
விளையாட்டாய்க் கொஞ்சலொடு சிணுங்கல்
தாம்பாலத் தட்டினிலே இனிப்பு
தகிக்காத வெயிலினிலே களிப்பு!//
அழகான வரிகள்..
மனதைத் தொடும் இனிய கவிதை..

அவரவர் வாழ்க்கையில்
ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்..
அந்த நினைவுகள் நெஞ்சினில்
திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்..
அது ஒரு அழகிய நிலாக்காலம்.. உண்மை..

அண்ணாமலை..!! 5 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 10:52  

ஆமாங்க..திரும்பக்கிடைக்காத காலங்கள்!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!