அப்படியா..??
அவ்வளவு குளிரிலும்
வியர்க்கிறது....
குளிர்சாதனப் பெட்டியிலுள்ள
பழங்களுக்கு..!!
***************************************
தேடல்!
இருட்டினில்
தேடிக்கொண்டேயிருக்கிறோம்..
..
..
வெளிச்சத்தை..!!
***************************************
ஆறுதல்!
தலைவலியா..??
காய்ச்சலா..??
ஜலதோஷமா..??
ஆறுதலாக விசாரிக்கிறார்களே..
இவர்களாவது..
தொலைக்காட்சியில் விளம்பரம்..!!??
***************************************
உதவி!
உதவி அலுவலர்க்கு
உதவிய பின்னரே..
கிடைக்கிறது..
..
உதவித்தொகை..!
*******************
சின்னச் சின்ன சிந்தனைகள்..!
லேபிள்கள்: சில (க)விதைகள்





