புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

மன்னாதிமன்னன் - தொடர்பதிவின் தொடக்கம்!

*


*
அனைவருக்கும் வணக்கம்!
_____/\_____

ன்னுடைய ஆதர்ச நாயகனும், தமிழகத்துத் தலைசிறந்த அரசனுமாகிய மாமன்னன் ராஜராஜ சோழனின்(என்ன பேருப்பா..உன் பேரு!) வரலாற்றை வானம் தொடத்துடிக்கும் (முடியாதெனத் தெரிந்தும்!)சிட்டுக்குருவியின் ஆவலுடன் எழுதத் தொடங்குகிறேன். முடிந்த வரையில் ஏமாற்றாமல் எழுதவும் முயல்வேன்.
கை வசம் இப்பொது ராஜராஜனைப் பற்றி இருக்கும் தகவல்கள் குறைவே என்றாலும், இதைவிட அவனைப் பற்றி எழுதுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு அமைந்துவிட முடியாது.
படித்த காலங்களில் பிடித்த பாடம் வரலாறு.அதனைப் பரீட்சைக்கு என்று படித்ததேயில்லை..ஒரு கதைப்புத்தகம் போலவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்ததால் அதற்கு அவசியம் நேரவில்லை.

நண்பர் வெறும்பய அழைத்த போது விக்கித்தாலும் என்றோ ஒருநாள் எழுதவேண்டும் என நினைத்ததுதானே..!ஒருவேளை அந்த நாள் வராமலே போய்விட்டால் என்ற நினைப்பால்..வந்த மலைப்பால்.. இதோ இப்போதே தொடங்கி விடுகிறேன்.இதன் நீள அகலங்கள் தாங்கள் வழங்கும் ஆதரவைப் பொறுத்தது.
குறைவான தகவல்களுடன் இருந்தாலும் சுயம் தொலைந்துவிடாமல் கற்பனைகளை ஏற்றிவிடவேண்டியதுதான்.
ஏதேனும் பிழைகளிருப்பின் பொறுத்தருள்வதுடன் சுட்டிக்காட்ட நானும் தெரிந்துகொள்வேன்.
கற்றது கடு-களவு :)

அடுத்த பதிவிலிருந்து மன்னாதி மன்னனாக வலம்வருவான் -
****மாமன்னன் ராஜராஜசோழன்!****

நன்றிகள்!

9 கருத்துகள்:

Chitra 15 செப்டம்பர், 2010 அன்று PM 7:35  

அறிமுக இடுகையே களை கட்டிருச்சு!

வினோ 15 செப்டம்பர், 2010 அன்று PM 9:22  

நல்லது நண்பரே.. நீங்க தொடங்கியாச்சா.. நானும் பூஜா போடுறேன்..

http://nilavinmadiyil.blogspot.com

ஹேமா 15 செப்டம்பர், 2010 அன்று PM 10:03  

ம்...தொடரட்டும்.காத்திருக்கிறோம்.

மோகன்ஜி 15 செப்டம்பர், 2010 அன்று PM 11:06  

ராஜராஜன் பற்றி பதிவா? மிக்க மகிழ்ச்சி நண்பரே!பெரிய வேலை தான். ஆராய்ந்து எழுதுங்கள்.உங்கள் பதிவு தஞ்சைக் கோபுரம் போல உயர்ந்து போற்றப் பட வாழ்த்துக்கள்.ஆவலுடன்
மோகன்ஜி, ஹைதராபாத்

அன்பரசன் 15 செப்டம்பர், 2010 அன்று PM 11:18  

காத்திருக்கிறோம்..

Starjan (ஸ்டார்ஜன்) 16 செப்டம்பர், 2010 அன்று AM 12:30  

மன்னா.. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.. நாட்டுமக்கள் எல்லோரும் உங்களை காண ஆவலோடு இருக்கிறார்கள்..

ஜெயந்த் கிருஷ்ணா 16 செப்டம்பர், 2010 அன்று AM 8:55  

நன்று... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது...தொடக்கப் பதிவே அலங்காரமாக தோரணைகள் கட்டியது போன்று இருக்கிறது...

முதலில் தொடக்கி வைத்த மணானாதி மன்னனாகிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...

அண்ணாமலை..!! 16 செப்டம்பர், 2010 அன்று PM 9:56  

அனைவருக்கும் மிக நன்றிகள்!
_____/\_____


@ வினோ
தங்கள் பயணத்திற்கு வாழ்த்துகள் நண்பரே!

Unknown 24 செப்டம்பர், 2010 அன்று AM 6:22  

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மன்னா

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!