புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

உறை(ரை)ப்புகள்!

*
காவிரிநீர்..
கரைபுரண்டு..
கர்நாடகாவிலிருந்து..
ச்சே!
காலையிலேயே
கனவு!

**************

"சிந்திக்காமல்
சில நேரம் இரு"

என்றேன் மனதை!

நிந்திக்கிறது
அறிவு!

***************

ங்குள்ளது உயிர்?

கழுத்தில்..?
இருதயத்தில்..?
மூளையில்..?

என் காலில் முள்குத்த
அலறுகிறாள்
தாய்..

இப்போது சொல்லுங்கள்!

****************

சிறப்பு!

ர்ச்சனைத் தட்டில்
ஆயிரத்தை விட..
அனாதை இல்லத்தில்
அரைப்பணம் இடுவது!

****************

செத்துமடிந்த மரம்
சொல்கிறது சேதி!
நான் மீண்டும் வருவேன்!

அதோ...!

காற்றில் பறக்கிறது..
ஒற்றை விதை!

****************

வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம்
வாடினேன்!
"ப்ச்"
இந்தக் கீரையை
நாளை யார் வாங்குவார்கள்?

****************

மூன்றாவது முறையாக
சில்லறை கேட்கப் போனேன்!
கடைக்காரர்
வசைபாடி விரட்டினார்.
பிச்சைக்காரனை!
பெரிய வித்தியாசமில்லை!

****************

துகளைக் கவிதைன்னும் சொல்லலாம்.
சிலசமயங்கள்ள கழுத்தறுப்புன்னும் சொல்லலாம்.
ஆனாலும்,
அவ்ளோதான்!
:)

16 கருத்துகள்:

Chitra 13 செப்டம்பர், 2010 அன்று PM 6:49  

செத்துமடிந்த மரம்
சொல்கிறது சேதி!
நான் மீண்டும் வருவேன்!

அதோ...!

காற்றில் பறக்கிறது..
ஒற்றை விதை!



......கருத்து செறிந்த கவிதை....

RVS 13 செப்டம்பர், 2010 அன்று PM 10:42  

நல்லா இருக்கு அண்ணாமலை...வாழ்த்துக்கள்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஹேமா 13 செப்டம்பர், 2010 அன்று PM 11:49  

ஏதாவது ஒன்றை இரண்டைப் பொறுக்கி நல்லாயிருக்கென்று சொல்லலாம் என்றால் முடியாது அண்ணாமலை.எல்லாமே அற்புதம் !

Unknown 14 செப்டம்பர், 2010 அன்று AM 8:45  

Easy 1...2...3. Read and write your own article. A new collabrative dimension - www.jeejix.com

ருத்ர வீணை® 14 செப்டம்பர், 2010 அன்று AM 9:36  

//செத்துமடிந்த மரம்
சொல்கிறது சேதி!
நான் மீண்டும் வருவேன்!

அதோ...!

காற்றில் பறக்கிறது..
ஒற்றை விதை!//

காற்றில் பறக்கிறதுனு சொல்லறதுக்கு பதிலா
மண்ணில் புதைகிறதுனு சொல்லலாம்.. சும்மா தோனுச்சு..!!

அருமையான கவிதைகள்..

ஜெயந்த் கிருஷ்ணா 14 செப்டம்பர், 2010 அன்று PM 2:12  

தங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்...

http://verumpaye.blogspot.com/2010/09/blog-post.html

தோழி 14 செப்டம்பர், 2010 அன்று PM 2:35  

உங்கள் கவிதைகளில் எப்போதும் ஒரு தனித்தன்மை உள்ளது .. வாழ்த்துக்கள்..

அண்ணாமலை..!! 14 செப்டம்பர், 2010 அன்று PM 6:15  

@ Chitra,

தங்களது கருத்தான பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல!


@ RVS,

நீங்க சொன்னா சரிதான்!
ரொம்பவே நன்றிங்க!!!!


@ ஹேமா,

அப்புடியா சொல்லுறீங்க! அப்ப நல்லாதானிருக்கும்!


@ sweatha,

உங்கள் முயற்சிக்கு நன்றிகள்!

அண்ணாமலை..!! 14 செப்டம்பர், 2010 அன்று PM 6:34  

@ ருத்ர வீணை®,

நீங்க சொல்றதும் அழகாத்தாங்க இருக்குது!
ஆனா, தன்னம்பிக்கை மாதிரி சொல்லுறப்ப
"புதைகிறது"-ந்னு சொல்றது ஒரு மாதிரியா இருக்கும்"-ங்கிறது எனக்கு சும்மா தோணுச்சு!:)
"புதைக்கப்படவில்லை - விதைக்கப்படுகிறார்கள்!"
என்றெல்லாம் பலரும் கருத்து சொல்வதால் இதுவும் அழகே!
(என்னாது..?? இதுக்கு பதிவே பரவால்லையா..?!)


@ வெறும்பய,

சிறுத்த சிக்கிருச்சு!
எனக்கும் அந்த ஆவல் இருக்கு நண்பரே!
கூடிய சீக்கிரம் நேரமும்,தகவல்களும் பொருந்துறப்ப எழுதிர வேண்டியதுதான்!

@ Dharshi,

வாழ்த்துக்கு நன்றிங்க!
(எனக்குத் தாங்க உங்க ப்ரொஃபைல் பாக்க தைரியமில்ல!)
:)

Unknown 14 செப்டம்பர், 2010 அன்று PM 7:13  

வாடிய பயிர் கவிதை நன்றாக இருக்கு....
அர்ச்சனை தட்டு கவிதை இன்றைய சமூக நிலையை காட்டுகிறது...
அற்புதமான கவிதைகள்.

ராஜவம்சம் 14 செப்டம்பர், 2010 அன்று PM 7:44  

வாழ்த்துக்கள் நண்பரே
கவிதை அனைத்தும் நலம்.

Priya 14 செப்டம்பர், 2010 அன்று PM 8:33  

அருமையான கவிதைகள்!!!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) 15 செப்டம்பர், 2010 அன்று AM 12:48  

///காவிரிநீர்..
கரைபுரண்டு..
கர்நாடகாவிலிருந்து..
ச்சே!
காலையிலேயே
கனவு!

///

எப்படிங்க இப்படி.. நல்ல கனவு தான் போங்க.. :D

Unknown 15 செப்டம்பர், 2010 அன்று PM 5:29  

காவிரிநீர்..
கரைபுரண்டு..
கர்நாடகாவிலிருந்து..
ச்சே!
காலையிலேயே
கனவு!//

ஹஹ்ஹா மிக அருமை அருமை!!

அண்ணாமலை..!! 15 செப்டம்பர், 2010 அன்று PM 7:51  

@ வெண் புரவி,

@ ராஜவம்சம்,

@ Priya,

@ Ananthi,

@ மைந்தன் சிவா,

அனைவருக்கும் மிக நன்றிகள்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) 16 அக்டோபர், 2010 அன்று AM 4:35  

எல்லா உரைப்புகளும் அருமையாய்...

//வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம்
வாடினேன்!
"ப்ச்"
இந்தக் கீரையை
நாளை யார் வாங்குவார்கள்?//

மிகவும் அருமை...

நானும் வாடிக்கொண்டு உங்கள் பாதம் எந்தன் பக்கம் நீண்டகாலமாக படாமல்...

பதிவுகள் இட்டும் நாட்கள் ஆகிவிட்டன... நலமுடன் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டி நான்....

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!